மாநபி சிறப்பை விவரிக்கும் எட்டாவது நூல் வெளியீடு

மாநபி சிறப்பை விவரிக்கும் எட்டாவது நூல் வெளியீடு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்..

#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #எட்டாவது_நூல்_வெளியீடு.

அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது மீலாத் விழாவை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.

இந்த சங்கையான மாநபியின்
1500_ மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
(SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

மகத்தான சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காலங்களாக பணிவிடைகள் புரிந்த அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அவர்கள் குறித்து விவரிக்கும் புத்தகம் இன்றைய தினம் சென்னை மாநகரில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுவரும்
#ஜாமிஆ_நாஸிருஸ்ஸுன்னா
அரபிக் கல்லூரியில் வைத்து
வெளியிடப்பட்டது..

நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியின்
பேராசிரியர் மெளலானா மெளலவி ஆஷிக் மஹ்ழரி ஹஸ்ரத்
ஹஸ்ரத் அவர்கள்
நூலின் முதல் பிரதியை வெளியிட தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர்
மெளலானா மெளலவி டாக்டர் எம்.#கமாலுத்தீன்_ஸகாஃபி
ஹஸ்ரத் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இந்த மகத்தான புத்தக வெளியீட்டு விழா மஜ்லிஸில் ஜாமிஆ நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரி மாணவர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...

இன்னும் மாநபியின்‌ சிறப்பைப் பறைசாற்றும் வகையில் ஏராளமான புத்தகங்களை வெளியிடும் நற்பாக்கியத்தை வழங்கியருள்வானாக

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங்‌ ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..