இரும்பு மோதிரம்
தனது மகன் ஆயிரம் திர்ஹம் கொடுத்து மோதிரம் வாங்கி அணிந்ததை கேள்விப்பட்ட
உடனேயே
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அப்துல் அஜீஸ் மகனுக்குக் கடிதம் எழுதினார்கள்.
நீ ஆயிரம் திர்ஹம் செலவழித்து
ஒரு மோதிரம் வாங்கிய செய்தி எம் காதுக்கு எட்டியுள்ளது.
அதை உடனே நீ விற்றுவிடு.
பிறகு விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஆயிரம் பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு உணவளி...
வேண்டுமென்றால் ஒரு திர்ஹமுக்குக் கிடைக்கும் இரும்பு மோதிரத்தை அணிவித்து கொள்.
அதில் இவ்விதம் பொறிக்க மறக்க வேண்டாம்.👇👇👇👇
தன் மதிப்பு இவ்வளவு தான் என்ற உண்மையை உணர்ந்தவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!"
جاء في تفسير القرطبي (٣٠٢/١٢) :
بلغ عمر بن عبد العزيز رحمه الله أن ولده اشترى خاتمًا بألف درهم !
فكتب إليه:
"إنه بلغني أنك اشتريتَ خاتمًا بألف درهم؛ فبِعهُ وأطعِم منه ألفَ جائع، واشترِ خاتمًا من حديد بدرهم، واكتب عليه:
"رحم الله امرءًا عرف قدر نفسه"
(منقول من صفحة الشيخ محمد علي يماني حفظه الله)
மிகப் பெரிய ஆட்சியாளராக இருந்தும் மகான் அவர்கள் தன் மகனை வழிநடத்தும் விதத்தை எண்ணிப் பாருங்கள்.
குழந்தைகளுக்கு ஏற்றவும் முந்தியவை,
மிகவும் விலையுயர்ந்தவை,
ஏற்றவும் லேட்டஸ்ட்டானவை
வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது ஒருவேளை குழந்தைகளை விட பெற்றோர்களாக இருக்கலாம்.
விளைவு என்ன?
எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னை மட்டும் ருசித்துப் பார்த்துப் பழகிய குழந்தைகள்,
அதில் குறைந்த ஒன்றோடும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகி விடுகிறார்கள்.
ஆடம்பரமில்லாத வாழ்க்கை அவர்களால் கற்பனை செய்ய முடியாததாகிவிடுகிறது.
ஒன்றாம் நம்பரிலிருந்து இரண்டாம் நம்பருக்கு இறங்குவது கூட அவர்களுக்கு தற்கொலையாகவே தோன்றுகிறது.
அதற்கு யார் பொறுப்பு?
யா அல்லாஹ்,
எங்களையும்,
எங்கள் குழந்தைகளையும்
அவர்களின் தாய்மார்களையும் இருப்பதையே கொண்டு திருப்திப்படுகிற நல்லவர்களில் ஆக்குவாயாக.
ஆமீன்.
தமிழில்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி