சானு ஜோசப் இனி மவ்லவி ரஃபீக் தாரிமி
சானு ஜோசப் இனி
மவ்லவி ரஃபீக் தாரிமி...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த சானு ஜோசப் இனி முதல் மவ்லவி ரஃபிக் தாரிமி.
இஸ்லாத்தின் மகத்துவத்தை உணர்ந்த அவரது தந்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு புனித இஸ்லாம் பற்றி கூற, அவர்கள் இஸ்லாத்தை ஏற்க விரும்பினர்.
இவ்வாறு தந்தையும் பிள்ளைகளும் புனிதமான தீனுக்குள் நுழைந்தனர்.
ஆரம்பக் கல்விக்குப் பிறகு
ரபீக் அவர்கள் மார்க்க அறிவைப் பெறுவதற்காக திரிபிரங்கோடு பாலோத்துபரம் அரபி மதரசாவுக்கு வந்தார்.
ஷைகுனா சலீம் அன்வரி உஸ்தாத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்
உயர் மார்க்கக் கல்வியைப் பெற்றார்,
பின்னர் மேற்படிப்புக்காக கோழிக்கோடு நந்தி தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரிக்குச் சென்றார்.
தலைசிறந்த பேராசிரியர்களிடமிருந்து முதுநிலைப் படிப்பை முடித்த அவர் நேற்று "தாரிமி" பட்டம் பெற்றார்.
அல்ஹம்து லில்லாஹ்.
அன்புள்ள இறைவா...
புனிதமான தீனுல் இஸ்லாமுக்கு பெருமையுடன் சேவைகள் பல செய்ய அவருக்கு தௌபீக்கை வழங்குவானாக.. ஆமீன்