ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 30

ரமளான் பற்றிய நாயகத்தின் பொன்மொழிகள் பாகம் 30

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பற்றிய...
#நாயகத்தின்_நபிமொழிகள்...
#பிறை_30....

அமல்களில் சிறந்தது தொடர்படியாக செய்யப்படும் அமல்கள் தான்

عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها قَالَتْوَالَّذِي ذَهَبَ بِنَفْسِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَاتَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ وَهُوَ جَالِسٌ وَكَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَيْهِ الْعَمَلَ الصَّالِحَ الَّذِييَدُومُ عَلَيْهِ الْعَبْدُ وَإِنْ كَانَ يَسِيرًا (ابن ماجة)

இந்த சீசன் தொழுகையாளிகள் சீசனில் மட்டுமே தொழுகிறார்கள். வியாபாரிகளுக்குக் கூட சீசன் இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நேரங்களில் சாதாரணமாக வியாபாரம் நடைபெறும். சீசன் நேரங்களில் அதிகமாக வியாபாரம் நடைபெறும்

ஆனால் இங்கே ஒரு கேள்வி ? ஒரு வியாபாரி சீசன் நேரத்தில் மட்டுமே கடையை திறக்கிறார். மற்ற நேரங்களில் அவர் கடையை மூடியே வைத்திருக்கிறார். கடையை திறப்பதில்லை. இவருக்கு சீசன் வியாபாரம் கை கொடுக்குமா ? நிச்சயமாக கை கொடுக்காது

மற்ற நேரங்களில் வியாபாரம் செய்து பழகியவர் சீசனிலும் வியாபாரம் செய்தால் அதிக பலனைப் பெறலாம்

அதேபோல ரமழான் அல்லாத நேரங்களிலும் வணங்கியவர், ரமழானிலும் வணங்கினால் அதிக நன்மைகளைப் பெறலாமே தவிர, ரமழானில் மட்டும் அதிகம் வணங்கி, ரமழான் முடிந்தவுடன் பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் நன்மைகளைப் பெற முடியாது

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري)