ஷெய்க் அஸ்ஸெய்யித் ஹபீப் உமர்...இஸ்லாமிய பிரச்சாரகர்களுக்கு ஒரு முன் மாதிரி......

ஷெய்க் அஸ்ஸெய்யித் ஹபீப் உமர்...இஸ்லாமிய பிரச்சாரகர்களுக்கு ஒரு முன் மாதிரி......

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஷெய்க் அஸ்ஸெய்யித்
ஹபீப் உமர்...

இஸ்லாமிய பிரச்சாரகர்களுக்கு ஒரு முன் மாதிரி......

________________________________________

ஷெய்க் அஸ்ஸெய்யித்
ஹபீப் உமர்

இஸ்லாமிய பிரச்சாரகர்களுக்கு ஒரு முன்மாதிரி

அஸ்ஸெய்யித் ஷெய்க் ஹபீப் உமர் அவர்கள் என் நாட்டின் ஹழரமவ்த் நகரத்தில் 1963-மே மாதம் 27-ம் நாள் பிறந்தார்கள். பெருமானார் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் பிறந்த ஷெய்க் அவர்கள் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் ஆனார்கள்.

எமன் நாட்டின் முப்தியாக இருந்த ஹபீப் முஹம்மது ஸலீம் அவர்களிடம் ஆரம்ப கல்வியை கற்றஷெய்க் அவர்கள் முஹம்மது பின் அலவி, பழ்ல் பா பழ்ல் போன்றபுகழ் பெற்ற அறிஞர்களிடமும் கல்வி பயின்றுள்ளார்கள். ஷெய்க் அவர்கள் தாருல் முஸ்தபா என்றகல்லூரியை நிறுவி ஏராளமான உலமாக்களையும் ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்துக்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ள ஷெய்க் அவர்கள் பல நூற்களையும் எழுதி புகழ் பெற்றுள்ளார்கள்.

ஷெய்க் ஹபீப் உமர் அவர்கள் மார்க்கப் பிரச்சாரத்தில் விவேகத்தையும் நுண்ணறிவையும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கு கீழ்காணும் வரலாற்று நிகழ்வு சான்றாய் அமைகிறது.

யமனில் பைதா நகரத்தில் சில இளைஞர்கள் (புள்ளிங்கோ) ஷெய்க் அவர்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரின் ஆடையையும் வேஷத்தையும் கண்ட அவர்கள் அவர் அறிஞர் என்பதைப்புரிந்து கொண்டு அவரிடம் கேட்டார்கள், உஸ்தாது அவர்களே ! கால்பந்து விளையாடுவது ஹறாமா ? சாதாரணமாக நாம் பார்த்து அறிமுகமான மார்க்க அறிஞர்களிடம் நாம் எதிர்பார்க்கும் பதில் எவ்வாறு இருக்கும்.


ஒரு பதில்:

”உங்களுடைய எண்ணங்களை சரிசெய்ய வேண்டும் இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் செய்ய நல்ல ஆரோக்கியம் பெற்று கொள்வதற்காக நான் விளையாடு கிறேன்.
என்று நிய்யத் செய்ய வேண்டும்.

வேறொரு பதில் : இது நல்ல ஒரு ஏற்பாடல்ல

அர்ஜென்டினா பிரேசில் என்று சொல்லி எதற்காக சண்டை சச்சரவுகளை உங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்?

ஆனால் ஷைக் என்ன சொன்னார்கள் தெரியுமா ? இளைஞர்களின் இக்கேள்வியை கேட்டு சிரித்தார். பிறகு சொன்னார் "மக்களே ! கால்பந்து விளையாட்டு ஹராமென உங்களிடம் சொன்னவர் யார் ? விளையாட்டு உங்களுக்கு விருப்பம்தானே, உங்களின் விளையாட்டை பார்க்க எனக்கும் ஆசையாக இருக்கிறது. விளையாட்டு மைதானத்தை காட்டி தந்தால் நானும் உங்களுடன் வருகிறேன்."

இப்பதிலை கேட்ட இளைஞர்கள் பிரமித்து போனார்கள். இப்படியும் ஒரு உஸ்தாதா ? அவர்களின் பிரமிப்பு மகிழ்ச்சியாக மாறத்தொடங்கியது. பிறகுள்ள எல்லா தினங்களும் ஷைக் விளையாட்டை காணச்செல்வார்கள். விளையாடுகிறவர்களை உற்சாபப்படுத்துவார்கள்

இது அப்படியே தொடர்ந்தது.
ஒரு தினம் இளைஞர்கள் வருத்தத்துடன் சொன்னார்கள்.
ஒரு டூர்ணமென்ட் நடத்த ஆசைப்படுகிறோம் ஆனால் கோப்பை வாங்க காசில்லை கேப்டன் ஷைக் அவர்களிடம் இதை சொல்லி தலை சொறிந்து நின்றபோது ஷெய்க் அவர்கள் பரிவோடு சொன்னார்கள் கவலைப்படாதீர்கள் அதை நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன்.இப்பதில் இளைஞர்களை தலைசுத்த வைத்துவிட்டது.
இவர் என்ன நினைத்து இதை வாங்கித்தருகிறார் இவரை புரிந்துகொள்ள முடியவில்லையே.


டூர்ணமெண்ட் தினம் வந்தபோது கையில் ஒரு கோப்பையுடன் ஷைக் வந்து நின்றார்கள். தான் தர்ஸ் நடத்தி கிடைக்கும் மிகக்குறைவான பணத்திலிருந்து கோப்பை வாங்குவதற்கான பணத்தை சேமித்து வைத்து வாங்கியது. இதை புரிந்துகொண்ட இளைஞர்களுக்கு ஷைக் மீது அளவற்ற அன்பு உருவாகத் தொடங்கியது. அன்று விளையாட்டு முடிந்து போகும் போது ஷைக் வாலிபர்களை அழைத்து சொன்னார்கள், நாளைய தினமும் வெற்றி பெறுபவர்களுக்கு எனது வகை கோப்பை உண்டு. ஆனால் எனக்காக நீங்கள் அனைவரும் ஒரு காரியம் செய்து தரவேண்டும்.

நாளைய தினம் நீங்கள் விளையாட்டு மைதானத்தில் இறங்கும்போது நீங்கள் அணிந்திருக்கும் கால் டவுசரை மாற்றி பேண்ட் போடவேண்டும் முடியுமா ? உங்களின் அவ்றத் மறையும் என் மனதுக்கு சமாதானமும் கிடைக்கும்.

ஓ அப்படியே செய்யலாம் உஸ்தாது என்று சொல்லி அனைவரும் பிரிந்து சென்றனர்.

அடுத்தநாள் முதல் மைதானத்தில் புதியதொரு காட்சி விளையாட்டு வாலிபர்கள் அனைவரும் பேண்ட் அணிந்து விளையாடத் தொடங்கினர்.

இளைஞர்களுக்கும் மகிழ்ச்சி, அதைவிட ஷைக் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி, அன்று வெற்றியாளர்களுக்கு ஸ்பான்ஸர் செய்த கோப்பை கிடைத்தது.

பிரிந்து செல்லும் வேளையில் ஷைக் அவர்கள் அவ்வாலிபர்களை அழைத்துச் சொன்னார்கள்.

என் கண்மணிகளே ! இவ்வளவு நாட்கள் நான் உங்களுக்காக இங்கே வந்தேன், உங்களுடைய விளையாட்டை ரசித்தேன், உங்களோடு இருந்தேன். நான் வழமையாக இருக்கும் ஒரு இடமுண்டு உங்களுக்கு பிரச்சினையில்லையெனில் அங்கே கொஞ்ச நேரம் என்னுடன் உங்களின் நேரத்தை செலவிடலாமே?


எவ்வளவு கண்ணியமான எளிமையான வேண்டுகோள். தானொரு பெரிய ஆலிம் என்றகர்வம் இல்லை. வயதில் மூத்தவன் என்ற அகம்பாவம் இல்லை. இவர்களை திருத்திவிட்டே தான் அடங்குவேன் என்றபிடிவாதமில்லை. மிகமிக எளிமையான இவ்வேண்டுகோளை கேட்டவர்களுக்கு அதை மறுத்துரைக்க இயலாது.

இளைஞர்கள் கொஞ்சம் தயங்கினார்கள், கேப்டன் அவர்களின் தயக்கத்தை ஷைக் அவர்களிடம் சொன்னான். "அய்யோ அது ஷைக் அவர்களின் மஜ்லிஸல்லவா அங்கு நாங்கள் எப்படி வரமுடியும். அங்கே ஏராளமான அறிஞர்களும் பெரிய பெரிய சிஷ்யர்களும் இருப்பார்களே"

ஷைக் சொன்னார்கள் பரவாயில்லை

நான் ஒரு நேரத்தை சொல்கிறேன். அந்த நேரத்தில் நானும் நீங்களும் மட்டும்தான் இருப்போம் இப்பதிலை கேட்ட இளைஞர்கள் திகைத்து நின்றனர்.

ஹபீப் உமர் நமக்காக நேரம் செலவழிப்பார்களா?

ஷைக் அவர்களின் பணிவும், அவர்கள் நடந்துகொண்டவிதமும், கண்ணியமான அவர்களின் பேச்சும், அவர்களின் முகமலர்ச்சியும் இளைஞர்களின் இதயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரவுடிகள், பொறுக்கிகள், என்று ஊர்மக்கள் நம்மை அழைக்கும் வேளையில் ஒரு மார்க்க அறிஞர் நமக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் தருகிறாரா என இளைஞர்கள் சிந்திக்க தொடங்கினர்.

சில தினங்களுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் ஹபீப் உமரின் வகுப்பிற்கு வர தொடங்கினர். தொழுகையை வழமையாக்கினார். பாடங்களை கொஞ்சம் கொஞ்சமாக கற்க தொடங்கினர். இஸ்லாம் எவ்வளவு அழகான, அன்பான மதம் என புரிந்துகொள்ள துவங்கினர்.

பிறகு என்ன ?
அன்றைய கால்பந்தாட்ட வீரர்கள் இன்று பைதா நகரத்தின் புகழ்பெற்றமார்க்க அறிஞர்களாக திகழ்கின்றனர்.

பக்குவபடுத்துதல் என முழு அர்த்தத்தோடு சொல்வதற்கு மிகத் தகுதியானது ஷெய்க் ஹபீப் உமர் அவர்களின் இச்செயலையே ஆகும்.

பேன்ட் இட்டாலும் ஃபெர்முட இட்டாலும், தலைப்பாகை கட்டினாலும், இல்லாவிட்டாலும் அல்லாஹ் தன்னிடம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தகுதியை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்தத்தகுதியை அவனே அளந்து பார்க்கவும் செய்வான். அதில் பிறர் தலையிடத் தேவையில்லை.

அவன் ஏன் பான்ட் இடாமல் பர்முடா அணிந்து நடக்கிறான்? அவள் ஏன் பர்தா இடாமல் நடக்கிறாள் ? கல்லூரிக்குப்படிக்க போனபின் அவன் ஆளே மாறிவிட்டான் என்றெல்லாம் பிறரின் நடத்தைகளை கவனித்து மார்க் இடுவதில் ஆலிம்களும் உள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம்.

அறிவும், பக்குவமும் கைவரப்பெற்றவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்களாவர். அவர்கள் ஷெய்க் ஹபீப் உமர் அவர்களைப் போல பிறரை பக்குவப்படுத்தி, நேர்வழி செலுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பர் அல்லாதவர் பிறரின் நடத்தைகளைக் கண்காணித்து மார்க் இடுவதில் காலத்தை விரயம் செய்துகொண்டே இருப்பர்.

தமிழாக்கம்.
மவ்லவி.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி

இயக்குனர் :
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்