Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மனங்களை நெகிழ வைக்கும் சேவகர்.

இவர் சினிமா நடிகரோ,
பெரிய தொழிலதிபரோ இல்லை.

எனவே இந்த முகத்தைப் பார்த்தவர்கள் சுருக்கமாகவே இருப்பார்கள்..

அஷ்ரஃப் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் கேரள மாநிலத்தைச்
சேர்ந்த ஒரு இந்தியர்..

இந்த ஆண்டு #பிரவாசி_பாரதி
விருதை வென்றதில் அவரது
சேவை எவ்வளவு பெருமை வாய்ந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பொதுவாக வளைகுடா நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு
நிறைய பேப்பர் ஒர்க் செய்ய
வேண்டி வரும்..

கடந்த பதினான்கு வருடங்களாக
யாரிடமும் ஒரு ரூபாய் கூட பெறாமல் கிட்டத்தட்ட இரண்டாயிரம்
மலையாளிகள் மட்டுமின்றி,
மற்ற மாநிலத்தவர்கள், பிற நாட்டைச் சேர்ந்த (முப்பத்தி ரெண்டு நாடுகள்) வர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்..

தான் செய்யும் பணியின் கவுரவத்தை யாருக்கும் தெரிவிக்காமல், பிறரிடம் கர்வம் காட்டாமல்,
இச்சேவையை பற்றிக் கேட்டால் ஒரே சிரிப்பில் அனைத்தையும் ஒதுக்குகிற இந்த மனிதரின் அழகிய மனதிற்கு
மகத்தான கூலிகளை வழங்கி அருள்புரிவானாக....

இவர் #அஜ்மானில் தான் பணிபுரிகிறார்..
வேலைக்கு இடையில் இந்த சேவையில் இறங்கும் இவர்
பெரும்பாலும் நள்ளிரவில் தான் வீடு வந்து சேருவார்..

ஆனால் யாரிடமும் ஒரு முறைக்கூட,
முகம் சுளிக்காமல்,
சலிப்பில்லாமல் தன் கடமையைச் செய்கிறார்...
சேவையை தொடர்கிறார்..

மரணத்தின் வாசனை, உறவுகளின் துக்கம், தொடர்ந்து இந்த பாதையில் கடந்து செல்கிறவரின் மனம் ஒரு நாள் தளர்ந்து விடும்..
இதுபற்றி அவரிடம் கேட்டால் இப்படிச்‌ சொல்கிறார்...

"" நான் அதுப்பற்றி சிந்திக்க துவங்கினால் இந்த பணியை ஒழுங்காக செய்ய முடியாது..

நான் முதலில் இதைச் செய்ய இறங்கியபோது
கஷ்டமாக இருந்தது, எனக்கு அப்போது சொந்தமாக கார் இல்லை..

எங்கு செல்ல வேண்டுமானாலும் டாக்ஸியை அழைத்துக் கொண்டுதான் கிளம்புவேன்..

அன்றெல்லாம் இறப்பு எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
மாதத்திற்கு ஒன்றோ, இரண்டு இருந்தது..
இப்போது மாதத்திற்கு 40-50 பேர் இறக்கின்றனர்

அஜ்மான், ராஸல்கைமா, துபாய் போன்ற பல்வேறு இடங்களுக்கும் நான் செல்வதுண்டு..
துபாயில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது...

இப்போது ஆபீஸ்ல எல்லாருமே தெரிஞ்சதால கூப்பிட்டுச் சொன்னால் உடனே ஹெல்ப் பண்ண
பலர் தயாராக உள்ளனர்..

மரணித்தவர்களின் உடலை விமானம் மூலம் அனுப்பி வைப்பதற்கான செலவை பல நாடுகளும் வகிக்கிறது..
ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை.

வட இந்திய மாநில தொழிலாளர்கள் இறக்கும் போதுதான் மிகவும் கஷ்டம்..

பல நேரங்களிலும் வசூல் செய்து தான் அவர்களின் (இறந்த உடல்களை) அனுப்புவதற்க்கான
விமானக் கட்டணங்களை செலுத்துகிறோம்.. நாட்டுக்கு அனுப்ப முடியாத உடல்களை இங்கேயே அடக்கம் செய்வோம்..

இந்த வித்தியாசமான பயணத்திற்கு யார் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்று கேட்டால்
அவர் தனது மனைவியை சுட்டிக்காட்டுகிறார்...

“என் மனைவி எதிர்த்தால் எனக்கு இதை செய்ய முடியாதல்லவா...?

காலை ஏழு மணிக்கு இறங்கினால் வீடு வந்துச்சேர இரவு பனிரெண்டு மணி ஆகிவிடும்.

இதற்கிடையில் சாப்பாடு கிடையாது.

இறந்தவர்களின் விஷயங்களை ஒன்றும் மனைவியிடம் சொல்வதில்லை.. விபத்தில் மரணித்தவர்களின் உடலை பார்ப்பதற்கே சகிக்காது..

எம்பாமிங் சென்டரில் உடலை பேக் செய்வதற்கு என்னையும் அழைப்பார்கள்..முகம் இப்படி இருக்கட்டுமா என்றெல்லாம் சொல்லி..
அதுவெல்லாம் இதயம் நொறுங்கும் காட்சிகள்..

கணவரின் சேவை மனப்பான்மை குறித்து மனைவி சுஹரா பெருமிதம் கொள்கிறார். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் அவரிடம் கேட்க எனக்கு மனஉறுதி யில்லை என்று கூறுகிறார்..

"அஷ்ரப் இக்காவிடம் நான் ஒன்றும் கேட்பதில்லை. ஒரு சமயம் எனக்கு தெரிந்த ஆசிரியை இறந்தவுடன் இக்காவுடன் பார்க்கச் சென்றேன். எம்பாமிங் செய்கிற வாசனை அடித்த போது எனக்கு தலைச்சுற்றல் வந்தது.. எவரும் மயக்கமடைந்து விழக்கூடிய அந்தச் சூழ்நிலையிலும் இக்கா மனதைரியத்துடன் நிற்பதைக் கண்ட போது எனக்கு அதிசயமாக இருந்தது...

இதைப் படித்தபோது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது..

இன்னும் மனித மனங்களில் கருணையும் நன்மையும் மிச்சமிருக்கிறது என்ற செய்தி மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியுமே அளிக்கிறது..

இந்த அழகிய குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்...

#பழைய_பதிவு

தமிழில்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி
_7598769505__