நான் நேசிக்கும் ஸெய்யித்
தாஜுல் உலமாவைப் பற்றி ஆங்கிலத்தில் இந்த எளியவன் எழுதிய THE CROWNED EMINENCE புத்தகத்தின் முன் தயாரிப்பு பணியின் இறுதி அமர்வு.
வாசிப்பு மற்றும் திருத்தங்களுடன் அதிகாலையில் தொடங்கிய அந்த அமர்வு நண்பகலில் முடிகிறது.
சந்தேகம் வந்த ஒன்றிரண்டு இடங்களில் தெளிவுபடுத்த தாஜுல் உலமாவின் மகனான குறா தங்களையும்,
மருமகனான கும்போல் தங்களையும் பார்க்க வேண்டும்.
அதன் பிறகுதான் புத்தகத்தை அச்சகத்திற்கு அச்சடிக்க அனுப்புவது என்பது இறுதி முடிவாக எடுக்கப்பட்டது...
சமீபத்தில் மலப்புரத்தில் நடைபெறவிருக்கும் உலமாக்கள்
குழுக் கூட்டத்தில் பங்கேற்க கும்போல் தங்கள் வரும்போது அவரை இங்கிருந்து நேரடியாகச் சந்திக்கவும்,
குறா தங்கள் அவர்களை அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்திக்கவும் முடிவு செய்து பிரிந்து சென்றோம்..
ஆனால் மிகவும் தற்செயலாக
பிற்பகல் 3 மணியளவில்
குறா தங்கள் அவர்களின்
ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, 'நான் மஃதினுக்கு வருகிறேன்.
நீங்கள் மஃதினில் இருந்தால் நாம் பரஸ்பரம் சந்திக்கலாம் என்றார். அல்ஹம்துலில்லாஹ்...
முதலில் என் நினைவுக்கு வந்தது
அந்த புத்தகத்தை ஏற்றுக் கொள்வதற்காகத்தான் தங்களின் வருகை என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்
தங்கள் அவர்கள் அன்று வருகைப் புரிந்து மஃதினில் வெகுநேரம் செலவழித்து, மஃதின் சதாத் அகாடமி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆசிர்வாதங்களையும
அளித்துவிட்டு மகான் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.
தாஜுல் உலமாவின் வீடும்
எங்கள் பூர்வீக வீடும் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
மேலும் குறா தங்களும் நானும் ஒரே வயது உடையவர்கள்.
மகான் அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் தனது வாழ்க்கையின் ஒரு நல்ல பகுதியை உம்மாவின் பராமரிப்பிற்காக அர்ப்பணித்ததே ஆகும்.
மங்களூரில் யாரும் அறியாத #குறா என்ற சிறிய கிராமம் இன்று மகான் அவர்களின் பிரசன்னத்தால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
அல்லாஹ் அவர்களின் தரஜாவை அதிகப்படுத்தி உயர்த்துவானாக..
ஸெய்யித் இப்ராஹிம் கலீல் அல் புகாரி...
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...