கொரோனா வைரஸ் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்கள்
கொரோனா
இஸ்லாம்_கற்றுத்_தரும்_பாடங்கள்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எல்லா இடங்களிலும் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.உலக மக்கள் மிகப்பெரிய கவலையிலும், துக்கத்திலும் ஒவ்வொரு தினங்களை நகர்த்திக்கொண்டிரிக்கிறார்கள்.கொரோனா நச்சுயிரி உலக நாடுகளை பயத்திலும், நெருக்கடியிலும் பரப்பரப்பிலும் ஆழ்த்தியிரிக்கிறது.
உலகை அச்சுறுத்துகின்ற இந்த புதிய இடரானது பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் மிகப்பெரிய சமூக சிக்கல்களை காட்சிப்படுத்திக் காட்டுகின்றன.
அச்சம் அத்தனை முகங்களிலும் அப்பிக்கிடக்கிறது.ஆரம்ப பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சர்வதேச விமான சேவைகள் ரத்தாக்கப்படுகின்றன,உள்ளூர் போக்குவரத்து மட்டுறுத்தப்படுகின்றன, நூலகங்கள், கேளிக்கை விடுதிகள், சினிமா அரங்குகள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு அரங்குகள்,மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள், மதுபான கடைகள் யாவும் மனிதர்கள் நடமாட்டமற்ற மயான பூமியாக்கப்பட்டுவிட்டன.
நீண்ட தொடர் வரிசைகளில் மக்கள் பால், நீர்,மளிகை சாமான்கள், காய்கறிகள் என்கின்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக காத்துக் கிடக்கின்றனர்.
"ஒரு தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் சட்டென்று தோன்றி மெல்ல பரிணமித்து வளர்ந்து ஒவ்வொரு கட்டமாக விரிவடைந்து செல்லும் போது அது தனிநபர்களையும், கூட்டுச் சமுதாயத்தையும் நெருக்கடி நிலைக்கு ஆளாக்கிய பின் அதன் இறுதியை நிலையை எய்துகிறது." என்று ரோசன் பெர்க் குறிப்பிடுகிறார்.covid_19 தொற்று நோயிலும் இதேதான் நிகழ்ந்திருக்கின்றது.அது முதலில் சீனாவில் தொடங்கி அடுத்தடுத்து உலக அளவில் பல நாடுகளுக்கு பரவி வருகின்றனது.*
*இன்று இந்நோய் சமூகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், அழுத்தங்களையும், நெருக்கடி நிலையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.*
*உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருகொண்டிருந்த, ஆட்டி படைக்க நினைத்த வல்லாதிக்க சக்திகளையெல்லாம் உயிரைக் காப்பாற்றி கொள்ள நான்கு சுவர்களுக்குள் முடக்கி போட்டிருக்கின்றது கொரோனா. பிணக்குவியலுக்கு முன்னால் பணக்குவியல் மண்டியிட்டு கொண்டிருக்கிறது.*
*இன்று கோரோனாவால் மிகப்பெரிய மனிதவள இழப்பையும், பொருளாதார இழப்பையும் சந்தித்து கொண்டிருக்கின்ற அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் தடுமாறி கொண்டு இருக்கின்றன.அமெரிக்காவைப்பற்றியும் ஐரோப்பிய நாடுகள் பற்றியும் உலகின் பிற பகுதி மக்கள் கொண்டிருந்த பிரமிப்பு எல்லாம் தவிடுபொடியாகி நரகத்தின் தேசமாக இன்று காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.*
*மோடியின் திடீர் ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் தீடிரென மூடப்பட்டதால் வேலையிழந்து பிழைக்கப் போன மாநிலங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு அல்லது நிர்க்கதியாக விடப்பட்டு ஆயிரக்கணக்கா மைல்கள் நடந்தே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றார்கள் ஏழைக்கூலி தொழிலாளர்கள். வழியில் பட்டினியால் உணவு எதுவும் கிடைக்காமல் ஏராளமானவர்கள் பலியானார்கள்.*
*தீடிரென அரசால் சமூக விலகல் அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பெரும்பான்மையான மக்களுக்கு என்ன நடக்கின்றது? என்ன நடக்குமோ? என்று தெரியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா போன்ற கொடிய நோயின் தாக்குதல் மூலம் ஏற்ப்பட்டுள்ள இது போன்ற நெருக்கடிகள் உலகிற்கே புதிது என்பதால் மக்களை முன் கூட்டியே ஆற்றுப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது துர்வாய்ப்பு.*
*வாழ்வியல் சூழல், கல்விபோன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லப் போதுமான கால அவகாசம் கொடுக்காமல் அரசு தீடிரென சமூக விலகல் அறிவித்தது.இதனால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பான போக்குவரத்து அனைத்தும் அரசால் அறிவிக்கப்பட்ட சமூக விலக்கைக் கடந்து மக்கள் தன்னிச்சையாக தங்கள் இடங்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கின்றார்கள்.*
*வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்?*
*வைரஸ் இந்த சொல்லை சமீப காலமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச் சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும்.உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள்உண்டு.வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.*
*வைரஸ்கள் பரவுவது எப்படி?*
*சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ் இதனால் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.*
*வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக், மற்றும் பாண்டமிக்.*
*எண்டமிக் வைரஸ்*
*ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும்.உதாரணமாக அம்மை நோய் போன்ற விஷயங்களை சொல்லலாம் அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.*
*எபிடமிக் வைரஸ்*:
*ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும்.உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்து விடும்.*
*பாண்டமிக் வைரஸ்*
*ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும்.ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும் போது அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால் அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.*
*கொரோனா வைரஸ் என்றால் என்ன?*
*2019_ncov என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது.*
*கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை.*
*தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு விஞ்ஞானிகளால் சிவியர் அக்யூட் ரெஸ்பி ரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ்2 அல்லது sars_cov_2என்று பெயரிடப்பட்டுள்ளது.*
*கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?*
*இந்த கோவிட்19 முதன் முதலில் காய்ச்சலாக தொடங்கும்.பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக்கோளாறுகள் ஏற்படும்.ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.*
*இந்த கோவிட்19 தீவிரமாக இருந்தால் நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப்பிரச்சினை,தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம்.பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஜந்து நாட்களில் தெரியலாம் என விஞ்ஞானிகள்ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.*
*சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென்படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.*
*வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.*
*கொரோனா வைரஸ் எப்படி உருவானது?*
*கொரோனா சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட் ஒன்றில் வைரஸ் தோன்றி இருக்கலாம். என்று கூறுகிறார்கள்.*
*இல்லையெனில் வுஹான் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து வெளியாகி இருக்கலாம் என்கிறார்கள் அதே சமயம் இந்த வைரஸ் வவ்வாலில் இருந்து கூட உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.*
*சீனாவில் கட்டுவிரியன் பாம்புகள் அதிகம் உள்ளன. இந்த பாம்புகளில் விஷத்தன்மை குறைந்த வகை பாம்புகளும் உள்ளன. அந்த பாம்புகளை சீனர்கள் உணவாக சாப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.*
*குறிப்பாக சூப் வைத்து சாப்பிடுவதற்கு இந்த வகை பாம்புகளை சீனர்கள் அதிகம் விரும்பி வாங்குவது உண்டு. அதிலும் உயிருடன் உள்ள பாம்புகளை வாங்கி சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.இந்த பாம்புகளை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.*
*கொரோனா வகை வைரஸ்கள் அடர்த்தியாக உள்ள வவ்வால்களை சாப்பிடும் கட்டு விரியன் பாம்புகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுமாம் அப்படி நோய் பாதிப்புக்குள்ளாகும் பாம்புகளில் இருந்து ஏற்கனவே உள்ள வவ்வாலின் வீரியம் காரணமாக புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.*
*எல்லா கட்டுவிரியன் பாம்புகளிலும் இந்த வைரஸ் உள்ளதா என்ற ஆய்வும் நடந்து வருகிறது.*
*வுஹான்: கொரோனா வைரஸ் தோன்றிய நகரம்*
*நாம் இன்று அடிக்கடி உச்சரிக்கும் வுஹான் என்ற சொல்தான் பல லட்சம் உயிர்களை காவுகொண்ட கொரோனாவின் பிறப்பிடம். இந்த வுஹான் நகரமானது சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றாகும் மற்றும் சீனா குடியரசிலுள்ள ஹுபேய் மாகாணத்தின் தலைநகரமும் கூட.வுங்சாங்,ஹங்கெள,ஹங்யங் ஆகிய மூன்று நகரங்கள் ஒன்றிணைந்து உருவானதால் வுஹான் என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் பல இடங்களுக்கு செல்லக்கூடிய விரைவுச்சாலைகள் மற்றும் புகையிரதத் தடங்களை இணைக்கும் இடமாக இது அமைந்துள்ளதால் அந்நாட்டின் போக்குவரத்து மையப்பகுதியாக விளங்கும் இது சீனாவின் பொதுச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது.*
*2018 _ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11.08 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்நகரம் மத்திய சீனாவின் நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வித்தளங்களுக்கு முதன்மையாக விளங்குகின்றது.*
*சாங் சியாங் எனப்படும் ஆசியாவின் நீளமான நதி, வான்தொடும் கட்டிடங்கள் மற்றும் சீனர்களின் உணவுகளுக்கு பெயர் போன இந்நகரம் வெளிநாட்டவர்களால் சீனாவின் சிகாகோ என்றும் அழைக்கப்படுகிறது.*
*இதனோடு பலவிதமான விலங்குணவு சந்தைகளுக்கும் பெயர் போன இந்ந அழகிய நகரம் தான் கொரோனா எனும் கொடூர வைரஸினால் பாதிப்படைந்து கிடக்கிறது.*
*இன்ஷா அல்லாஹ்*
*தொடரும்*
*#தகவல்_M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி*