ரமளான் சிந்தனைகள் பாகம் 28
ரமளான் சிந்தனைகள்
பிறை... 28
பித்ரு_ஜக்காத்துக்கும்
கூட்டு_குர்பானி_கதியா
✍️abu haashima
ஷவ்வால் பிறையை பார்த்தாலோ
ரமளான் முப்பது பூர்த்தியானாலோ
பெருநாள் தொழுகைக்கு முன் பித்ரு ஜகாத் கொடுப்பது வசதியுள்ளவர்கள் மீது கடமை.
அதை அரிசி , கோதுமை போன்ற தானியங்களாகத்தான் கொடுக்க வேண்டுமா ?
காலம் எவ்வளவோ மாறி விட்டது.
டிஜிட்டல் யுகம் ஆகி விட்டது.
இப்போதும் அரிசியை சுமந்து கொண்டு அலைய வேண்டுமா ?
காலத்துக்கு ஏற்ப மாற வேண்டாமா
என்று பலர் கேட்கிறார்கள்.
ரஸூலுல்லாஹ் காலத்திலும்
நாணயம் இருந்தது .
ஜக்காத்தை பணமாகவும்
பொருட்களாகவும்
கால்நடைகளாகவும்
வசூலிக்கச் சொன்ன பெருமானார்தான்
பித்ரு ஜகாத்தை தானியமாக கொடுக்கச் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை செய்வதுதான்
நம்ம கடமை.
பித்ரு ஜக்காத் கொடுப்பதால்தான்
ஈதுல் பித்ர் என்று நோன்புப் பெருநாள்
அழைக்கப்படுகிறது.
இதை பணமாக கொடுக்கலாம் என்றால் ...
ஹஜ் பெருநாளின்போது
ஆடு மாடுகளை விலை கொடுத்து வாங்கி
அறுத்து பங்கிட்டு மாமிசத்தை தேடித் தேடி வழங்குவதை விட அதையும் பணமாக வழங்கி விடலாமே என்று சொல்ல
ஒரு கூட்டம் கிளம்பும்.
இப்போதே கூட்டு குர்பானி பெயரில் அதுதான் நடைபெறுகிறது.
பித்ரு ஜகாத்தையும்
கூட்டு குர்பானி கொடுத்துராதிங்க
பெரியவங்களே.
#விடுபட்டுப்போன_போனஸ்_தகவல் ....
ரமளானுக்கு பித்ர் ஜகாத்தாக அரிசி மட்டுமே வழங்கப்படுவதில்லை.
ரமளான் முழுவதும் ஜக்காத்தும்
பணமாக வழங்கப்படுகிறது.
#கவனிக்க ..
#பணமாக_ஜக்காத்_வழங்கப்படுகிறது.
அதைக்கொண்டு
உடைகள் வாங்கலாம் .
பல சரக்குப் பொருட்கள் வாங்கலாம்.
கறி வாங்கலாம்.
கடன்களை தீர்க்கலாம் .
தேவையான வீட்டு உபயோகப்
பொருட்கள் வாங்கலாம்.
பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தலாம்.
மருத்துவ தேவைகளை நிறைவேற்றலாம்.
கல்யாணத்துக்கு நகைகள் வாங்கலாம் .
குடும்பத் தேவைகளை நிறைவேற்றலாம்.
பிரியானி அரிசி கூட வாங்கலாம்.
பித்ரா தேவை நிறைவு பெற்றவர்கள்
தங்களுக்கு மேலும் மேலும் வேண்டாம் என்று அதை மறுக்கலாம்.
தேவையுடைய மற்றவர்களுக்கு அதை
வழங்கச் சொல்லலாம்.