சிலருக்கு அல்லாஹ் பாக்கியங்களை வழங்கியுள்ளான்
மஃதின் அகாதமி

சிலருக்கு அல்லாஹ் பாக்கியங்களை வழங்கியுள்ளான்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#சிலருக்கு_அல்லாஹ்_பாக்கியங்களை #வழங்குகிறான்..

இவர் ஸாலிஹ் ஸகாஃபி.
கேரளாவில் நடைபெறுகிற ஏராளமான இஸ்லாமிய போட்டிகளில் கலந்து கொண்டவர்..
கலந்து கொண்ட போட்டிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு முக்கிய பரிசை அள்ளிச் செல்வது அவரது வழக்கம்...

இதோ கீழே ஒரு பட்டியல் தரப்பட்டுள்ளன.
அதைப் படித்துப் பாருங்கள்... 👇👇🤙🤙🤙

▶️ ஆறு ஆண்டுகளில்
55 புத்தகத் தேர்வுப் போட்டிகள்.
30 முறை முதல் இடம்.

▶️ புத்தகத் தேர்வில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மாவட்ட சாகித்ய கலை இலக்கிய விழாவில் முதல் இடம்.

▶️ மதினத்துந்நூர் ஹபீப் நூரானி நினைவு புத்தக விமர்சன விருது 2022.

▶️ ஜாமிஆ மர்கஸ் ஐகான் ஆஃப் தி இயர் விருது 2022.

▶️ ஜாமிஆ மர்கஸ் அல்-கலாம் விருது 2023 (நிழலும் நிலாவும்).

▶️ SSF கோல்டன் ஃபிஃப்டி ஆய்வுக்கட்டுரை எழுதும் போட்டியில் முதல் இடம்.

▶️ பத்ரிய்யா நெடியநாடு
அகில கேரள பேச்சுப் போட்டியில் முதலிடம்.

▶️ கொல்லம் தைபா சென்டர் ஸீறா பிரசன்டேஷன் 1வது இடம்.

இது சாலிஹ் எனும் திறமை சாலியான இளைஞர் தான் பங்கு பெற்ற போட்டிகளில் ஒன்றாவது இடத்தை பிடித்தவையின் பட்டியல்..

இனி இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைச் சேர்த்தால், பட்டியல் நீளமாக இருக்கும்.

பல சாதனைகள் மூலம் ஒரு மாணவ பருவத்தில் இவ்வளவு பரிசுகள் பெறும் பாக்கியம் பெற்றவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள்..

வாழ்த்துக்கள்..

மஃதின் அகாதமி க்யூ லேண்டில் கல்வி இயக்குநராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
பரகல்லாஹ் ஃபீக்கா யா ஹபீபி..

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி