இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரி
#இமாம்_அபுல்_ஹஸன்_அல்_அஷ்அரி #ரலியல்லாஹு_அன்ஹு.
..................#பாகம் =2
இமாமவர்களின் வாழ்க்கை.
ஹிஜ்ரி 260 கிபி 873_ல் இமாம் பிறந்தார்கள். இமாமவர்கள் பிறந்த காலம் பல குழப்பவாத பித்அத்வாதிகளான கூட்டங்கள் மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்ப்படுத்தி பலப்பல குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய காலம்.
கவாரிஜத், முஃதஸிலத், ராஃபிளிய்யத், ஹஷவிய்யத் போன்ற பல குழப்பவாத இயக்கங்களுடைய தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இமாமவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்துடைய மகத்தான கொள்கையை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினார்கள்.
எதிரிகளை விரட்டியடித்தார்கள். இந்த இமாமை பின்பற்றுபவர்களுக்கு அஷ்அரியாக்கள் என்று சொல்லப்படும்.
இமாமுடைய மூதாதையர்களில் ஒருவர் உடலில் ரோமத்துடன் பிறந்ததால் அல் அஷ்அர் (ரோமமுடையவர்) என்று அழைக்கப்பட்டார்.இந்த பாட்டனாருடன் இணைத்து இமாமை அஷ்அரிய்யி என்று அழைக்கப்படுகிறது.
அஷ்அரி இமாம் புதிதாக ஒன்றையும் உருவாக்கி கொள்ளவில்லை மாறாக கண்மணி நாயகம் (ﷺ) அவர்களாலும், ஸஹாபாப் பெருமக்களாலும், மாபெரும் இமாம் பெருமக்களாலும் கற்றுக் கொடுக்கப்பட்ட சுன்னத் வல்ஜமாஅத்துடைய கொள்கைக்காக அயராது பாடுப்பட்டு அதனை தக்க ஆதாரத்துடன் நிரூபித்து மக்களுக்கு எத்திவைக்கும் விஷயத்தில் மாபெரும் சேவை செய்தவர்கள்.
மக்களனைவரும் இமாமின் கருத்துக்களை புரிந்து அதனை ஏற்றுக் கொண்டனர்.எதிரிகளின் தவறான வாதங்களை முறியடிக்க அல்கிபானத் போன்ற கிதாபுகளை எழுதினார்கள்.அதில் சுன்னத் வல்ஜமாஅத்துடைய கொள்கைகளை விளக்கினார்கள்.பல விவாதங்களையும் நடத்தியுள்ளார்கள்.இதனால் சத்திய பாதையான சுன்னத் வல்ஜமாஅத்தின் பக்கம் எதிரிகளான பலரும் திரும்பினர்.
இமாமவர்களும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் முஃதஸிதலத் என்ற வழிதவறிய கூட்டத்தார்களுடைய கொள்கையில் மிகவும் ஈடுபாடுள்ளவர்களாகவும் அதில் திறமையானவராகவும் இருந்தார்கள்.
இமாமவர்களுக்கு இந்த கொள்கையை கற்றுக்கொடுத்தவர் தனது தாயாரின் கணவரான அபூஅலிய்யினில் ஜுப்பாயி ஆவார். இமாமுடைய தந்தை சிறுவயதிலேயே வபாத்தாகிவிட்டார்கள்.தந்தை இறந்ததும் தாயார் முஃதஸிலத் இயக்கத்தின் தலைவரான அபூஅலிய்யினில் ஜுப்பாயியை மணந்தார்கள்.அதனால் இமாம் அவர்கள் தன்னுடைய சிறுவயதிலேயே இவரிடம் கல்வி கற்று இவருடைய மாணவரானார்கள். அதைப்போன்று ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்மர்வஸியின் மாணவராகவும் திகழ்ந்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரின் பாடத்தை இமாமவர்கள் கேட்பார்கள்.
இமாமவர்கள் ஏகத்துவ கலையில் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி ஹதீஸ், பிக்ஹ், மற்றும் தஃப்ஸீர் போன்ற கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்கு இமாம் எழுதிய நூல்களே சான்றாகும்.
விவாதம் செய்வதில் இமாமவர்கள் மிகவும் சிறந்தவர்களாக, திறமைவாய்ந்தவர்களாக விளங்கினார்கள்.ஜுப்பாயி இடம் விவாதம் செய்யவரும் நபர்களை இமாமுடன் விவாதம் செய்ய அவர் அனுப்பி விடுவார்.இவ்வாறு 40 வயது வரை முஃதஸிலத் இயக்கத்தில் இமாமவர்கள்இருந்தார்கள்.பிறகு முஃதஸிலா மீது மோகம் குறைந்து நபித்தோழர்கள் சென்ற வழியே நேர்வழி என்று உணர்ந்தார்கள்.
ஜுப்பாயிடம் பலமுறை பல கேள்விகள் இமாமவர்கள் கேட்பார்கள்.ஆனால் அதற்கு சரியான பதில் இமாமவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் மனம் குழம்பியவராக இமாம் இருப்பார்கள்.
ஒருநாள் இரவில் இமாமவர்களுக்கு தான் இருந்த கொள்கையில் சிறிதளவு குழப்பம் ஏற்பட்டது. அப்போது இமாமவர்கள் இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடம் இறைவா! எனக்கு நேரான வழியை காண்பித்து தா என்று துஆ செய்துவிட்டு தூங்கிவிட்டார்கள்.
அந்த நேரத்தில் கண்மணி நாயகம் (ﷺ) அவர்களை கனவில் காணுகின்றார்கள்.அப்போது தனக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தை கவலையாக கண்மணி நாயகம் (ﷺ) அவர்களிடம் இமாமவர்கள் கூறினார்கள்.அதற்கு நாயகம் (ﷺ) கூறினார்கள்.நீ என்னுடைய சுன்னத்தை பற்றிபிடித்து கொள் இவ்வாறு தொடராக மூன்று முறை ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது.பின்பு தான் ஏற்றுக் கொண்ட கொள்கை குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் ஒப்பாக இருக்கிறதா?என்று ஒப்பிட்டு பார்த்து அவ்விரண்டும் சுட்டிக் காட்டிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை எறிந்து விட்டார்கள்.இந்த வரலாறு பலரீதியில் ரிவாயத் செய்யப்படுகிறது.இதுதான் இமாமவர்கள் முஃதஸிலா என்ற தவறான வழிகெட்ட இயக்கத்தில் இருந்தும் விடுபட்டு சுன்னத் வல் ஜமாஅத்தின் மகத்தான கொள்கையின் பக்கம் வந்து சேருவதற்கான காரணமாகும்.
பிறகு 15 நாட்கள் தனியாக வீட்டிலேயே தங்கி இருந்து பின் தான் உரையாற்றும் பள்ளியிலே மிம்பரில் அமர்ந்திருந்து மக்களுக்கு மத்தியில் சொன்னார்கள்.
நான் இதுவரை ஏற்றுக் கொண்ட கொள்கைகளை எல்லாம் எடுத்தெறிந்து விட்டேன். அப்போது மக்கள் அனைவரும் இமாமின் மாற்றத்தை புரிந்து கொண்டனர்.
அதன் பிறகு முஃதஸிலாக்களிடம் பல கேள்விகள் எழுப்பினார்கள்.அதற்கு பதில் கூற முடியாமல் திணறினார்கள்.பின்பு கஷ்புல் அஸ்றார், மகாலத்துல் இஸ்லாமியா, கிதாபுல்லுமஃ போன்ற கிதாபுகளை எழுதினார்கள். இவைகளுக்கு மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதில் கூறக்கூடிய கருத்துக்களை எல்லா இமாம்களும் ஏற்றுக் கொண்டு அஷ்அரி இமாமை இமாமாக ஏற்றுக் கொண்டார்கள்.
#இமாமவர்களும்_பித்அத்வாதிகளும்.
முஃதஸிலத் என்ற கூட்டம் அல்லாஹு தஆலாவிற்கு இல்ம், குத்றத் போன்ற ஸிபாத்துல் மஆனி கிடையாது என்று வாதிட்டார்கள்.
இவர்களின் வாதத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு எடுத்துக் காட்டாக குத்றத் கிடையாது.ஆனால் அவன் காதிறாக இருக்கிறான். அல்லாஹ்விற்க்கு இல்ம் கிடையாது ஆனால் அல்லாஹ் ஆலிமாக இருக்கிறான்.இந்த வாதம் எதைப் போன்று என்று சொன்னால் ஒரு சிவப்பான மனிதனைப் பார்த்து இவன் சிவப்பானவன் ஆனால் இவனுக்கு சிவப்பு கிடையாது என்று கூறும் மடத்தனமான ஒரு வாதம்.இதற்கு இமாமவர்கள் பொய்யான இந்த வாதத்தை எதிர்த்து அது தவறானது என்று தக்க ஆதாரங்களை வைத்து நிரூபித்தார்கள்.
அல்லாஹ்வுக்கு இல்ம் என்ற பண்பு உண்டு. ஆனால் அல்லாஹ் ஆலிமாக இருக்கிறான். அவனுக்கு குத்றத் என்ற பண்பும் உண்டு.
அதனால் அவன் காதிறாகவும் இருக்கிறான்.
இவர்களுடைய மற்றொரு முக்கியமான வாதம் அல்லாஹுதஆலா தன் அடியானுக்கு மிகவும் அஸ்லஹானது (சீரானது) செய்யல் அவனுக்கு கட்டாயம் என்று வாதிட்டார்கள்.ஆனால் நம்முடைய சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அப்படி செய்வது கட்டாயமல்ல.
அல்லாஹ் எதை நாடுகிறானோ அதனை நாடக்கூடி
யவர்களுக்கு கொடுப்பான். முஃதஸிலாவுடைய இந்த வாதத்தை உடைத்தெறிவதற்காக வேண்டி ஜுப்பாயிடம் இமாமவர்கள் கேட்டார்கள். முஃமின், காபிர், சிறுவன் இந்த மூன்று பேருடைய விஷயத்தில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்..?இவர்கள் மூன்று பேரும் மரணித்தால் இவர்களின் நிலை என்ன? இதற்கு ஜுப்பாயி சொன்னார்.
முஃமினானவர் மிகவும் உயர்ந்த பதவியுடைய கூட்டத்தாருடன் சுவனம் சென்று விடுவார்.
காஃபிரானவன் அவனோ நரகம் சென்று விடுவான். சிறுவன் சுவனத்தில் நுழைவான் அவனுக்கு மிக உயர்ந்த பதவிஉடைய கூட்டத்தார்களுடன் அமர் முடியாது.
அதற்கு அஷ்அரி இமாம் கேட்டார்கள். சிறுவனுக்கு மிகவும் உயர்ந்த தரஜா உடையவரின் அந்தஸ்திற்கு சேர வேண்டும் என்று நினைத்தால் அது ஆகுமானதா?அதற்கு ஜுப்பாயி அது இயலாது. காரணம் முஃமின் உயர்ந்த அந்தஸ்தை பெற்றது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அமல் செய்ததின் காரணமாகவே சிறுவனுக்கோ அது கிடையாது. அதற்கு அஷ்அரி இமாம் கேட்டார்கள் அந்த சிறுவன் யா அல்லாஹ்! குறைபாடு என்னிலிருந்து உண்டாகவில்லை நீ என்னை இன்னும் உயிர் வாழ வைத்திருந்தால் முஃமின் அமல் செய்ததைப் போன்று நானும் அமல் செய்திருப்பேனல்லவா என்று கேட்டுக்கொள்ளலாமே அதற்கு ஜுப்பாயி சிறுவனிடம் அல்லாஹ் சொல்லுவான் நீ முஃமினைப் போன்று உயிர் வாழ்ந்திருந்தால் நீ எனக்கு மாறுசெய்வாய் என்று நான் அறிவேன்.அந்த நேரத்தில் என் தண்டனை உனக்கு வந்து சேரும் அதனால் உன் நன்மைக்காக வேண்டியே நான் உன்னை தக்லீபுடைய பருவ வயதிற்கு முன்னாலேயே மரணிக்க செய்து விட்டேன்.பின்பு அஷ்அரி இமாம் கேட்டார்கள். அந்த காஃபிரான மனிதனும் என் இறைவா! நீ அந்த சிறுவனின் நிலையை அறிந்தது போன்று என் நிலையையும் நீ அறிவாய் அந்த சிறுவனின் நன்மையை நீ கவனித்ததினால் தக்லீபுடைய பருவ வயதிற்கு முன் நீ மெளத்தாக்கிவிட்டாய் இதைப்போல் என் நன்மையை கவனித்து ஏன் என்னை பருவ வயதிற்கு முன்னால் மவ்த்தாக்கவில்லை இதற்கு ஜுப்பாயி பதில் சொல்ல முடியாமல் திணறினார்...
ஹஷவிய்யத், முஜஸ்ஸிமத் என்ற பித்அத் வாதிகளான வழிகெட்ட கூட்டத்தார்கள் அல்லாஹுத் தஆலாவுடைய இல்ம் நம்முடைய இல்மைப் போன்றது என்று வாதிட்டார்கள்.அதற்கு இமாமவர்கள் சுன்னத் வல் ஜமா அத் கொள்கையான அல்லாஹு தஆலாவுடைய பண்புகள் நம்முடைய பண்புகளைப் போன்றதல்ல.
அல்லாஹ்வுக்கு இல்ம் உண்டு ஆனால் நம்முடைய இல்மைப் போன்று அல்ல.அதைப்போல இன்றைய வஹ்ஹாபியக் கூட்டம் சொல்வதைப் போன்று ஹஷவிய்யத்தும், முஜஸ்ஸிமத்தும் அன்று சொன்னார்கள்.அதாவது அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கிறான் என்ற தவறான வாதம் அதற்கு அஷ்அரி இமாம் சொன்னார்கள்.
*كان ولا مكان فخلق العرش والكرسي ولم يحتج الي مكان وهو بعد خلق المكان كما كان قبل خلقه*
இடம் என்பது அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பு. அதற்கு முன்னாலேயே அல்லாஹ் உண்டு அர்ஷ், குர்ஷை அல்லாஹு படைத்தான்.
அவனுக்கு இடமே தேவையில்லை அவன் இடத்தை படைப்பதற்கு முன்னால் எந்த நிலையில் இருந்தானோ அதைப் போன்றே இடத்தை படைத்த பின்பும் இருக்கிறான். இவ்வாறு அவர்களின் தவறான வாதத்தை எதிர்த்தார்கள்.
ஹவாரிஜ் என்ற வழிகெட்ட கூட்டத்தார்கள் பெரும்பாவங்கள் செய்யக்கூடிய முஃமின்களை காபிர்கள் என்று வாதித்தார்கள்.இந்த தவறான கருத்தை அஷ்அரி இமாம் எதிர்த்தார்கள்.இவர்கள் ஒரு போதும் காபிர்கள் அல்ல அல்லாஹ் நாடினால் அவர்களை மன்னிப்பான் இல்லையெனில் அவர்களுக்கு தண்டனை வழங்குவான் இவ்வாறு இமாமுடைய காலத்தில் வாழ்ந்த அனைத்து விதமான வழிகெட்ட கூட்டத்தார்களின் கருத்துக்களையும் தன் சொல்லாலும், செயலாலும் சத்திய ஏகத்துவ வழியாகிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்கள்.
கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமான கிதாப்களை இமாமவர்கள் எழுதியுள்ளார்கள்.இது அனைத்தும் அல்லாஹ்வுடைய தீன் நாயகமும், ஸஹாபாப் பெருமக்களும் எந்த முறையில் கற்றுத்தந்தார்களோ அதே முறையில் மக்களிடம் சென்று சேர வேண்டும். என்ற நோக்கத்திற்காக மட்டுமே! இமாமுடைய அயராத உழைப்பின் காரணத்தால் ஏனைய இமாம்கள் அஷ்அரி இமாமவர்களை "இமாமு அஹ்லிஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்" என்றும் "நாஸிறுஸ் ஸுன்னத்" என்றெல்லாம் பெயர் சூட்டி அழைத்தார்கள். இமாமவர்கள் போதித்த கொள்கையை பரப்புவதற்காக நிஜாமிய்யா கல்லூரி நிறுவப்பட்டது. ஹிஜ்ரி 324_ல் கி.பி.947_ல் இமாமவர்கள் பஃதாதில் வைத்து வஃபாத்தானார்கள்.
ஒரு ஆலிம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இமாமவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்..
அல்லாஹ்! இமாமவர்களின் பொருட்டால் நம்முடைய மற்றும் தாய், தந்தையர்களுடைய, உஸ்தாதுமார்களுடைய, குடும்பத்தார்களுடைய பாவங்களை மன்னித்து கண்மணி நபியுல்லாஹ் (ﷺ) அவர்களுடன் ஸஹாபாப் பெருமக்களுடனும் இமாம்கள், தாபிஈன்கள், இறைநேசர்களுடன், நம் அனைவரையும் அல்லாஹ் சுவனத்தில் ஒன்று சேர்த்து ஈருலக நற்பாக்கியங்களையும் தந்தருள்புனிவானா க!
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.