Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இஸ்லாமிய புத்தாண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்தின் இரண்டாவது
ஜும்ஆ தொழுகையை அழகிய விதமாக அல்லாஹ்வின் கிருபையினால் நாகர்கோவில்_மீனாட்சி_புரம்
அல்_அமீன்_ஜும்ஆ
பள்ளிவாசலில்
நிறைவேற்றினோம்...

இவ்வாரம் ஆஷுரா நாளின்
மகத்துவம் எனும் தலைப்பில் உரையாற்றினேன்....

______________________________________________

#தாராளமாக_செலவு_செய்தல்....
*************************************************

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ )
யார் ஆஷூரா நாளில் தனது குடும்பத்தாருக்கு (அன்றைய நாளின் சஹர், இஃப்தார் போன்றவற்றுக்காக) தாராளமாக செலவு செய்கிறாரோ அவருக்கு, அவ்வருடம் முழுவதும் இறைவன் (தனது அருளை) விசாலப்படுத்துகின்றான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, தப்ரானீ, ஜாமிவுஸ் ஸகீர்,
முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-308

ஜாபிர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். ( جَرَبنَاهُ، فَوَجَدنَاهُ صَحِيحًا )
நாம் இதனை சோதனை செய்தபோது சரியானதெனக் கண்டோம்.
நூல்:- பைளுல் கதீர்

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

( قَدْ جَرَّبْنَاهُ مُنْذُ خَمْسِينَ سَنَةً أَوْ سِتِّينَ فَمَا رَأَيْنَا إلَّا خَيْرًا )

இதனை சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாக சோதனை செய்து இதில் நல்லதைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. நூல்:- பைளுல் கதீர், பதாவா இப்னு தைமிய்யா 4/513

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
( جرَّبنا ذلك فوجدناه حقًّا )

நாம் இதனை சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம்.
நூல்:- அல்இஸ்தித்கார் இப்னு அப்துல் பர் 10/140

மாமேதை ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.
"இந்த நபிமொழியின்படி ஆஷூரா நாள் அன்று என்னுடைய குடும்பத்தாருக்கு தாராளமாக செலவு செய்து வருகிறேன். அல்லாஹ் என் வாழ்வை (பரக்கத் எனும்) அருள்வளம் நிறைந்ததாக வைத்திருக்கிறான்.
இதை நான் நாற்பது ஆண்டுகளாக என்னுடைய வாழ்வில் அனுபவித்து வருகிறேன்" என்றார்கள்.

மன்ஸூர் அல்அஜீலீ அல்அஸ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

( وَيُسْتَحَبُّ فِيهِ التَّوْسِعَةُ عَلَى الْعِيَالِ وَالْأَقَارِبِ، وَالتَّصَدُّقُ عَلَى الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا فَلْيُوَسِّعْ خُلُقَهُ وَيَكُفَّ عَنْ ظُلْمِهِ )
ஆஷுரா தினத்தில் தமது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தாராளமாக செலவு செய்வது, ஏழை எளியோருக்கு தர்மம் செய்வது (முஸ்தஹப்பு எனும்) விரும்பத்தக்கது. இவ்வாறு செய்வதற்கு (பொருளாதாரம்) ஒன்றும் இல்லாவிட்டால், நற்குணத்தை விசாலப்படுத்தி, (பிறருக்கு) அநீதமிழைப்பதைவிட்டும் தன்னை தற்காத்து கொள்ளட்டும்.
நூல்:- ஷரஹுல் மின்ஹாஜ் 2/347