குர்பானி கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

குர்பானி கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குர்பானி கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா...?

உள்ஹிய்யா கொடுப்பதன் சிறப்புகள் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளது..
அவற்றில் சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்..

: (( ما عمل ابن آدم يوم النحر عملا أحب إلى الله عزوجل من إهراق الدم و إنها لتأتي يوم القيامة بقرونها و أشعارها و أظلافها و أن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا ))

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஆதமுடைய மகன் நஹ்ருடைய நாளில் செய்யும் செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது உள்ஹிய்யா பிராணியின் இரத்தத்தை ஓட்டுவது தான். நாளை மறுமையில் அது அதன் முழு உருவில் வரும். (அதன் கொம்புடனும், அதன் முடிகளுடனும், அதன் சதைகளோடும் வரும்) திண்ணமாக, இந்தப் பூமியில் அதன் உதிரம் சேரும் முன்னரே அல்லாஹ்விடம் அது போய் சேர்ந்து விடுகின்றது. ஆகவே, நீங்கள் தூய மனதோடு உள்ஹிய்யாக் கொடுங்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

: (( يا رسول الله صلى الله علي وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم
قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة ))

”நபித்தோழர்களில் சிலர் நபி {ஸல்} அவர்களிடம் இந்த உள்ஹிய்யாவினால் என்ன கிடைக்கும்? இதன் தாத்பரியம் என்னவென்று வினவினர். அப்போது நபி {ஸல்} அவர்கள் இது உங்களின் தந்தையான இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய நடைமுறையாகும்.
இந்த உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஒவ்வொரு நன்மைகள் கிடைக்கும்” என்று நபி {ஸல்} அவர்கள் பதிலளித்தார்கள்.

: (( يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإن لك بكل قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك قالت يا رسول الله ألنا خاصة آل البيت أو لنا و للمسلمين قال بل لنا و للمسلمين ))

இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“உள்ஹிய்யா தினத்தன்று அண்ணல் நபி {ஸல்} அவர்கள் தமது அருமை மகளாரிடம்
ஃபாத்திமாவே! எழுவீராக! உம்முடைய பிராணியிடத்தில் ஆஜராகுவீராக!

மேலும், நிச்சயமாக, எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளதுமேலும், நான் இறைவனுக்கு கீழ்ப்படிவோரில் முதன்மையானவன்” என்று நீர் கூறுவீராக!

ஏனெனில் குர்பானிப் பிராணியின் முதலாவது சொட்டு இரத்தம் விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.

மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும் எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத் தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் உரியதா? அல்லது எல்லா முஸ்லிம்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள்.

அப்போது நபி {ஸல்} அவர்கள் ”இது முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவானதுதான்”
என பதிலளித்தார்கள்.

: (( عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم ))

”குர்பானிப் பிராணிகளில் மிகச் சிறப்பானதைக் கொடுங்கள். ஏனெனில் அது தான் மறுமையில் உங்களின் வாகனம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

: (( من ضحى طيبة بها نفسه محتسبا لإضحيته كانت له حجابا من النار ))

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “யார் தூய மனதோடும், நன்மையை எதிர்பார்த்தும் உள்ஹிய்யா கொடுக்கின்றார்களோ அந்த உள்ஹிய்யா அவருக்கு நரகின் திரையாகி விடும்”.

: (( إن الله يعتق بكل عضو من الضحية عضوا من المضحي ))

”அல்லாஹ் உள்ஹிய்யா பிராணியின் ஒவ்வொரு உறுப்புக்குப் பகரமாக உள்ஹிய்யா கொடுப்பவரின் ஒவ்வொரு உறுப்பையும் நரகிலிருந்து விடுவித்து விடுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

: (( يا أيها الناس ضحوا و احتسبوا بدمائها فإن الدم و إن وقع في الأرض فإنه يقع في حرز الله ))

“மக்களே! நன்மையை எதிர்பார்த்து உள்ஹிய்யா கொடுங்கள்.
ஏனெனில், உள்ஹிய்யா பிராணியின் உதிரம் இப்பூமியில் விழுமுன் அல்லாஹ்வின் சந்நிதானத்தின் முன் விழுந்துவிடுகின்றது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

(( ما أنفقت الورق في شيء أفضل من نحيرة في يوم العيد ))

”நஹ்ருடைய நாளன்று செய்யப்படும் செலவினங்களை விடச் சிறந்த செலவினங்கள் வேறெதுவும் கிடையாது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.