மார்த்தாண்டம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் எமது எட்டு வருட சேவை

மார்த்தாண்டம் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் எமது எட்டு வருட சேவை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

الحمد لله

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் முஸ்லிம் ஜமாஅத் இர்ஷாதுத் தாலிபீன் அரபிக் மதரஸாவில் முஅல்லிமாக சேவை புரிய துவங்கி 8_ ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இதற்கு முன் ஐந்து வருடங்கள் வேறு பல மஹல்லாக்களில் பணி செய்து கொண்டு இருந்தேன்.

காலம் சக்கரம் எவ்வளவு வேகமாக
சுழல்கிறது பார்த்தீர்களா..?
நேற்றைக்கு பணியில்
சேர்ந்தது போன்று இருக்கிறது..
ஆனால் அதற்குள் எட்டு வருடங்கள்
கழிந்து விட்டது என நினைக்கும் போது
ஆச்சரியமாக இருக்கிறது..
வல்லோன் அல்லாஹ் நம் சேவைகளை அங்கீகரிப்பானாக
இன்னும் ஏராளமான சேவைகளை
செய்யும் விதத்தில் நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும்,
பொருளாதார செழிப்பையும்
வழங்கியருள்வானாக

இக்கால அளவில் என்னோடு பணியாற்றிய உஸ்தாதுமார்கள்,
ஜமாஅத் நிர்வாகிகள்,
மாணவக் கண்மணிகள்,
ஊர் மக்கள் என அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். நேற்றுவரை நம்மோடு இனிதாக
பழகிய பலர் இன்று நம்மோடு இல்லை.
அவர்களின் பாவங்களை மன்னித்து
அனைவரையும் உயர் தர ஜன்னாத்துல்
ஃபிர்தவ்ஸில் புகுந்திட செய்வானாக..

கருணைமிக்க வல்ல ரஹ்மான் மகத்தான இந்த ரபீஉல் அவ்வலின் நன்னாளில்
நம் பெற்றோர் உற்றோர் நண்பர்கள் அனைவருக்கும் நீடித்த ஆயுளையும் நிறைவான செல்வத்தையும் குறைவில்லா ஆஃபியத்தையும் பரிபூரண ஈமானையும் வழங்கியருள்வானாக! மரணித்தவர்களுக்கு மஃபிரத் வழங்குவானாக!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

அனைவருக்கும் ஈத் மீலாத் நபி நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி