இதுவல்லவோ வேட்கை,அர்ணிப்பு, நம்பிக்கை
இது வல்லவா வேட்கை!!!
இதுவல்லவா அர்பனிப்பு!!!
இதுவல்லவா நம்பிக்கை!!
இதுவல்லவா விவேகம்!!!!
ஆம்..
(எனது சின்னம்மா மர்ஹூம் *#மைமூனா* உம்மா அவர்கள் பெயரில் அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும்)
*#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ் சார்பாக கடந்த பல வருடங்களாக மீலாது விழாவை முன்னிட்டு எம் பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்புகளை பற்றி தலைப்புகள் கொடுத்து மாநில அளவிலான #கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கம்,,,,
ஒவ்வொரு ஆண்டும் நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் வெற்றிபெற்று பரிசுகளை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,,,
அதில் இந்த வருடம் நடந்த போட்டிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் என்ற ஊரை ச் சார்ந்த #சாலிமா என்ற சகோதரி அனுப்பிய கட்டுரையின் கவரில் அவர் எழுதியிருந்த வாசகம் எம்மை பரவசமடைய வைத்தது!!!
ஆம்..*
*(சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 19/10/2021 .. அதற்க்குள்ளே டெலிவரி செய்யுங்கள் ஐயா)*
என்று அந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை அஞ்சலக அதிகாரிகளுக்கு அவர் சூசகமாக தெருவித்திருந்த விதம்,,அவர் போட்டியில் பங்கெடுக்காமலேயே வெற்றியே பெற்றுவிட்டார் என்பதே போன்ற உணர்த்தியது!!!
எம் பெருமானார் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடக்கும் போட்டியில் தானும் பங்கு பெற வேண்டும்,,,, அதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தியதிக்கு முன் எமது கட்டுரை சென்றடைய வேண்டும் என்ற அவரது ஆர்வமிருக்கிருக்கிறதே,,
அதுவல்லவா நாம் எம் பெருமான் ரசூலுல்லா (ஸல்) வின் மேல் வைத்திருக்கிருக்கிற மஹப்பத்!!!
இதுவல்லவா வேட்கை!!!!
இதுவல்லவா அர்பனிப்பு!!!
இதுவல்லவா நம்பிக்கை!!!
ஒரு சிறிய விசயத்தை கூட கவனமாக கையாண்ட அந்த சகோதரிக்கும்,*#மைமூன்_பப்ளிஷிங் #ஹவுஸ்* மூலம் நற்பனிகளை நடத்தும் சகோதரர்கள்களுக்கும்,,,எல்லாம் வல்ல அல்லாஹ் நற்க்கூலிகள் வழங்குவானாக!!!
#மைமூன்_பப்ளிஷிங்_ஹவுஸ் சார்பாக #முப்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான நூல்களை மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின் இயக்குனராக விளங்கும் அருமைத் தம்பி M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி அவர்கள் தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
#மீலாது தினமல்லாது #ஹஜ் பெருநாள்,#ரமளான் போன்ற காலங்களிலும் இவர்கள் போட்டி நடத்துவது வழமை..
இதுவரை தமிழகம் தழுவிய #ஆறு மாநில போட்டிகள் நடத்தியுள்ளனர்..
வல்லோன் அல்லாஹ் இவர்களின் சேவைகளை கபூல் செய்வானாக!!!
#மைமூன் உம்மாள் அவர் களுக்கு #பத்து பிள்ளைகள் அதில் #ஆறுபேர் ஆலிம்கள்.
எல்லா ஆலிம்களும் பல்வேறு விதங்களில் மார்க்க சேவைகள் புரிகின்றனர்.
வல்லோன் அல்லாஹ் அனைவருக்கும் பறக்கத் செய்வானாக..
மேலும் எனது சின்னம்மா மைமூனா அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது எல்லா பாவங்களையும் மன்னித்து சுவர்க்க பூஞ்சோலையை பரிசாக வழங்குவானாக!!
ஆமீன்!!! யாரப்பில் ஆலமீன்!!!
❤️ புடன்
*அகமது K.#முஜீப்_ரஹ்மான்
குளச்சல்*