ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 12

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 12

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_12....

அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பு கிடைக்கவில்லை என்றால்...?

عن أبي هريرة رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم صعد المنبر ، فقال : " آمين آمين آمين " . قيل : يا رسول الله ، إنك حين صعدت المنبر قلت : آمين آمين آمين . ، قال : " إن جبريل أتاني ، فقال : من أدرك شهر رمضان ولم يغفر له فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن أدرك أبويه أو أحدهما فلم يبرهما ، فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين . ومن ذكرت عنده فلم يصل عليك فمات فدخل النار فأبعده الله ، قل : آمين ، فقلت : آمين "
حسن صحيح
رواه ابن خزيمة و ابن حبان في صحيحه و ابي يعلى الموصلي في مسنده و الطبراني في المعجم الأوسط و البيهقي في الشعب.
صححه الالباني رحمه الله في صحيح الترغيب و الترهيب (997) و الله أعلم

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே” என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்தார். வந்தவர், “யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வில்லையோ அவர் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும்” எனக் கூறிவிட்டு, ”ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் முதல் முறை “ஆமீன்” கூறினேன்.

“யார் தன்னுடைய பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் அவர்களுக்கு நன்மை செய்யாமல் இறந்து விட்டாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் இரண்டாவது முறையாக “ஆமீன்” கூறினேன்.

மேலும், “யாரிடம் தங்களது பெயர் கூறப்பட்டும் தங்களின் மீது ஸலவாத் சொல்லாத நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ அவரும் நரகம் நுழைவார்; அல்லாஹ்வின் அருளை விட்டு அவரும் தூரமாகி விடட்டும்” எனக் கூறிவிட்டு, “ஆமீன்” கூறுங்கள் என்றார். எனவே, நான் மூன்றாவது முறையாக “ஆமீன்” கூறினேன்” என்று பதில் கூறினார்கள்.
( நூல்: இப்னு குஸைமா )