சுஹைருத்தீன் நூரானி மேற்கு வங்காளத்தில் உருவாக்கிய கல்வி புரட்சி

சுஹைருத்தீன் நூரானி மேற்கு வங்காளத்தில் உருவாக்கிய கல்வி புரட்சி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சுஹைருதீன்_நூரானி...
மேற்கு வங்காளத்தில் உருவாக்கிய
கல்வி புரட்சி..

உண்மையில், வங்காளிகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன்
நம் நினைவுக்கு வருவது ஒரு பிம்பம்தான்.
அதாவது, வெற்றிலை/புகையிலை மெல்லுபவர்கள், கறை படிந்த பற்களும் சிவப்பு நிற நாக்குகளும்,
எப்போதும் வாயில் ஏதாவது போட்டு அரைத்து கொண்டு இருக்கும் ஒரு சமூகம்.
மூட்டிய துணியை இடுப்பில்
கட்டிக் கொண்டு உடைகளில் கூட வித்தியாசமான தோற்றத்தை உணர முடியும்.

பல்வேறு காரணங்களுக்காக கல்வி பெற முடியாத மக்களுக்காக எவ்வித லாப நோக்குமில்லாமல்
நேர்மையுடன் பணியாற்றும் ஒரு இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் தான் சுஹைருதீன்_நூரானி

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்காள கிராமங்களில் அவர் கண்ட காட்சிகளை மக்களிடம் சொன்னால் நம்பமுடியாததாக இருக்கும் என்று
அவர் பல நேர்காணல்களில் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கு
தங்கள் குழந்தைகளோடு
கூடையில் பாம்புகளுடன் ஊர் சுற்றி அதை மக்களிடம் காட்சிப்படுத்தி
சம்பாதித்து கிடைக்கும் பணத்தில்
தங்கள் வாழ்க்கையை நடத்துபவர்கள்
கூட அக்கூட்டத்தில் இருக்கிறார்கள்.

இது கற்காலக் கதை அல்ல
10 வருடங்கள்தான் ஆகிறது.

வயதானவர்களைப் பார்த்தால், அவர்கள் பெரிய தாடியையும், கிழிந்த ஆடைகளையும் அணிந்துகொண்டு காலையில் விவசாயப் பணிகளுக்கு செல்கிறார்கள்.
சிறு குழந்தைகளும் அவர்களுடன் இருக்கிறார்கள். அக்குழந்தைகள் வேறு
எங்கே செல்ல முடியும்?..

நம் ஊரில் நம் குழந்தைகள்
காலை 6மணிக்கு எழுந்து மதரஸாவுக்குச் செல்கிறார்கள்,
7_ மணிக்கு மதரசா கழிந்தால்
காலை 9 : மணிக்குப் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
அங்குள்ள ஏழைகளும் எளியவர்களும்
இந்த அமைப்பு எப்படி இருக்கும் என்று
கனவு கூட காண முடியாது.

அரசியல் மற்றும் பாகுபாடு காரணங்களால், வாகனங்களுடன் அல்லாது அந்த கிராமங்களை அடைய முடியாது.
அங்கு பிரசங்கிப்பது மிகவும் சாகசமாக இருந்தாலும் தைபா கார்டன் என்ற அமைப்பு நூரானியின் கடும் உழைப்பு மற்றும் அந்த மக்களின் முன்னேற்றத்திற்காக செய்த தியாகத்தின் விளைவாகும்.

இன்று அங்கே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மார்க்க மற்றும் பெளதீக கல்வியை பெறுகிறார்கள் என்பது
சிறிய விஷயமல்ல.
மக்கள் அதை அறியாமல் அத்தகைய இடத்தை அடைய பயப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களில் நூரானி அங்குள்ள நிறுவனங்களின் தற்போதைய தரத்தை பேஸ்புக் லைவ் மூலம் காட்டியபோது
நான் ஆச்சரியப்பட்டேன்.

விசாலமான வளாகங்கள். மிகவும் புதுமையான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மாணவர்களின் மன ஆரோக்கியத்தை இலக்காகக் கொண்ட திட்டங்கள் எல்லாவற்றையும் மிகவும் அழகாக்கியுள்ளன.

மர்கஸிலிருந்து பட்டம் பெற்று வெளியேறி வருகிற இதுபோன்ற பல நூரானிகள், சகாஃபிகள் மற்றும் ரப்பானிமார்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில்
இதுபோன்ற மார்க்க கல்வி மற்றும் சேவை செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் எங்கள் நிதி மற்றும் மன ஆதரவைப் பெறத் தகுதியானவர்கள். வாருங்கள் இணைவோம் 💎💚💚

அவரது பேஸ்புக் நேரலையைப் பார்ப்பதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் பார்ப்பதும் மீதமுள்ளவற்றைப் பற்றி மேலும் அறிய உதவியாக இருக்கும்! !!💚💚💎💎💎💎💎💎💎
#samasthacentenary
#SSFKerala
#MarkazKnowledgeCity