ஒரு இனிமையான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

ஒரு இனிமையான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஒரு இனிமையான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம்
தென்னல என்ற ஊரில் நான் பயின்ற
மன்ஷஉல் உலூம் அரபி மதரசாவில் இன்றைய தினம்
எமது ஆன்மீக வழிகாட்டி

மெளலானா மெளலவி
அப்துர்ரஷீத் பாகவி உஸ்தாத் அவர்களின்
அன்புத் தந்தையார்
மர்ஹும் குற்றிப்புரம்
அப்துல்லாஹ் முஸ்லியார் அவர்களின்
25_ ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் மிகவும்
சிறப்பாக இனிதே நடந்தேறியது..

இந்நிகழ்வில் கலந்துக்
கொள்ளும் பாக்கியம் இறையருளால் எமக்கு கிடைத்தது..

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாநில தலைவராக அடியேன் பொறுப்பேற்றதற்கு
மன்ஷஉல் உலூம் அரபி மதரசா மாணவர் மன்றத்தின் சார்பாக
கவுரவிப்பும், பாராட்டும்
ஷீல்ட்டும் உஸ்தாத் அவர்களின் பொன் கரத்தால் எமக்கு வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்.

வல்லோன் அல்லாஹ்
அனைத்தையும் கபூல் செய்தருள்வானாக..

எல்லா காலத்திலும் உஸ்தாத் மார்களுடைய துஆ கிடைத்திடவும் சுன்னத் வல் ஜமாத்திற்க்காக நீண்ட காலம் சேவை செய்திட‌வும்
நிறைவான ஆரோக்கியத்தையும் நெடிய ஆயுளையும் நம் அனைவருக்கும் மாபெரியோன் தந்தருள்வானாக...

ஆமீன் யா றப்பல் ஆலமீன்....