மீலாத் மவ்லித் வினா விடை பாகம்.. 1
மீலாத் மவ்லித்

மீலாத் மவ்லித் வினா விடை பாகம்.. 1

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#மீலாது_மவ்லித்
#வினா_விடை.
#பாகம்=1.

1 : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே எப்போது பிறந்தார்கள்?

கி.பி.570 ஏப்ரல் மாதம் 20_ம் தேதி ரபீஉல் அவ்வல் பிறை 12.திங்கட்கிழமை மக்காவில் பிறந்தார்கள்.

2 : மவ்லித் என்ற சொல்லின்
அர்த்தம் என்ன?

பிறந்த இடம், பிறந்த காலம்.

3 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய பிறந்த தினத்தில் மகிழ்ச்சி கொண்டு அபூலஹப் விடுதலை செய்த அடிமை பெண்ணின் பெயர் என்ன?

சுவைபத்துல்
அஸ்லமிய்யா
(ரலியல்லாஹு அன்ஹு)
அவர்கள்.

4 : அடிமை பெண்ணை விடுதலை செய்ததின் மூலம் அபூலஹபிற்கு
என்ன கிடைத்தது?

நரகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும்
விரல்களிலிருந்து நீர் புகட்டப்படும்.

5 :நபிகளாரிடத்தில் திங்கட்கிழமை நோன்பு பிடிப்பதைப்பற்றி கேட்ட போது அவர்கள் என்ன பதில் கூறினார்கள்.?

இந்த நாளில் நான் பிறந்தேன்.
இந்த நாளில் தான் எனக்கு
குர்ஆன் அருளப்பட்டது.

6 : வாழ்நாளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எத்தனை தடவை அக்கீகா கொடுக்கப்பட்டது?

இரண்டு முறை.....

7 : இரண்டாம் தடவை அக்கீகா
அறுத்து கொடுத்தது யார்?

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை தனக்காக கொடுத்தார்கள்...

8 : இது எதற்காக கொடுக்கப்பட்டது?

வல்லோன் அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட் கொடையாக நபியவர்களை அனுப்பியதற்காக நன்றி செலுத்தும் விதம் அக்கீகா அறுத்து கொடுத்தார்கள்.

9 : வாழ்நாளில் எத்தனை தடவை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெஞ்சு கீறப்பட்டது?

மூன்று முறைமுறை......

10 : நாயகம் ஸல் அவர்களின்
திரு ரவ்ளா ஷரீஃபிற்கு முன்னால் மாபெரும் தவச்சீலர் ஷெய்க் ரிஃபாயி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை புகழ்ந்து பாடிய நேரத்தில் நிகழ்ந்த அற்புதம் என்ன?

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமான கரம் வெளியே வந்து அதனை அவர்கள் முத்தமிட்டார்கள்.

11 : தமிழகத்தில் முதன் முதலாக சுப்ஹான மவ்லிதை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

ஹஜ்ரத் தேங்கை ஷறபுத்தீன் ஆலிம்.

12 : " உமரே அவரை தடுக்காதீர்கள்" இப்பாடல்கள் மக்காவிலுள்ள குறைஷிகளிடத்தில் அம்புகளைவிட வேகமானது என எந்த நபித்தோழரின் விஷயத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
இவ்வாறு சொன்னார்கள்?

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்*...

13 : கஸீதத்துல் வித்ரிய்யாவின்
ஆசிரியர் யார்?

முஹம்மது இப்னு அபீபக்ருல்
பக்தாதி (ரஹ்மத்துல்லாஹி)

14 : கஸீதத்து நுங்மானிய்யாவின் ஆசிரியர் யார்?

இமாம் அபூ ஹனீபா (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள்

15 : கஸீதத்து பானத் ஸுஆதாவின் ஆசிரியர் யார்?

கஃபு இப்னு ஸுஹைர்
(ரழியல்லாஹு அன்ஹு)
அவர்கள்....

16 : நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா விற்கு ஹிஜ்ரா வந்த வேளையில் மதீனா வாசிகள் எந்த பாட்டு பாடி நபியை வரவேற்றார்கள்?

طلع البدر علينا من ثنيات الوداع

وجب الشكر علينا ما دعا لله داع

17 : அறுபது வருடம் ஏகத்துவ
கொள்கை மறுப்பிலும் அறுபது
வருடம் இஸ்லாமிலும் வாழ்ந்த நபித்தோழர் யார்?

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

18 : உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற நூறு நபர்களை தேர்ந்தெடுத்த #மைக்கேல் H.#ஹார்ட் முதன் முதலில் யாரை தேர்ந்தெடுத்துள்ளார்?

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

19 :#அல்லாஹும்ம_அய்யிதிஹு_பி #ரூஹுல்_குத்ஸ் என்று நபிகளார்
எந்த கவிஞருக்காக துஆ செய்தார்கள்?

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்...

20 : #மஸ்ஜித்ந்நபவிய்யில்
தன்னே புகழ்ந்து பாடுவதற்காக எந்த நபித்தோழருக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி) அவர்கள் மிம்பர் படி அமைத்து கொடுத்தார்கள்?

ஹஸ்ஸான் இப்னு ஸாபித்.

21 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த வேளையில் உலகில் நிகழ்ந்த அற்புத சம்பவங்களிலிருந்து சிலவற்றை கூறுக?

கிஸ்றா அரசனின் மாளிகை விறைத்தது, விக்கிரகங்கள் தலைகீழாக விழுந்தது,
ஸாவா நீர் நிலை வற்றியது போன்ற ஏராளமான அற்புதங்கள் நிகழ்ந்தது.

22 : மவ்லிதைப்பற்றி நான்கு கலீஃபாக்கள் புகழ்ந்து பேசிய தகவல் எந்த கிதாபில் வருகிறது?

النعمة الكبري علي العالم في مولد سيد ولد ادم
للامام ابن حجر الهيتمي

23 : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த இரவு #லைலத்துல்_கத்ர் இரவைவிட சிறந்தது என்று சொன்ன மார்க்க அறிஞர் யார்?

الامام القسطلاني رحمه الله

24 : பிரபல நபித்தோழர் #கஃபு_இப்னு #ஸுஹைர் (ரலியல்லாஹு) நபிகளாரை புகழ்ந்து பாடிய காவியத்தின் பெயர் என்ன?
بانت سعاد

25 : கேரள மக்கள் பரவலாக ஓதுகின்ற புகழ் பெற்ற நபி புகழ் காவியம் #ஷரஃபுல் #அனாம் மவ்லிதை இயற்றியது யார்?

الامام احمد المالكي الحريري

................#ஆக்கம்.
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.

#இயக்குனர்.
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ்.
#திருவிதாங்கோடு