வரம்பு மீறி என்னைப் புகழாதீர்கள்
#வரம்பு_மீறி_என்னை
#புகழாதீர்கள்.
நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்.
لا تطروني كما أطرت النصاري ابن مريم فإنما انا عبده فقولوا عبد الله ورسوله.
"மர்யமுடைய மகனாரை
(நபி ஈஸா அலை அவர்கள்) கிறித்தவர்கள் அளவு கடந்து புகழுவதைப்போல என்னைப் புகழாதீர்கள்.நான் அல்லாஹ்வுடைய அடியார். அப்துல்லாஹ், ரஸூலுல்லாஹ் என்று (என்னைச்) சொல்லுங்கள்"
( புகாரி, அஹ்மத்)
கிறிஸ்தவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களைப் புகழ்வதற்கும்,
முஸ்லிம் பெருமக்கள் அண்ணல் நபி (ﷺ) அவர்களைப் புகழ்வதற்கும் மத்தியில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமுண்டு.
பெருவியாதிகளை குணப்படுத்தியதையும்,
களிமண்ணால் செய்த உருவங்களுக்கு உயிரூட்டியதையும், இன்னபிற அற்புதச் செயல்களையும் பார்த்து பிரமித்துப் போன கிறித்தவர்கள் தகுதிக்கும் மேலான அந்தஸ்தைத் நபி ஈஸா அலை அவர்களுக்கு தந்து அவர்களை இறைவனாக்கி விட்டனர்.
இறைவனாக வழிபடுகின்றனர்.
எனவேதான் "கிறிஸ்தவர்கள் நபி ஈஸா அலை அவர்களை இறைவனாக்கி விட்டதைப் போல என்னையும் ஆக்கி விடாதீர்கள்" என்றார்கள் எம்பெருமானார் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள்.
அண்ணல் நபியுல்லாஹ் (ﷺ) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள மிக உயர் பதவிகளை_ இம்மையிலும், மறுமையிலும் வழங்கியுள்ள அந்தஸ்த்துகளின்
அடிப்படையில் முஸ்லிம்கள்
அவர்களை புகழ்கின்றனர், போற்றுகின்றனர்,
காவியங்கள் படைத்து புகழாரம் சூட்டுகின்றனர்.
இதில் என்ன தவறை கண்டு பிடித்து விட்டார்கள் வஹாபிகள்.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.