சுதந்திர குடியரசு நாடு என்று கருதி எதை வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

சுதந்திர குடியரசு நாடு என்று கருதி எதை வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சுதந்திர குடியரசு நாடு என்று கருதி எதை வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்தியன் கிராண்ட் முஃப்தி.
A_P_அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத்.

ஜாதி, மத பேதமின்றி இந்தியர்கள் என்ற ஒரே குறிக்கோளுடன் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்த முயற்சியின் பலனாக அந்நிய சக்திகளிடம் இருந்து விடுதலை பெற்றோம் என்றும், அனைத்து இந்தியர்களும் ஒன்றிணைந்து சாதித்தது போல் அதை அனுபவிக்கும் உரிமை அனைத்து இந்தியர்களுக்கும் உண்டு என்றும்
இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் கூறினார்கள்.

அந்நிய சக்திகளிடமிருந்து நாம் பாடுபட்டு பெற்ற உரிமையை யாரும் மறுக்க முயற்சிப்பது நாட்டின் நன்மைக்கும், நீதிக்கும் எதிரானது என அவர் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரக் குடியரசு என்று கருதி யாரும் எதை வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரம் யாருக்கும் வழங்கப்படுவதில்லை. எந்தவொரு தலையீடும் அரசியலமைப்பு மற்றும் சட்டம் அனுமதிக்கும் முறையிலும், மற்றவர்களின் அமைதிக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் செய்யப்பட வேண்டும்.

நமக்குள் இருக்கும் சுதந்திர எண்ணங்கள் வன்முறைக்கும், அநீதிக்கும் இட்டுச்செல்லும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க தூண்டுகோலாக இருக்கக்கூடாது.

எல்லா காலத்திலும் மற்ற தேசங்களுக்கு முன்பாக ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் இழக்காத வடிவத்தில் இந்திய தேசத்தை உயர்த்த ஆட்சியாளர்கள் எப்போதும் முயற்சிக்கவும், செயல்படவும் வேண்டும்.

இந்தியா என்பது பன்முகத் தன்மையை உட்கொண்டு பலகோடி
மக்களை வேற்றுமையில் ஒன்றிணைக்கும் உணர்வு.

பன்முகத் தன்மையை அழிக்க முயலும்போதும், மேலாதிக்கத்தை அடைய மூர்க்கத்தனமான செயல்களைச் செய்யும்போதும் மன அமைதியும், சுதந்திரமும் பாதிக்கப்படுகிறது.

வேறுபாடுகள் இருக்கும் போது தான் ஒரு நாட்டின் சுதந்திரம்.....

தமிழில் :
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.