கொரோனா வைரஸ் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் 2

கொரோனா வைரஸ் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள் 2

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கொரோனா

இஸ்லாம்
கற்றுத்_தரும்
பாடங்கள்.

தொடர்=2.

கழிந்த தொடரில் கொரோனா வைரஸ் சம்பந்தமாக நாம் கொஞ்சம் விரிவாக பார்த்தோம். இனி இத்தொடரில் பொதுவாக தொற்று நோய்கள் வரும் போது ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், எச்சரிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இஸ்லாம் கூறும் பாடங்களை நாம் பார்ப்போம்.

1 :لا تخف..
*(அச்சப்படாமல் இருப்பது.)*

*தொற்று நோய் பாதிப்பு எல்லா இடங்களிலும் வேகமாக பரவி வரும் வேளையில் அத்தொற்று நம்மை அனுகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெ தவிர பயந்து பயந்து நம்மை நாமே அழிக்க வேண்டிய அவசியமில்லை.ஒரு முஸ்லிமை பொறுத்தவரை மிகவும் முக்கியமான விஷயம் தான் பயமில்லாமல் இருப்பது.முஃமின் என்று சொன்னாலே அச்சம் தீர்ந்தவன் என்று தானே அர்த்தம்.*

*அல்லாஹ்வின் விருப்பத்தை பெற்ற தன் நேசர்களை குறித்து குர்ஆன் அறிமுகப்படுத்துவதை கவனியுங்கள்.*

*آلا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. (يونس. ٦٢)
*விசுவாசிகளே! அறிந்து கொள்ளுங்கள்.நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு (நேசர்களுக்கு) யாதொரு பயமுமில்லை;அவர்கள் எவ்வித கவலையும் அடையமாட்டார்கள்.*

*குர்ஆனின் வேறு ஒரு இடத்தில் இவ்வாறு காண முடியும்.*

*ولا تهنوا ولا تحزنوا وانتم ألاعلون ان كنتم مؤمنين (آل عمران ١٤٩)

*(விசுவாசங்கொண்டோரே) நீங்கள் தைரியத்தை இழந்து விட வேண்டாம்.கவலையும் பட வேண்டாம்.(உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால். நீங்கள் தான் மிக்க மேலானவர்கள்.*

*எல்லா காரியங்களும் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் விதிப்படியே நடைபெறும் என்று நம்பக்கூடிய ஒரு முஃமினே பொறுத்தவரை யவரையும், எவற்றையும் பயப்படத் தேவையில்லை....*

2 : *எச்சரிக்கையாக இருப்பது..*

*பயப்படத் தேவையில்லை என்று சொல்லி நாம் கவனக்குறைவாகவோ, பொடுபோக்காவோ இருக்க வேண்டாம். நோய் நம்மை அனுகாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இது சம்பந்தமாக அரசாங்கம் நமக்கு சொல்லும் அறிவுரைகள், எச்சரிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றையும் நாம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அல்லாஹ் திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.*

*ياأيها الذين آمنوا خذوا حذركم (النساء 71)

*விசுவாசங்கொண்டோரே! நீங்கள் உங்கள் எச்சரிக்கையை (முதல் ஆயுதமாக) எடுத்துக் கொள்ளுங்கள்.*

*திருமறை குர்ஆனின் வேறு ஒரு இடத்தில் இவ்வாறு காணலாம்.*

*ولا تلقو بأيديكم الي التهلكة واحسنو ان الله يحب المحسنين. (البقرة 195)

*உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் பிறருக்கு நன்மையும் செய்யுங்கள். நன்மை செய்கிறவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புகிறான்.*

*கொரோனா காலத்தில் சர்வதேச அளவில் சுகாதாரத்துறையும், அரசாங்கங்களும் மக்களுக்கு பல்வேறு விதமான அறிவுத்தல்களை நிரந்தரமாக வழங்கி கொண்டே இருக்கின்றன.அவ்வறிவுறுத்தல்கள் அனைத்தும் 1400 வருடங்களுக்கு முன் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவைகள் தான் இனி அவற்றைப்பற்றி நாம் பார்ப்போம்.*

3 : *பயணங்கள் தவிர்ப்பது, எல்லைகள் மூடுவது.*

*கொரோணா பரவல் அதிகமாகி கொண்டிருக்கும் வேளையில் நாம் பயணம் செய்தால் நமக்கு நோய் தொற்று ஏற்படலாம். அல்லது நமக்கு நோய் இருந்தால் நம் மூலம் பிறருக்கு பரவலாம்.*

*இந்த காரணத்தால் தான் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*إذا سمعتم الطاعون بأرض. فلا تدخلوها وإذا وقع بأرض وانتم فيها فلا تخرجوا منها*

*ஒரு நாட்டில் தொற்று நோய் இருந்தால் அந்த இடத்திற்கு நீங்கள் பயணம் மேற்கொள்ளாதீர்கள். இனி தொற்று நோய் இருக்கும் இடத்தில் நீங்கள் வசிப்பவர்களெனில் அங்கு இருந்து வெளியேறவும் வேண்டாம்.*

*இந்த ஹதீஸ் சம்பந்தமாக "கோரண்டையின் புதிய விஷயமல்ல" என்ற தலைப்பில் கழிந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் உள்ள ஜும்ஆ பயான் குறிப்பில் மிக விளக்கமாக எழுதி உள்ளோம்.*

4 :தனிமைப்படுத்துதல்.
*(கோரண்டைன், ஐஸ்லேஷன்)*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*لا يورد معرض علي مصصح*

*நோயுள்ளவர்களுடன் நோய் இல்லாதவர்களை கலந்து உறவாட செய்யக்கூடாது*

*ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஒரு ஊரைப்பற்றி சொன்னார்கள்.. உணவு தானியங்களுக்கு பெயர் கேட்ட அந்த ஊரில் தொற்று நோய் பிடிப்பட்டுள்ளது.மட்டுமல்ல பேரீச்ச பழங்கள் அங்கிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறி இவ்வாறு சொன்னார்கள்.*

*فإن من القرف التلف*

*இப்படிப்பட்ட ஊர்வாசிகளுடன் கலந்து உறவாடுவதில் ஆபத்து இருக்கிறது என்றார்கள்..*

5 : *ஊரடங்கு.*

(விழித்திரு வீட்டிலிரு, விலகியிரு,)

*அரசாங்கம் தொற்று அகற்றுவதற்கும், அதிக மக்களுக்கு பரவாமல் இருப்பதை தடுக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை தான் ஊரடங்கு.

*தேவை இல்லாமல் வெளியே சென்று நோய் பரப்ப நாம் ஒரு போதும் காரணமாகிவிடக்கூடாது.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*كونو احلاس بيوتكم*

*(தொற்று நோய் காலங்களில்) நீங்கள் உங்கள் இல்லங்களில் அடங்கி ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள்.*

*நாயகம் (ஸல்) அவர்களின்மற்றொரு ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்.*

*ومن قعد في بيته فسلم الناس منه وسلم من الناس فله الجنة*

*சுய பாதுகாப்பும், மக்கள் நலனும் கருதி ஒருவன் வீட்டில் இருந்தால் அவனுக்கு சுவனம் உண்டு.*


6 : *வணக்க வழிபாடுகளை வீட்டில் அமைத்து கொள்தல்.*

*சமூக இடைவெளி, சமூக விலகல், கோரண்டைன்,ஊரடங்கு, ஐஸ்லேஸன், வீட்டில் இருத்தல் போன்ற காரியங்களை செயல்படுத்தும் போது பள்ளிக்கு சென்று தொழ வேண்டாமா? எப்படி தொழுவது என்ற கேள்வி எழலாம் அதற்கும் இஸ்லாம் நமக்கு அழகிய முன்மாதிரிகளை சொல்லி தந்துள்ளது.*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*الا صلو في رحالكم*

*(தொற்று நோய் போன்ற ஆபத்தான காலகட்டங்களில்.)*

*நீங்கள் உங்கள் இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்.*

7 : *சுத்தம்*

*சுத்தம், சுகாதாரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இஸ்லாம் வழங்குகிறது..*

*ஒரு மனிதனை வைரஸ்கள் தாக்காமல் இருக்க தேவையான அனைத்து வழிமுறைகளையும் இஸ்லாம் சொல்லி தந்துள்ளது.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*الطهور شطر الإيمان او نصف الإيمان*

*சுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.*

*வீடுகளை சுத்தமாக வைத்திருத்தல், வீட்டு சுற்றுப்புறங்களை அழகான முறையில் வைத்திருத்தல், கழிப்பறைகளை க்ளீனாக வைத்திருத்தல் போன்ற காரியங்களை அரசாங்கம் நிரந்தரமாக சொல்லி கொண்டு இருக்கிறது. அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.*

*இதைத்தான் இஸ்லாம் அன்றே சொல்லி விட்டது.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*فنظفو افنيتكم. ان الله نظيف يحب النظافة*

*உங்களுடைய வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தமாக, அழகாக வைத்திருங்கள்.அல்லாஹ் அழகானவன். அழகை விரும்புகிறான்.*

*அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கொண்டிருக்கும் மற்றொரு காரியம் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருங்கள்.*

*இந்த விஷயத்தையும் இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னரே நமக்கு சொல்லி தந்துள்ளது.*

*தொற்று நோய் உள்ள காலங்களிலும் அல்லாத காலகட்டத்திலும் சரி நீங்கள் உறக்கத்திலிருந்து எழுந்து விட்டால் முதலில் கைகளை கழுவி கொள்ளுங்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.*

*إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في إلاناء حتي يغسلها ثلاث فإنه لا يدري أين باتت يده*

*நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால் உங்களது கைகளை மூன்று தடவை கழுகாமல் பாத்திரத்தில் முக்காதீர்கள். ஏனெனில் இரவில் உங்கள் கை எங்கெல்லாம் தங்கியது என்று உங்களுக்கு தெரியாது.*

*சாப்பிடும் முன் கை கழுகுவுது, பிறகு கழுவுவது, தொழுவதுற்கு முன் வுளூஃ எடுப்பது, சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்வது போன்ற எண்ணற்ற வழிகளில் இஸ்லாம் ஒரு மனிதனுக்கு சுத்தத்தின், சுகாதாரத்தின் வழிமுறைகளை வழங்கியுள்ளதை பார்க்க இயலும்...*

8 : *மாஸ்க் அணிதல்..* *நாம் தும்மும் போது அல்லது பிறர் தும்மும் போது இந்த வைரஸ் நம்மை தாக்கவோ, அல்லது நம் மூலம் பிறருக்கு பரவவோ வாய்ப்பு இருக்கிறது.*

*எனவே நாம் வெளியே செல்லும் போது முககவசம் அணிவது நல்லது, தும்மும் போது ஏதாவது ஒன்றை வைத்து மூக்கை பொத்தி பிடிப்பதும் நல்ல நடைமுறையாகும்.*

*நாயகம் (ஸல்) அவர்களின் இதற்கு நமக்கு நல்ல அழகிய முன்மாதிரி இருக்கிறது.*

*كان رسول الله صلي الله عليه وسلم إذا عطس وضع يده او ثوبه على فيه وغض صوته*

*நாயகம் (ஸல்) அவர்கள் தும்மும் வேளையில் ஏதாவது ஒன்றை வைத்து மூக்கை பொத்தி பிடிப்பதுடன் மெதுவான சத்தத்துடன் தும்முவார்கள்..*

*இனி இவ்வாறான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்தும் நமக்கு நோய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்.*

*அதற்கும் இஸ்லாம் அழகிய பரிகாரம் நமக்கு சொல்லி தந்துள்ளது.*

9 : சிகிச்சை பெறுதல்..

*நோயின் அறிகுறிகள் தென்படும் போது நாம் மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ளத் தயாராக வேண்டும்.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*تداوو عباد الله*
*அல்லாஹ் நல்லடியார்களே! நீங்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ளுங்கள்...*

10 : *தன்னம்பிக்கை*

*எனக்கு நோய் வந்துவிட்டதே, இந்த நோய் என்னை மரணத்தில் தள்ளிவிடுமோ என ஆதங்கத்துடன் இருக்காமல் இறைநம்பிக்கையுடன், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். என் நோய் மாறும், அல்லாஹ் என் நோயை குணப்படுத்துவான் என்ற மனதைரியத்துடன் இருக்க வேண்டும்.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*


*تداوو فإن الله لم يضع داء إلا وضع له دواء*

*உங்களுக்கு நோய் பிடிப்பட்டால் மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். மருந்தில்லாமல் ஒரு நோயையும் அல்லாஹ் படைக்கவில்லை..*

11 : *சுகாதாரத்துறை பணியாளர்கள் மக்களுக்கு நன்மையே மட்டும் நாடுதல்..*

*மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் செயல் பட வேண்டும்.
அவர்களை நோயிலிருந்து மீட்டு கொண்டு வரத் தேவையான எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும். ஒரு மனிதனை நோயிலிருந்து மீட்டு கொண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்...*

*அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்*

*ومن أحياها فكأنما أحيا الناس جميع*

*எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழ வைக்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவர் போலாவார்...*

12 : *சுகாதாரத்துறையின் விதிமுறைகளை கடைபிடித்தல்..*

*இந்த ஆபத்தான காலகட்டங்களில் நம்மை பாதுகாக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறது. அதை நாம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.*

*மாஸ்க் அணியாமல் செல்லுவது, சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருப்பது, சுத்தம் பேணாமல் இருப்பது, சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை செவிசாய்க்காமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் ஒரு போதும் நம்மிடமிருந்து வரக்கூடாது. நோய்கள் பரவ ஒரு போதும் நாம் காரணமாகி விடக்கூடாது..*

*குர்ஆன் கூறுகிறது..*

*من قتل نفسا بغير نفس او فساد في الأرض فكأنما قتل الناس جميع*

*"எவரொருவர் மற்றொர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தினைத் தடை செய்வதற்காகவோ தவிர அநியாயமாக மற்றொருவரை கொலை செய்கின்றாரோ அவர் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலாவார்.*

*நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்..*

*اتقوا مواضع التهم*

*மக்களுடைய பழிச்சொல்லுக்கு நீங்கள் பயப்படுங்கள்.*

*கொரோனா வைரஸ் பரப்பியது முஸ்லிம்கள் தான் என நம் மீது கயவர்கள் பழி சுமத்தியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.*

13 : *பிறர் நலம் நாடுதல்*

*பிறர் நலம் நாடுவது இஸ்லாமில் மிக முக்கியமான மேன்மையான செயலாகும்..*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*والمؤمن من امنه الناس علي دمائهم واموالهم*

*எவரிடமிருந்து தங்கள் உயிர் மற்றும் பொருட்கள் பற்றி அச்சமற்று மக்கள் இருக்கிறார்களோ அவர்தான் உண்மையான முஸ்லிம்.*

*வேறு ஒரு ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்...*

*والنصح لكل مسلم*

*அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுதல்.*

14 : *அதிகாரிகளுக்கு கட்டுப்படுதல்.*

*சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற அதிகாரிகள் சொல்லக்கூடிய விதிமுறைகளை, அறிவுறுத்தல்களை நாம் பின்பற்ற வேண்டும்.*

*ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் நாம் வெளியே சுற்றுவது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும்.*

*ஒரு ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்.*

*وأطيعوا ذا أمركم*

*நீங்கள் அதிகாரிகளுக்கு கட்டுப்படுங்கள்.*

15 : *ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்படுதல்..*

*ஒரு ஆட்சியாளரை பொறுத்தவரை மக்களின் நலன்தான் உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.*

*மக்களுக்கு தேவையான உதவிகளை, வசதிகளை, அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.*

*இக்கட்டான சூழ்நிலையில் மக்களை கஷ்டப்படுத்துகிற ஆட்சியாளர்களை எச்சரிக்கை செய்யும் விதத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.*

*كلكم راع وكلكم مسئول عن رعيته*
*நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்கள்.. உங்களுடைய ஆட்சி பொறுப்பைப்பற்றி நாளை மறுமையில் அல்லாஹ் கண்டிப்பாக விசாரணை நடத்துவான்.*

16 : *முடிந்தவரை தான தர்மம் வழங்குதல்.*

*ஊரடங்கு காலத்தில் பலபேருக்கு வேலைக்கு செல்ல இயலாத நிலை, பலபேருக்கு பணம் இல்லாததால் மருத்துவம் பார்க்க முடியாத சூழல் இதுப்போன்று சமூகத்தில் பல்வேறு விதமான கஷ்டங்களுடன் வாழக்கூடியவர்கள் இருப்பார்கள்.*

*நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவவேண்டும்.*

*தான தர்மங்கள் நீண்ட ஆயுளை வழங்கும்.கெட்ட மரணங்களை தடுக்கும் என ஹதீஸில் வந்துள்ளது..*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*ان صدقة المسلم تزيد في العمر وتمنع ميتت السوء*

17 : *பிரார்த்தனை செய்தல்.*

*ஐவேளை தொழுகைகளில், ஆன்மீக மஜ்லிஸுகளில் இந்த தொற்று நோய் மாறுவதற்கும் இவ்வுலகை விட்டு அகலுவதற்கும், சுபிட்சமான, மன நிம்மதியான வாழ்வு கிடைப்பதற்கு, நம் கஷ்டங்கள், நோய்கள், துக்கங்கள் அனைத்தும் நீங்குவதற்கு நாம் நிரந்தரமாக துஆ செய்ய வேண்டும்...*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*الدعاء صلاح المؤمنين*

*பிரார்த்தனை முஃமினின் பேராயுதமாகும்..*

18 : *அல்லாஹ்வின் களாவை திருப்தியுடன் ஏற்று கொள்தல்..*

*நோய் வராமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடித்தும் வைரஸ் ஒருவனை தாக்குகிறது..*

*அதற்காக அவன் மருத்துவமும் பார்க்கிறான்..ஆனால் பலன் கிடைக்கவில்லை மரணித்து விடுகின்றான்...*

*இவ்வாறான கட்டத்தில் நாம் அல்லாஹ்வின் விதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.*

*நோய் தருபவனும் அவன் தான், குணப்படுத்துபவனும் அவன் தான், மரணிக்க செய்பவனும் அவன்தான்..*

*இதுப் போன்ற தொற்று நோய்களில் மரணிப்பவர்களுக்கு அல்லாஹ் ஷஹீதின் கூலியை வழங்குகிறான்..*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*ومن مات في الطاعون فهو شهيد*

*தொற்று நோய்களில் மரணமடைபவன் ஷஹீதாகும்....*

*அல்லாஹ் தஆலா நம்மை எல்லா வித ஆபத்தான நோய்களை விட்டும் பாதுகாத்து அருள்புரிவானாக!...*

தொகுப்பு: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.

*இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.*

*திருவிதாங்கோடு....*