இதை உங்களால் நம்ப முடிகிறதா...?
இதை உங்களால் நம்ப முடிகிறதா.?
111_அஹ்லு பைத்துகளுக்கு (மாநபியின் குடும்பத்தார்) வீடு கட்டி கொடுத்த இளம் ஆலிம்..
ஆக்கம் :M.
சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இவர் அப்துல்_லத்தீஃப்_ஸகாஃபி கர்நாடகா.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காந்தபுரம் ஸலாமத் நகரில் பேஷ் இமாமாக பணியாற்றுகிறார்.
தொடர்ச்சியாக 1000க்கும் மேற்பட்ட_நாட்கள் "மதனியம்" என்ற பெயரில் ஆன்லைன் ஆன்மீக நிகழ்ச்சியை பூர்த்தி செய்து இன்னும் சிறப்பாக அழகிய முறையில் நடத்தி வருகின்றார்.
"மதனியம்" நிகழ்ச்சியின் முன்னேற்றம் உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது எவ்வளவு பெரிய கஷ்டம்..
நமது உடலும்,சூழ்நிலையும் சில நேரங்களில் ஒத்துழைப்பு தராமல் போகலாம்..
அல்லது ஏதேனும் பாதகமான விளைவுகள், முக்கிய அலுவல்கள் காரணமாக பெரும்பாலும் அந்நிகழ்வை ஒத்தி வைக்கப்பட வேண்டியிருக்கும்..
*ஆனால் இது இடைவெளியில்லாமல் 1000க்கும் மேற்பட்ட நாட்கள்... தொடர்ந்து நடைபெற்று வருகிறது.*
*இது அல்லாஹ் அவருக்கு செய்த மிகப்பெரிய தவ்ஃபீக் ஆகும்...*
அப்துல் லத்தீஃப் ஸகாஃபி உஸ்தாத் அவர்கள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது பேரன்பும், குத்வத்துல் ஆலம் ஷெய்க் C.M. வலியுல்லாஹ் மற்றும் மவ்லானா A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
இந்த மூவரும் தான் அவருக்கு பின்னாலுள்ள உந்து சக்தி.
A.P. உஸ்தாதின் ஒரு எளிய சீடராக இருப்பது எனது வாழ்வின் மிகப்பெரிய அருட்கொடை என்று அடிக்கடி சொல்லுவார்.
மதனியம் ஆன்லைன் நிகழ்ச்சி வரலாறாக மாறி_வருகிறது..
***_^^^_***_***_^^^^_****_***_****_***_**
ஆன்மீக நல்வாழ்வின் அழகான அனுபவமாக இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிற்க்கான மிகவும் சிறப்பான நேரங்கள் வேறு வகையான பொழுது போக்குகளின் மாயையில் மூழ்கியிருக்கும் சூழ்நிலைக்கு இவரது இந்நிகழ்வு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது...
பெரும் தொற்று (கொரோனா)காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதீவுகள் போல் தூரத்தில் அமர வேண்டிய கட்டாயமான ஒரு துயரச் சூழல் நமக்கெல்லாம் ஏற்பட்டது..
அப்படியிருந்தும் நாம் தூரத்தில் இல்லை மிக நெருக்கமாகவே இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் விதமாக ஆன்லைன் நிகழ்ச்சிகள் நமக்கு பெரும் ஆறுதலாகவும்,
மகிழ்ச்சியாகவும் அமைந்தது.
எல்லா பொது இடங்களையும் போல பள்ளிவாசல்கள், மதரசாக்கள், மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
பிறகு கல்வி, மற்றும் தொழில் அனைத்தும் ஆன்லைனின் மூலம் நெறிப்படுத்தப்பட்டன.
இதே போல் பயான்கள், துஆ மஜ்லிஸ்கள், மதரசா பாடங்கள் என அனைத்தும் ஆன்லைன் எனும் பிளாட்பார்முக்கு மாற்றப்பட்டது.
அதேவேளை அதி நவீன தொழில் நுட்பம் ஆன்மீக சந்திப்புகளுக்கும், அறிவு அனுபவங்களுக்கும் வழி வகுத்து தந்தது..
இந்த சந்தர்ப்பத்தில் தான் "மதனியம்" எனும் தலைப்பில் அப்துல் லத்தீஃப் ஸகாஃபி உஸ்தாத் ஒரு ஆன்லைன் இஸ்லாமிய நிகழ்ச்சியை துவங்கினார்.
அல்லாஹ்வின் பேரருளும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருட்பார்வையும்,
மடவூர் C.M.வலியுல்லாஹி அவர்களின் நல்லாசியும் கண்டிப்பாக இருக்கும் என்ற பூரண நம்பிக்கையில் துவங்கப்பட்டது இந்நிகழ்ச்சி..
இன்று கேரளா,
கர்நாடக, தமிழ்நாடு, வெளிநாடு வாழ் மலையாளிகள் என்று ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய நிகழ்வாக மாறியுள்ளது.
"மதனியம்" இன்று கோடிக்கணக்கான மக்களின் குடும்பமாக உருவெடுத்துள்ளது..
ஆன்மீக ஒளியைத் தேடிச் செல்லும் ஒரு அற்புதமான இஸ்லாமிய ஆன்லைன் நிகழ்ச்சியாக உருவெடுத்து இருக்கிறது..
இது மஃரிப் தொழுகைக்கு பிறகு ஆரம்பமாகிறது...
ஹத்தாத் ராத்தீப், மவ்லித், அஸ்மாஉல் ஹுஸ்னா, ஸலவாத், ஸலாம், பயான் போன்றவைகளை ஓதி முடித்த பின்னர் உஸ்தாத் அவர்களின் அபூர்வ துஆ மஜ்லிஸ் இடம்பெறும்...
அனைவருக்காகவும் உஸ்தாத் அவர்கள் துஆ செய்வார்கள்..
பயணங்கள் சென்றாலும், உம்ராவுக்கு சென்றாலும் இந்நிகழ்ச்சி நிறுத்தப்படுவது இல்லை..
உம்ரா போகும் வேளையில் மக்கா, மதீனாவில் வைத்து மதனியம் நிகழ்ச்சி நடத்தி அனைவருக்காகவும் துஆச் செய்வார்...
இவரது துஆவின் பலனாக இறையருளால் ஏராளமான நபர்களுக்கு பல்வேறு தேவைகள் நிறைவேறியுள்ளது...
நோய்கள் குணமாகியுள்ளது...
பலரது கண்ணீர் களுக்கும்,கவலை களுக்கும் ஆறுதல் கிடைத்துள்ளது...
இந்நிகழ்ச்சியில் தினமும் துஆ செய்ய சொல்லி பல்லாயிரக்கணக்கான குறுஞ்செய்தி அவருக்கு நிரந்தரமாக வந்து கொண்டிருப்பதாக சொல்லுவார்கள்...
இந்நிலையில் "#மதனியம்" 313_ வது நாள் நிகழ்ச்சி நெருங்கி வந்து கொண்டிருந்தது..
தன்னை வளர்த்தி வலுதாக்கிய கோழிக்கோடு மர்கஸ் ஸகாஃபத்திஸ் ஸுன்னிய்யா அரபிக் கல்லூரிக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்று நாடினார்...
அதற்காக தனது நிகழ்ச்சியை அன்றாடம் பார்க்கும் மக்களிடம் தனது கோரிக்கையை வைக்கிறார்..
அனாதைகள், ஏழைக் குழந்தைகள், ஏழைக் குடும்பங்கள் மற்றும் அறிவைத் தேடும் மாணவர்களுக்கு ஊன்றுகோலாகவும், உறுதுணையாகவும் இருப்பவர்கள் A.P.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்..
கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் முஸ்லிம்களை கல்வி, தொழில் போன்றவைகளில் கைப்பிடித்து முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு வந்த மாபெரும் அறிஞர்.
இப்படிப்பட்ட உஸ்தாதுக்கு நாம் தானே உதவிக்கரம் நீட்ட வேண்டும்..
நம்மை போல் இன்னும் ஏராளமான மக்கள் இந்த மகத்தான கல்லூரியில் கல்வி பயில வேண்டாமா..?
அவரது நிகழ்ச்சிப் பார்க்கும் அனைவரும் அவரது அழகான கோரிக்கையை நல்ல எண்ணத்தோடு ஏற்று நிறைவேற்றினார்கள்...
அவர் ஒரு கோடிதான் கொடுக்க நினைத்தார்..
ஆனால் அல்லாஹ் மிகப் பெரியவன் மூன்று கோடிக்கு மேல் பணம் வசூலானது...
"மதனியம்" குடும்பத்தால் மர்க்ஸுக்கு வழங்கப்பட்ட அன்பின் பரிசான 313_லட்சம் ரூபாயை..
மதனியம் 313_வது நாள் நிகழ்ச்சி மர்கஸ் ஸகாஃபாவில் வைத்து நடைபெற்றது..
அந்நேரம் 313_ லட்ச ரூபாவை A.P. அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களிடம் அப்துல் லத்தீஃப் ஸகாஃபி வழங்கினார்...
அதைப் போன்று மதனியம் *600_ வது தின* நிகழ்ச்சியை முன்னிட்டு அந்த வருடத்தில் உஸ்தாதுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தார்..
தனது மதனியம் நிகழ்ச்சியில் தனது ஆசையை, கோரிக்கையை முன்வைக்கிறார்..
அவரது நிகழ்ச்சியை தினம் தினம் காணும் மதனியம் ஆன்லைன் குடும்பத்தினர் அவரது அழகான கோரிக்கையை நல்ல மனதோடும், மன மகிழ்வுடனும் ஏற்றுக் கொண்டு அவரது ஆசையை பூர்த்தி செய்தார்கள்..
மாஷா அல்லாஹ்
நோன்பின் இறுதியில் உஸ்தாத் அவர்களிடம் *ஒரு கோடி ரூபாய்* பணத்தை ஒப்படைத்து விட்டார்...
அல்லாஹ் போதுமானவன்..
இன்றும் சிறப்பாக அவரது நிகழ்ச்சி நடைபெற்றக் கொண்டிருக்கிறது...
பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அவரது நிகழ்ச்சியை காண்கின்றனர்...
இந்நிலையில் தான் கேரளாவில் உள்ள *அஹ்லு பைத்துகளுக்கு* (மாநபியின் குடும்பத்தார்) வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை
அறிவிக்கிறார்கள்..
மாநபியின் குடும்பத்தார் களில் பலர் சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் ஏராளமான பேர் உண்டு...
அவர்கள் பிறரிடம் தங்களது கஷ்டங்களையோ, வேதனையோ சொல்ல மாட்டார்கள்..
அவர்களை கண்டறிந்து
தேவையான உதவி ஒத்தாசைகளை புரிவது
நமது கடமை...
நாயகத்தை உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒருவருக்கு மாநபியின் குடும்பத்தார்கள் கஷ்டப்படுவதை சகித்துக் கொள்ள முடியுமா...?
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா..?
அஹ்லு பைத்துகளை நாம் நேசிக்கவும், உதவி செய்யவும் செய்தால் வல்லோன் அல்லாஹ் எவ்வளவு மகத்தான நற்கூலியை நமக்கு வழங்குவான்...
அல்லாஹ்விடம் நமக்கு அது எவ்வளவு மதிப்பைப் பெற்றுத் தரும்...
முதற் கட்டமாக கேரளாவில் உள்ள 111 அஹ்லு பைத்துகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் கூறிய வேளையில் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்...
இந்த மகத்தான திட்டத்தை நினைத்து பூரிப்பு அடைந்தனர்..
இது எவ்வளவு பெரிய முயற்சி..
எவ்வளவு கடினமான வேலை..
எவ்வளவு பணங்கள் தேவைப்படும்..
இதற்கு எவ்வளவு இடங்கள் தேவைப்படும்...
சாதாரண கதியில் நாம் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எவ்வளவு
சிரமத்தை சந்திக்கிறோம்...
111_ வீடு
இது ஒரு சாதாரண காரியமா...
இப்படி எதைப் பற்றியும் *லத்தீஃப் ஸகாஃபி* அவர்கள் சிந்தித்து சிந்தித்து அலட்டிக் கொள்ளவில்லை...
அல்லாஹ்வின் மீது அபாரமான நம்பிக்கை
வைத்து களத்தில் இறங்குகிறார்...
அல்ஹம்துலில்லாஹ்...
அஹ்லு பைத்துகளை உயிருக்கு உயிராக நேசிக்கும் நபி நேசர்கள் வாரி வாரி வழங்கினார்கள்...
அள்ளி அள்ளி கொடுத்தார்கள்...
அவரது முயற்சிக்கு தோள் கொடுத்தனர்..
உறுதுணையாக நின்றனர்..
எல்லா விஷயங்களிலும் அவருக்கு அரணாக விளங்கினர்...
111_ வீடுகள் கட்டுவதற்கு தேவையான பணத்தை அல்லாஹ் அவருக்கு வழங்கி இந்த கடினமான
முயற்சியை லேசுப்படுத்திக் கொடுத்தான்.
111_ வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில்
இன்ஷா அல்லாஹ்
வருகிற ஞாயிற்றுக்கிழமை
மாலை நேரத்தில்
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மர்கஸ் ஸகாஃபத்துஸ் ஸுன்னியா அரபிக் கல்லூரியில் வைத்து
பிரமாண்டமான முறையில் நூற்றுக்கணக்கான ஸெய்யித்மார்கள், ஆயிரக்கணக்கான ஆலிம்கள், உமராக்கள்,
பிரமுகர்கள் முன்னிலையில் வீடுகளின் சாவி சமர்ப்பிக்கும் மகத்தான நிகழ்ச்சி நடைபெறுகிறது..
இன்ஷா அல்லாஹ்
கண்டிப்பாக நாமும் இந்த சங்கை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்று நபி நேசத்தை பெறுவோம்..
வல்லோன் அல்லாஹ் அப்துல் லத்தீஃப் உஸ்தாத் அவர்கள் செய்யும் சேவைகளை கபூல் செய்வானாக!!!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..