ஒரே மரத்தால் கட்டப்பட்ட இறையில்லம்
ஒரே மரத்தால் கட்டப்பட்ட இறையில்லம்
🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰🏰
கேரள மாநிலம் - மலப்புரம் மாவட்டத்தில் திரூர் என்னும் ஊருக்கு அருகே ஒரு நம்பூதிரியின் மகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்ப்பட்டது.
மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டதால்,
பொன்னானிக்கு வந்து
ஸைய்னுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் விஷயத்தைச் சொல்லுகிறார்கள்.
நம்பூதிரியின் மகளின் வயிற்றுவலி ஸைய்னுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓதிக்கொடுத்த தண்ணீரைக் குடித்த போது குணமானது.
மகிழ்ச்சியான நம்பூதிரி அவர்கள் ஸைய்னுத்தீன்
மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் என்று நிர்ப்பந்திக்கும் போது, நான்கு சுவர்களுக்கு உள்ளே நிற்கும் தேக்கு மரம் வேண்டுமென கேட்கிறார்கள்.
கட்டிடங்களுக்கு
சேதமில்லாமல் வெட்டி எடுத்து கொள்ள ஒப்புக்கொள்கிறார் நம்பூதிரி. மரம் வெட்டப்படும் இரவில் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டு ஸைனுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) இறைவனிடம் பிரார்த்தனையில் மூழ்குகிறார்கள்.
(ஸைய்னுத்தீன் மக்தூம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மன்கூஸ் மௌலிதின் கடைசி வசனங்களை ஓதி துஆ செய்ததாக அல்க இஹ்தாவுன்னுஸூஸ் அலா கிராஅத்தில் மன்கூஸ் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது)..
திடீரென ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்று
மரத்தை பறித்து பல மைல் தொலைவிலுள்ள கடலில் வீசியது,
பின்னர் அலைகள் அதை கரைக்கு
இழுத்துக் கொண்டு வந்தது.
பள்ளிவாசலின் மேற்குப் பகுதியில்
உள்ள இடம் இன்றும் மரக்கடவ் என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஒரு தேக்கு மரத்தைக் கொண்டு மசூதியை முழுவதுமாக கட்டியபிறகு மீதம் வந்த ஒரு அங்குல அகலமும், ஐந்து அங்குல தடிப்பும், நான்கு மீட்டர் நீளமும் கொண்ட ஒரு துண்டு மரம் சமீபகாலம் வரை
இரண்டாவது மாடியில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
குறைந்த உணவைக்கொண்டு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏராளமான பேருக்கு உணவளித்த முஃஜிஸத்தைப் போலவேஒரு சின்ன தேக்கு மரத்தைக் கொண்டு மசூதியை முழுவதுமாக தேக்கு மரத்தால் கட்டியது பொன்னானி ஸைனுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கராமத் என்று அறிஞர்கள் நம்புகிறார்கள்.
பள்ளிவாசல் நிர்மாண வேலைக்கு
வந்த தச்சரிடம் வேலை முடியும் வரை மேற்கைப் பார்க்க வேண்டாம் என்று ஸைனுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவுறுத்தியிருந்தார்கள்.
வேலை பூர்த்தியான
பின்னர்
ஸைனுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் அனுமதியுடன் மேற்கை பார்த்த போது
அங்கே கஃபா காட்சியளிப்பதை கவனித்தார்.
இந்த காட்சியை கண்ட
அந்த தச்சர்
பிறகு ஸைனுத்தீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தில் இணைந்தார்.
அன்று முதல் அந்த தச்சர்
ஆசாரி தங்கள் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்கள்.
அவர்களது கப்ர் பொன்னானியில் ஸைய்னுதீன் மக்தூம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின்
கப்ருக்கு அருகில் உள்ளது.
தகவல்
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி
குமரி மாவட்டம்