மாநபியின் இரு பெயர்களான முஹம்மத் அஹ்மத் ஆகியவற்றின் சிறப்பை விவரிக்கும் நூல்
அஸ்ஸலாமு அலைக்கும்..
காருண்யநபி
சிறப்பை விவரிக்கும் மூன்றாவது
நூல் வெளியீடு.
அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500_ வது பிறந்த நாளை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சங்கையான ரபீஉல் அவ்வல் மாதத்தில் சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் (SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு எத்தி வைக்கும் நோக்கில் வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
முஹம்மது அஹ்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
எனும் தலைப்பில் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களின்
இரு நாமங்களை விவரிக்கும் மூன்றாவது_புத்தகம்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் குமரி மாவட்ட செயலாளர் மெளலவி
I.அஹ்மத் சுல்தான் அன்வரி அவர்களின்
இல்லத்தில் இன்றைய தினம்
நடைபெற்ற மவ்லிது மஜ்லிஸில்
வைத்து அவர் வெளியிட
திருவிதாங்கோடு அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி பேராசிரியர்
மெளலானா மௌலவி
அல் ஹாஃபிழ் இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..
சுவாமியார்மடம் ஷாகுல் ஹமீதிய்யா அரபிக் மதரசா ஸத்ர் முஅல்லிம்
J.ஸெய்யித் அன்வரி அவர்கள் மற்றும் குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் பொருளாளர் முகம்மது ஃபாஸில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...
ஆமீன் யா றப்பல் ஆலமீன்
அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..