இது ஒரு சாதாரண இழப்பு அல்ல
மஃதின் அகாதமி

இது ஒரு சாதாரண இழப்பு அல்ல

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

....#இதொரு_சாதாரண_இழப்பல்ல.....

அன்பிற்குரிய உஸ்தாத்
(அபுபக்கர் ஸகாஃபி அல் காமிலி) வஃபாத்தாகிவிட்டார்கள்.
இந்த வலியை என்னால் தாங்க முடியவில்லை.
இந்த சிறு குறிப்பின் மூலம் அவற்றை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
அவர் வாழ்வில் ஒரு கணம் கூட சும்மா இருந்ததில்லை என்று அவர்களின் வாழ்க்கையை அறிந்தவர்கள் அனைவரும் உறுதியாகக் கூறுவார்கள். அவர்களுடனான எந்த உரையாடலும் அறிவூட்டுவதாக இல்லாமல் இருந்ததில்லை..

வானவியல் சாஸ்திரம்,
மார்க்க சட்டவியல்,
வரலாறு,
வரலாற்று ஆய்வு,
ஆராய்ச்சி,
கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு போன்ற அறிவுசார் சூழலில் அவர் கால்பதிக்காத எந்த துறையும் இல்லை. உஸ்தாத் அவர்களின் நூலகத்தில்
பல விலைமதிப்பற்ற புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தொலைந்து போனதாக நாம் நம்பும் பல படைப்புகளின் மறுபதிப்புகள் எல்லாம் அவரது சேமிப்பில் உள்ளது.

உஸ்தாத் இவ்வுலகை விட்டு வெளியேறும் போது ​​அந்த பௌதிக உடல் மட்டுமல்ல.
எந்த உதாரணத்தைக் கொண்டு விவரிக்கனும்னு தெரியாத அளவுக்கு அவரது அறிவுத் திறனும்,
சேகரிப்பும் கூட நம்மிடமிருந்து மாய்ந்து போய்விடுகிறது.

மஃதின் ஸலவாத் நகரில் உள்ள பழைய மசூதியின் மேல் அறையில் எப்போதும் அகத்தி உஸ்தாதும்,
அதன் தொட்டு அருகில்
அவர்களின் விசாலமான குத்புகானாவும் (நூலகம்) இருந்தது.
அறிவார்ந்த நோக்கங்களுக்காக மட்டுமே அரிதாகவே அவர்கள் தங்கள் அறையை விட்டு வெளியேறினார்கள்.
இந்த ரபீஉல் அவ்வலில் லட்சத்தீவான அகத்தி தீவில் அவர்கள் புதிய வீடொன்று கட்டினார்கள்
வீட்டின் புதுமனை புகுவிழாவுக்கு முந்தைய நாள் தீவுக்குச் சென்ற அவர் விழா முடிந்து மறுநாள் விமானம் மூலம் மஃதினுக்குப் பறந்து வந்தவர்
தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.
இதுதான் அவர்களின் வாழ்க்கையின் சுருக்கமாக இருந்தது

பாடங்களில் உட்கார்ந்து இருக்கும்
சீடர்களை தனது சொந்த பிள்ளைகளாக கருதுவதை
ஆச்சரியத்துடன் அடிக்கடி
கவனித்து உள்ளேன்.
அவர் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தட்டச்சு, வடிவமைத்தல் மற்றும் மக்தபது ஷமிலாவைப் பயன்படுத்துதல் போன்ற நுட்பங்களைக் கற்பித்தார்..

அறிவார்ந்த பல காரியத்திலும்
உஸ்தாத் அவர்களின்
கருத்துக்களைத் தேடாத,
வானியல் ஆராய்ச்சியாளர்களோ அல்லது ஆய்வு மாணவர்களோ,
அறிஞர்களோ
இல்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

கேரளாவில் இஸ்லாமிய சமூகங்கள் வெளியிடும் நாட்காட்டிகளில் தொழுகை நேரம் மற்றும்
அரபி மாதத்தை நிர்ணயம் செய்வதில் அவர்கள் செய்த பங்களிப்புக்கு பகரம் வைக்க முடியாது..

கொஞ்சம் காலமாக உடல் ரீதியான பல சிரமங்கள் நேரிட்டு வந்தார்.
இருப்பினும் அவர் தனது அறிவு தேடுதல், பரப்புதல் விஷயங்களில் எவ்வித இடையூறுகள் ஏற்படாதபடி மிகவும் கவனமாக இருந்தார்.

ஷர்ஹு லக்துல் ஜவாஹிர்,
தச மஹா விருத்தங்கள்,
அறிவியல் கணக்கீடு மூலம்
தொழுகை டைமிங்ஸ்,
மார்க தர்ஷி,
ஷர்ஹு அகீதத்துல் அவாம், முஸ்தலாஹத்துல் ஃபிக்ஹ் ஷாஃபி போன்ற 100 க்கும் மேற்பட்ட வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத படைப்புகளை மிகவும் சுருங்கிய கால அளவில் உருவாக்கியுள்ளார்.

அகத்தி உஸ்தாத் தனது உயர்ந்த ஆளுமையால் நம்மில் பெரும்பாலோரை ஈர்க்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மலை போன்ற ஆழமான அறிவாற்றல் வேர்களால் சூழப்பட்ட அந்த வாழ்க்கை இவ்வுலகை விட்டு வெளியேறும்போது உருவாகும் குழியின் ஆழத்தை நாம் எவ்வாறு திட்டப் படுத்த முடியும்.

ஸெய்யித் இப்ராஹிம் கலீல் அல் புகாரி.

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி..