Sirajudheen Ahsani
எழுத்தாளர்

முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியின்
(மஸ்ஜித் அந்-நபவி) முக்கிய முஅத்தின்
(தொழுகை அழைப்பாளர்)
ஷேக் பைசல் நுஃமான் இன்றைய தினம் வஃபாத்தானார்கள்.
அவர் மதீனாவில் வைத்து மரணமடைந்தார். உடல் ரீதியான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால் நூற்றாண்டு காலமாக நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுகைக்கு (அதான்) அழைப்பு விடுக்கும் பாக்கியம் பெற்றவர் ஷேக் பைசல் நுஃமான்.

மதீனாவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமான மற்றும் இனிமையான குரலைக் கொண்டிருந்தார்.

அவரது மரணச் செய்தி மதீனாவில்
உள்ள விசுவாசி சமூகத்தையும் புலம்பெயர்ந்தவர்களையும்
சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தகவல்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி