பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்
இஸ்லாமிய வரலாறு

பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இப்படிப்பட்ட_ஆட்சியாளர்கள்
இனி_கிடைப்பார்களா...?

நேற்று இரவு பழைய கெய்ரோவின் தெருக்களில் ஜைனப் மசூதிக்கு நடந்து செல்லும் போது இந்த அடையாள பலகை கண்ணில் தென்பட்டது..

மஸ்ஜித்_அஹ்மத்_பின்_தூலூன்.

இந்த பெயரை முன்பு எங்கேயோ படித்த ஞாபகம்.
நினைவுகள் மின்னியது..

ஆம்,
பண்டைய எகிப்தின் ஆட்சியாளராக விளங்கியவர் பின் தூலூன்
(ஹிஜ்ரி 254 )

ஒருமுறை தொழுதுவிட்டு
வீட்டை அடைந்த அவர்,
தன் வேலைக்காரனிடம் கொஞ்சம் பொற்காசு கொடுத்து அதை பள்ளிவாசல் இமாமிடம் கொடுக்கச் சொன்னார்.

வேலைக்காரர் அதனுடன் நேராக பள்ளிவாசலுக்கு சென்றார்.

இமாமின் அறைக்குச் சென்று பணத்தைக் கொடுத்தார்.

இமாமால் தன் கண்களையே
நம்ப முடியவில்லை.

தான் இப்போது பெரும் பொருளாதாரச் சிரமத்தில் இருப்பது
அரசருக்கு எப்படித் தெரிந்தது,..?
இதை அறிய பெரும் ஆவலும், எதிர்பார்ப்பும் அவரினுள் உருவெடுத்தது..

வேலைக்காரர் இப்னு தூலூனிடம் இதைப் பற்றிக் கேட்டார்.

தூலூன் பதிலளித்தார்:
இமாம் இன்று தொழுகையில் கிராஅத்தை தவறாக ஓதினார்.
சாதாரணமாக
இது வழக்கத்தில் இல்லை.
அவர் அவ்வாறு தவறாக ஓதுபவரும் இல்லை.

ஒருவேளை அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று யூகித்தேன்..அது தான் பணம் கொடுத்து விடக் காரணம் என்றார்

எவ்வளவு நல்ல
தொலைநோக்குப் பார்வையுள்ள,
கருணையுள்ள
ஆட்சியாளர்..!

இத்தகைய இனிய நினைவுகளின் பல எச்சங்கள் ஊமை நினைவுச் சின்னங்களாக உயர்ந்து நிற்கும் அரிய நகரங்களில் ஒன்றான கெய்ரோவின் ஒவ்வொரு மணலும் நமக்கு ஒரு கதையைச் சொல்கிறது.

குறிப்பு:
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்பு மகள் ஜைனபா பீவியின் தர்கா ஷெரீஃப் இருக்கும் பள்ளிவாசல் தான் படத்தில்
பிரகாசமாக ஒளிரும் மசூதி .
மேலும் இப்னு தூலூனின் புகழ்பெற்ற விரிவான பண்டைய புராதன மசூதியும் காணலாம்)

நண்பரின் எகிப்து கெய்ரோ பயண அனுபவங்களின் சில விஷயங்களை
முகநூல் நண்பர்கள் வாசிப்பதற்கு
தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளேன்..

அன்புடன்..
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி...