நாயகத்தின் மதிப்பான சேவகர் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹ அன்ஹு அவர்கள்

நாயகத்தின் மதிப்பான சேவகர் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹ அன்ஹு அவர்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1500வது மீலாது வருடத்தை முன்னிட்டு
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பான (எஸ்.எஸ்.எஃப்) சார்பில் மாநபியின் புகழை மக்களுக்கு எத்தி வைக்கும் நோக்கில் வெவ்வேறு தலைப்புகளில்
12 புத்தகங்கள் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரைக்கும் ஏழு புத்தகங்கள் வெளிவந்து விட்டது

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக
மகத்தான_சேவகர்
அனஸ்_இப்னு_மாலிக்
(ரழியல்லாஹு அன்ஹு)
எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காலங்களாக பணிவிடைகள் புரிந்த அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அவர்கள் குறித்து விவரிக்கும் புத்தகம் சென்னை ஜாமிஆ நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.

நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஆஷிக் மஹ்ழரி நூலின் முதல் பிரதியை வெளியிட தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் மாணவர் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் மௌலவி டாக்டர் எம்.கமாலுத்தீன் ஸகாஃபி பெற்றுக் கொண்டார்.

இந்த மகத்தான புத்தக வெளியீட்டு விழா மஜ்லிஸில் ஜாமிஆ நாஸிருஸ்ஸுன்னா அரபிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

செய்தி சேகரிப்பு
காயல் ஜெஸ்முதீன்