உஸ்தாதின் மனிதாபிமான பணிகளை உணர்ந்து பெருமைப்படுத்தும் மலேசியா பத்திரிகை

உஸ்தாதின் மனிதாபிமான பணிகளை உணர்ந்து பெருமைப்படுத்தும் மலேசியா பத்திரிகை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மலேசிய செய்தித்தாள்
ஷெய்குனா ஏ.பி உஸ்தாத் குறித்து பெருமையுடன் வெளியிட்ட செய்தி...

சர்வதேச மஅல் ஹிஜ்ரா விருது வென்றவர் ஏமனில் இந்தியப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது..

மலேசிய செய்தித்தாளான உத்துசன் மலேசியா கழிந்த தினம் இந்தக் கட்டுரையை வெளியிட்டது.
அதன் சில வரிகள் இங்கே
நாம் பார்ப்போம்...

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முன்வந்த 2023 மலேசியா மஅல் ஹிஜ்ரா விருது வென்ற ஷேக் அபுபக்கர் அகமது குறித்து மலேசியா மிகவும் பெருமை கொள்கிறது.
இந்த முயற்சியின் மூலம் இந்தியன் கிராண்ட் முஃப்தி தனது மனிதாபிமான மற்றும் அமைதியான அணுகுமுறையை எடுத்துக்காட்டியதாக மலேசிய மத விவகார அமைச்சர் டாக்டர் முஹம்மது நயீம் முக்தார்
எடுத்துக் கூறியுள்ளார்...

ஏமனில் கொல்லப்பட்ட உள்ளூர் இளைஞனின் குடும்பத்தினருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவை அவரால் திறக்க முடிந்தது.
முந்தைய அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த சூழ்நிலையில் அவரது முயற்சி நம்பிக்கையின் பாதையைத் திறந்தது. இதன் மூலம், இஸ்லாம் முன்வைக்கும் அன்பு மற்றும் இரக்கத்தின் மகத்தான செய்தியை அவர் பிரதிபலிக்க முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷேக் அபுபக்கரின் பங்களிப்புகளை உலகளவில் அங்கீகரித்த முதல் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.
இதைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதனால்தான் அந்த நாடு அவருக்கு சர்வதேச விருதை வழங்கி கௌரவித்தது. மேற்கண்ட சம்பவம் ஷேக் அபுபக்கரின் அமைதி முயற்சிகள் இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச அளவில் பரவுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறி அமைச்சர் தனது கருத்துக்களை முடிக்கிறார்.

தமிழில்..
M.சிராஜுத்தீன்
அஹ்ஸனி..