முஹிம்மாத் தமிழ் மாநாடு காசர்கோடு 2024
காசர்கோடு முஹிம்மாத் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காசர்கோடு : கேரள மாநிலம் காசர்கோட்டில் இயங்கி வரும் முஹிம்மாத் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
கல்லூரியில் பத்தாண்டு காலம் பயின்ற நூறு இளம் உலமாக்களுக்கு
ஆலிம் ஹிமமி பட்டம் இந்தியன் கிராண்ட் முஃப்தி சுல்தானுல் உலமா AP அபூபக்கர் ஹழ்ரத் கிப்லா அவர்கள் வழங்கினார்கள்
முஹிம்மாத்தில் அரபிக் கல்லூரி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகள் அனாதை இல்லம் இஞ்சினியரிங் கல்லூரிகள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்களில் நான்காயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பட்டமளிப்பு விழாவையொட்டி முஹிம்மாத் நிறுவன தலைவர்
அஸ்ஸய்யிது தாஹிருல் அஹ்தல் தங்கள் அவர்களின் 18-வது உரூஸ் நிகழ்ச்சி நடைபெற்றது
மூன்று நாட்களாக நடைபெற்ற மாநாட்டில் மாபெரும் தமிழ் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான உலமாக்கள் உமராக்கள் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்
எஸ் எஸ் எப் தேசிய செயலாளர் #கமாலுதீன்_ஸகாஃபி மௌலவி #சிராஜுத்தீன்_அஹ்ஸனி , #அஹ்மத்_கபீர்_அல்தாஃபி #சுல்தான்_அஹ்மத்_அன்வரி, #பீர்_முஹம்மது_ஃபைஸி இன்னும் ஏராளமான உலமாக்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்