ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 11

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 11

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_11....

#ரமளானின்_அமல்களை_நேர்த்தியாகச் #செய்வோம்...

ஒரு முஃமின் வணக்க வழிபாடுகளில் எதைச் செய்தாலும் மிக நேர்த்தியாகவும், ஒழுங்குமுறைகளைப் பேணியும் செய்யவேண்டும். அந்த இபாதத்தே மிக அழகிய முறையில் அமைந்த இபாதத் ஆகும். அந்த இபாதத்தையே அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் விரும்புகின்றான்.

عن عائشة رضي الله تعالى عنها قالت

قال رسول الله صلى الله عليه وسلم

إن الله يحب إذا عمل أحدكم عملاً أن يتقنه " الصحيحة

“நிச்சயமாக! அல்லாஹ் உங்களில் ஒருவர் அமல் செய்தால் மிக நேர்த்தியாகவும், ஒழுங்கு முறைகளோடும் செய்யப்படுவதையே விரும்புகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: பைஹகீ )