அரபிகள் பிறருக்கு உதவி செய்யும் விதம்

அரபிகள் பிறருக்கு உதவி செய்யும் விதம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வளைகுடா நாடுகளில் அரபிகள் பிறருக்கு உதவி செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்...

இன்று காய்கறி வாங்க சென்ற போது ஒரு காட்சியை பார்த்தேன்.ஒரு அரபு நாட்டு பையன் தற்பூசனி வாங்கும் போது கடையில் நிற்கும் அவனை ஒரு வயதான முதியவர் பார்க்கிறார்.

அந்த பார்வையை புரிந்து கொண்ட அந்த பையன் மற்றொரு தற்பூசனியை வாங்கி அதற்கான விலையும் கொடுத்துவிட்டு இதை அந்த பெரியவரிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லி விட்டு வாகனத்தில் ஏறி சென்று விட்டான்...

அந்த முதியவரின் இரண்டு நன்றி வார்த்தைகளை கூட கேட்க நிற்காமல் வண்டியை எடுத்து சென்ற அரபி பையனை பார்த்து நிற்கும் எனக்கு மகிழ்ச்சியே அடக்க முடியவில்லை. காரணம் என் ரப்பு எவ்வளவு அழகாக தன் அடிமைகளை வாழ கற்று கொடுத்துள்ளான்.

இப்படி ஏராளமான அரபிகள் உண்டு.
நோன்பு மாதத்தில் வெளிநாட்டவர்களுக்கு முப்பது நாள் இஃப்தார் உணவு வழங்கும் அரபிகளை அந்த பகுதியில் பார்க்க முடியாது.

இதெல்லாம் நான் தான் கொடுத்தேன் என்று கூட பிறருக்கு அவர்கள் தெரியப்படுத்தமாட்டார்கள்

நோன்பாளிகளுக்கு வீட்டில் செய்யும் பலகாரங்களை வழங்குவதற்க்காக வண்டியிலிருந்து இறங்கி பிறர் பார்க்க வலம் வரமாட்டார்கள்(சீன் போடமாட்டார்கள்)

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் யாராவது முன்னில் வந்து கை நீட்டினால் எவ்வளவு அழகான முறையில் மிக மறைவாக ஸதகா கொடுக்கிறாங்க.

இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் படிப்பினைகள் நிறைய இருக்கிறது.

நாம் வழங்கும் சேவைகளை,உதவிகளை எவரையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. நாம் நன்மைநாடி செய்வதாக இருந்தால் கட்டாயம் அதை பார்க்க கூடியவன் பார்த்து கொண்டுதான் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முகம் காட்டாமல் நம்மிடம் இருக்கும் பொருளை பிறருக்கு வழங்கும் போது சில வேளை நாம் அறியப்படாமல் போகலாம்.ஆனால் அனைத்தையும் பார்ப்பவனுக்கு முன்னால் நம்மைவிட உயர்ந்தவர் யாருமில்லை.

பெரிய வீடை பார்த்து, சிறிய வீடை பார்த்து,நமக்கு தெரிந்தவர்,நம்மிடம் நல்ல விதமாக நடந்து கொள்பவர்,நமக்கு நெருக்கமானவர்,என்று தரம் பிரித்து உதவிகள் வழங்காமல் எவருக்கு தேவையோ அவரை கண்டறிந்து அவருக்கு முன்னுரிமை அளித்து உதவிகள் செய்ய நாம் முயற்சிக்க வேண்டும்.

சொந்தம் கையிலுள்ளது நாளைக்காக எடுத்து வைக்காமல் இன்று பசியுடன் அல்லல்படும் மனிதர்களை தேடி இறங்கி செல்லுங்கள்.

ஸதக்கா செய்தவன் பட்டினி கிடந்து மரணித்த வரலாறு கிடையாது.

முதலாளிகள் ஏழை மக்களை கண்டறிந்து கொள்ளுங்கள்.ஏழைகளுக்கும் பணம் தேவைபடுவோருக்கும் உதவுவது நமது பொறுப்பு என்று எண்ணுங்கள்.பெயர் புகழ் சம்பாதிப்பது நமது நோக்கமல்ல.

கொடிய வறுமையும், கொடூர நோயும் ருத்ர தாண்டவமாடும் இக்காலத்தில் இறைவனின் அருட் பார்வை கிடைக்க இதைவிட நல்ல ஒரு வாய்ப்பு இல்லை என்று புரிந்து கொள்வோம்...

தமிழாக்கம்.
மவ்லவி.M.சிராஜூத்தீன் அஹ்ஸனி..

இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்