ரமளான் சிந்தனைகள் பாகம் 29
ரமளான் சிந்தனைகள்
பிறை... 29
பித்ரா_அரசியலா
பித்னா_அரசியலா?
✍️ Abu Haashima
கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமான அலப்பறைதான். இருந்தாலும் படிச்சு பாருங்க. அத்தனையும் 100% உண்மை.
#விடுபட்டுப்போன_போனஸ்_தகவல் ....
ரமளானுக்கு பித்ர் ஜகாத்தாக அரிசி மட்டுமே வழங்கப்படுவதில்லை.
ரமளான் முழுவதும் ஜக்காத்தும்
பணமாக வழங்கப்படுகிறது.
#கவனிக்க ..
#பணமாக_ஜக்காத்_வழங்கப்படுகிறது.
ஏதோ அரிசி மட்டுமே ரமளானில் வழங்கப்படுவதைப்போல சிலர்
சமூக பொருளாதார பாடமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜக்காத் முஸ்லிம்கள் மீதான
முக்கியக் கடமை.
ஜக்காத் கொடுக்க கடமையுள்ள முஸ்லிம்கள் ஜக்காத் கொடுக்கவே செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ரமாளானில் வழங்கப்படும்
ஜக்காத் தொகை மட்டும்
#பல_ஆயிரம்_கோடி_ரூபாய்.
அதைக்கொண்டு
உடைகள் வாங்கலாம் .
பல சரக்குப் பொருட்கள் வாங்கலாம்.
கறி வாங்கலாம்.
பிரியானி அரிசி வாங்கலாம்.
கடன்களை தீர்க்கலாம் .
தேவையான வீட்டு உபயோகப்
பொருட்கள் வாங்கலாம்.
பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்தலாம்.
மருத்துவ தேவைகளை நிறைவேற்றலாம்.
கல்யாணத்துக்கு நகைகள் வாங்கலாம் .
குடும்பத் தேவைகளை நிறைவேற்றலாம்.
வீடு கட்டலாம்.
மிச்ச பணத்தை பேங்க்ல கூட போடலாம்.
அப்படியெல்லாமா நடக்குதுன்னு
யாரும் சந்தேகப்படாதிங்க.
ஜக்காத் என்பது ஒரு வருட தேவைக்கானது.
அடுத்த வருட ரமளான் வரும்வரை
அதை பயன்படுத்திக் கொள்பவர்கள்
பலர் இருக்கிறார்கள்.
* ஜக்காத் நிதியில் கடை வைத்துக் கொடுத்து கைதூக்கி விடுபவர்கள்
* குமர்களை கரை சேர்ப்பவர்கள்
பலர் இருக்கிறார்கள்.
பித்ரா தேவை நிறைவு பெற்றவர்கள்
தங்களுக்கு மேலும் மேலும் பித்ரா வேண்டாம் என்று அதை வாங்க மறுக்கலாம்.
தேவையுடைய மற்றவர்களுக்கு
அதை வழங்கச் சொல்லலாம்.
தங்களுக்குத் தெரிந்த ஏழைகளுக்கு
அதை வாங்கிக் கொடுக்கவும் செய்யலாம்.
இதையெல்லாம் சுலபமா மறந்துவிட்டு
அரிசி மட்டுமே வழங்குவதாக நினைத்துக் கொண்டு சிலர் கதைப்பது வேடிக்கையாக
இருக்கிறது.
#அன்றைக்கு ( 2015 )
நண்பர் ஜுபைர் ஆலிமோடு குமரி ஜமாத்துகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன் .
இருவரும் நோன்பாளிகள்.
சரியான மழைக்காலம். மிக மோசமாக பழுதடைந்து பள்ளங்களாகிவிட்ட சாலைகள். பூத்துறையில் நோன்பு திறந்தோம். எங்கள் பசியை தணிப்பதற்கு ஒரு கோப்பை கஞ்சி கிடைக்கவில்லை.
யாரும் தரவில்லை.
ஒரு சாயா குடித்தால் கூட போதுமானது என நினைத்து நானோ காரில் புறப்பட்டோம்.
காலையிலிருந்தே அலைந்ததில் இருவருக்கும் சரியான பசி.
கடும் மழையோடு பயணித்து
பூத்துறையிலிருந்து அழகிய மண்டபம்
ஜங்ஷன் வந்து சேர்வதுவரை ஒரு டீக்கடைகூட கண்ணில் படவில்லை.
இரவு 9 மணியாகிவிட்டது .
அங்கே வந்துதான் ஒரு சாயா குடித்தோம்.
கைநிறைய பணம் இருக்கிறது.
ஆனால் ஒரு டீ குடிப்பதற்குக்கூட
அந்தப் பணம் உபயோகப்படவில்லை.
எதை எப்படி எப்போது யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நபிகள் நன்றாகவே கற்றுத் தந்திருக்கிறார்கள்.
ஜக்காத்தை பணமாகவும்
பித்ரு ஜகாத்தை தானியமாகவும் வழங்கச் சொன்ன நபிகளின் சொல்லைவிட
அறிவுபூர்வமான சொல் வேறெதுவும் இல்லை என்பதை அடக்கத்தோடு சொல்லி முடிக்கிறேன்.