பயங்கரவாதம் எதற்கும் பரிகாரம் அல்ல
பயங்கரவாதம் எதற்கும் பரிகாரம் அல்ல..
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சமூகத்தின் மனசாட்சியை
உறைய வைக்கும் கொடூரம் என்றும்,
இது போன்ற பயங்கரவாதத்திற்கு
எந்த நியாயமும்
இல்லை என கேரளா SSF
செயலகம் கருத்து தெரிவித்து உள்ளது..
ஒரு இடைவேளைக்குப் பிறகு காஷ்மீரிலிருந்து கேட்ட மோசமான செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது. அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் வாழும் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை சிதைக்கும் தீவிரவாத நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. காஷ்மீர் பள்ளத்தாக்கு எல்லா காலமும் அமைதியின்றி நிலை கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் வாழ்க்கை நிம்மதியின்றி உருகி கரைந்து போக நினைப்பவர்கள் உலக நன்மைக்கும் அன்புக்கும் எதிரிகள். தற்காலிக அரசியல் சுயநல இலாபங்களுக்காக ஒரு மக்களின் அமைதியை பறித்து அவர்களை கண்ணீர் சிந்த வைத்து
வாழும் இருள் சக்திகளுக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் சுற்றுலாவையே இந்த மாபாதக செயலைச் செய்வதற்கு தேர்ந்தெடுத்ததில் துல்லிய நோக்கம் இருக்கிறது.
முகம் பார்க்காமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்..
நாடு அதற்கு எதிரான எந்தவொரு நகர்வையும் எதிர்க்கவும், முறியடிக்கவும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையில் இணைவதுடன் தீவிரவாத செயல்களை முறியடிக்க போராடும் காஷ்மீர் மக்களுக்கு அனைத்து ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும்..
அனைத்து வன்முறைகளும் கொடுமையானது.
அது மனித இயல்பு அல்ல. மனிதாபிமானமற்ற மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
வன்முறை தீர்வுகளாக, பதில்களாக முன்வைக்கப்படும் சித்தாந்த உள்ளடக்கமும் கேள்வி கேட்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களோடடு நிற்பதுடன் தொடர்ந்து இது போன்ற வன்முறை சம்பவங்களையும் அதிக எச்சரிக்கையுடன் அணுகவும், உரிய மற்றும் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவும் நமக்கு இயல வேண்டும்..
இது போன்ற குற்றங்களை மதங்களின் பெயரால்
எழுதி விசயத்தின் தீவிரத்தை இழந்து விட வேண்டாம்.
அரசியல் நலன்களுக்காக
இது போன்ற
கொடுமைகளை தவறாக பயன்படுத்துவது
தீவிரவாதத்தை போலவே எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்..
அரசியலின் கொடி வண்ணங்களை தாண்டி மனித மதிப்புகள் காக்கப்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட முன் வர வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் இத்தகைய சிந்தனைகளை அகற்றுவதற்கு மக்கள் விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்
என கேரளா SSF.
செயலகம் கருத்து தெரிவித்துள்ளது.
SSF.. KERALA