ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 17
Sirajudheen Ahsani
எழுத்தாளர்
ரமலானில் 4 காரியங்களை குறிப்பாக அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இரண்டு காரியங்கள் அல்லாஹ்வை திருப்திப்படுத்துபவை
இரண்டு காரியங்கள் உங்களுக்கு மிக அவசியமானவை.
فاستكثروا فيه من أربع خصال : خصلتين ترضون بهما ربكم ، وخصلتين لا غنى بكم عنهما: فأما الخصلتان اللتان ترضون بهما ربكم : فشهادة أن لا إله إلا الله ، وتستغفرونه ، وأما اللتان لا غنى بكم عنهما : فتسألون الله الجنة ، وتعوذون به من النار ،
அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் இரண்டு காரியங்கள்.
நிறைய லாயிலாக இல்லல்லாஹ் என்ற திக்ரைச் சொல்லுவது.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது
உங்களுக்கு மிகவும் அவசியமான இரண்டு காரியங்கள்..
அல்லாஹ்விடம் சுவனத்தை கேட்பது,
நரகத்தை விட்டு பாதுகாவல் தேடுவது....