அகத்தி அபூபக்கர் உஸ்தாத் அறிஞர் உலகிற்கு மாபெரும் இழப்பு
மஃதின் அகாதமி

அகத்தி அபூபக்கர் உஸ்தாத் அறிஞர் உலகிற்கு மாபெரும் இழப்பு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அறிஞர்_உலகிற்கு_மாபெரும்_இழப்பு

மலப்புரம் மஃதின் அகாதமியின் பேராசிரியரும் மற்றும் முன்னணி வானியலாளர் அபூபக்கர் ஸகாஃபி (அகத்தி தீவு) அவர்களுடன் அதிகம்
பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மரணத்திற்குப் பிறகுதான் அந்தப் புலமையின் கண்ணியமும், வாழ்க்கையின் அடக்கமும் சமூக ஊடகங்களில் இருந்து அதிகம் அறிய முடிந்தது..

ஒருமுறை வளைகுடா பயணத்தில், துபாய் குவைத் மருத்துவமனை
அருகே உள்ள மசூதியில் மஃரிப் தொழுகை முடிந்து வெளியே வந்தபோது சிந்தனையாளர் #ஸஜீர்_புகாரி
சூஃபி எழுத்தாளர் #நுஹாசி ஆகியோருடன் இருந்த
அவரை சந்தித்து பேசி அறிமுகமானேன்.

மஃதின் அகாதமியில் கலீல் புகாரி தங்கள் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பல மாபெரும் மாநாடுகளில் ஒன்றில் கூட அவரை மேடையில் நான் பார்த்ததே இல்லை.

மாணவர்களுக்கு ரொம்பவும் பிடித்த, அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிற அகத்தி உஸ்தாத்
எப்போதும்
தத்ரீஸ் (கல்வி ககற்றுகொடுத்தல்) மற்றும் அதிக ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டு வந்தார்..

பல அரபு புத்தகங்களை எழுதிக்கொண்டே இருந்தாஞ
பல காலண்டர்களும்
தொழுகை நேரங்கள் தயார் செய்வது அவரது ஆராய்ச்சியிலிருந்து தான் என்பதை காண முடியும்.

அவர் எழுதிய மார்கதர்ஷி என்ற நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட ஒரு மலையாளப் புத்தகம் உண்டு.

முக்கிய அவ்ராதுகளின் தொகுப்பு தான் புத்தகத்தின் கருப்பொருளாக இருந்தாலும்
ஜகாத்தின் அறிவியல் அளவீடுகள்,
ஜம்உ_ கஸ்ர்
தொலைவு கணக்கீடு,
நஹ்ஸ் பற்றிய விரிவான தகவல்கள்,
நஹ்ஸின் உருவாக்கம்.
ஒரு சாதாரண அறிஞரும் கூட அவற்றைப் பயன்படுத்தக்கூடிய வகையில் அதில் அவர் தனது எழுத்தைக் கையாண்டுள்ளார்

அவரை நன்கு தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

ஷைகுனா சுல்தானுல் உலமாவின் அன்பிற்குரிய இந்த சீடரின் மறைவு அறிஞர் உலகிற்கு மாபெரும் இழப்பாகும்.

அண்ணல் நபியின் ஜிவாரில் அல்லாஹ் நம்மையும் அவரையும் இணைத்து வைப்பானாக.

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி...