Sirajudheen Ahsani
எழுத்தாளர்

முஸ்லிம்கள் தங்கள்
குழந்தைகளுக்குச் சிறு பிராயத்திலேயே
சிறுநீர் கழித்த பிறகு கழுவவும், பல் துலக்கவும் கற்றுக் கொடுப்பார்கள்.
பள்ளிக்கூடத்துக்குச் செல்ல கட்டாயப்படுத்துவார்கள்.
இதற்கிடையில் மதரசாவுக்கு அனுப்பி மதத்தையும் கற்றுக் கொடுப்பார்கள். சீருடையுடன், ஹிஜாப் அணிய அறிவுறுத்துவார்கள்.
லஞ்சம், வட்டி, மது, புறம் பேசுதல் ஆகியவை ஹராம் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். இப்படி பல விஷயங்கள்.
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை புனித குர்ஆனும், புனித நபியின் வாழ்க்கைப் பாடங்களும் ஆகும்.

18 வயதிற்குப் பிறகும்,
பலர் தங்கள் பெற்றோரின் இத்தகைய அறிவுரைகளையும்,
நெறிமுறைகளையும் பின்பற்றுவார்கள்.

சிலர் அதில் தர்க்கத்தையும், சுயசிந்தனையும் காண்பார்கள்.
அவர்கள் இஸ்லாத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். அவர்கள் மீண்டும் வேதத்தைப் படித்து தங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்கக் கூடும். அனைத்து குழந்தைகளும் ஒரு தூய இயல்புடன் (முஸ்லிம்களாக) பிறக்கிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்கள் முஸ்லிம்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடர முடிவு செய்துவிட்டார்கள் என்று இதற்கு அர்த்தம்.

தண்ணீரில் மிதக்கும் மரத்தைப் போல புதுப்பிக்காமல் பலரும் மிதக்கலாம். இவர்கள்
மதத்தை ஒரு லேபிளாக மட்டுமே கொண்டு நடப்பவர்கள். இவர்கள் எங்காவது சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான் புனித குர்ஆன் விசுவாசிகளை நோக்கி, "முழுமையாக நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறுகிறது.

வேறு சிலர் வயதுக்கு வந்தவுடன், தங்கள் பெற்றோர் தங்கள் இளமைப் பருவத்தில் கற்பித்ததைக் கைவிட்டு விடுவார்கள்.
X முஸ்லிம்களாக மாறி அவர்கள் விரும்பிய பல "சுதந்திரங்களை" மீட்டெடுத்து கொள்வார்கள். யாரும் அவர்களைத் தடுக்க இயலாது.
X முஸ்லிம்கள் கூட தங்களுக்கென அமைப்புகளை உருவாக்கி இயக்குகிறார்கள்.

தங்களைப் படைத்த இவைனை மறுத்துப் பேசவும் மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது.
அது அவர்களால் அவர்களுக்காகத் தேர்வு செய்த சொந்த விஷயமாகும். இறைவன் மதத்தின் மீது எந்த நிர்பந்தத்தையும் விதிக்கவில்லை என்பதால் படைப்புகள் பிடிவாதம் பிடிக்க தேவையில்லை.

ஹிஜாப் அணியவோ அல்லது அகற்றவோ சுதந்திரம் உள்ளது. இரண்டும் வெவ்வேறு இரண்டு மதங்கள் அல்லவா? ஆனாலும் கன்னியாஸ்திரிகள் உட்பட ஹிஜாப் அணிந்த முஸ்லிம் குழந்தைகளைப் பார்த்து பயந்து அவர்களின் கல்வியைத் தடுப்பது வெறுப்பின் காரணமாகும்.
அதற்கான தூண்டுதல் வகுப்புவாதம் ஆகும்.

சீருடையுடன் கூடிய ஹிஜாபை கண்டு பயப்படுபவர்கள் புகைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.

தமிழில்: M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.