அமயம்கோடு அப்துல்லாஹ் ஃபைசி வஃபாத்தானார்கள்

அமயம்கோடு அப்துல்லாஹ் ஃபைசி வஃபாத்தானார்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அமயம்கோடு_அப்துல்லா
ஃபைசி_அல் மக்தூமி_வஃபாத்தானார்கள்..😢
.................................................. ..............

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அமயம்கோட்டைச் சேர்ந்த பிரபல அறிஞர் கே.வி.அப்துல்லா ஃபைசி
அல் மக்தூமி (65) காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தர்ஸ் (மதரசா) துறையில் இருக்கும் அப்துல்லாஹ் ஃபைஸிக்கு புகழ் பெற்ற பிரபல அறிஞர்கள் உட்பட பல மாணவர்கள் சிஷ்யர்களாக உள்ளனர்.

மர்ஹூம் காரக்குன்னு மம்மது முஸ்லியாரின் சிஷ்யத்துவம் பெற்று அறிவு மரமாக விளங்கிய அப்துல்லாஹ் ஃபைஸி பல இடங்களிலும் முதர்ரிஸாகப் பணி புரிந்துள்ளார்கள்.

கருவாறகுண்டு, படன்னா, தலச்சேரி தாருல் அன்வார், கூட்டாயி மக்தூமியா, கொண்டோட்டி, அரிம்பிரா, பரப்பூர், முண்டம்பிரா, பூக்கோட்டூர், எளயூர், வில்லூர், வெள்ளுவங்காடு, கொச்சி தக்யாவு, ஆலுவா எனப் பல இடங்களிலும் ஏராளமான மக்களுக்கு தீனிய்யி அறிவைப் புகட்டினார்.

மஞ்சேரியிலுள்ள மக்தூம் கபீலாவில் முக்கிய பதவி வகிக்கும் அப்துல்லாஹ் ஃபைஸி அவர்களின் குடும்பம் பாரம்பரியமாக புகழ்பெற்ற ஆலிம்களின் குடும்பமாகும்..

அவரது சகோதரர்கள் மற்றும் தந்தை உட்பட அனைவருமே சிறந்த ஆலிம் பெருமக்களாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர்.

அப்துல்லா ஃபைசி ஒரு திறமையான எழுத்தாளருமாவார்..

அவர் சிறந்த அறிவார்ந்த ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

பிரபல புகழ்பெற்ற நபி புகழ் காவியம் மன்கூஸ் மௌலிதுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்....

மேலும் இவர், தி குட் ஹவுஸ், தி சேக்ரட் லீடர், இஸ்ராஃ மிஃராஜ், மிலாதுந்நபி, அரபி காவியமான ரசனாத்தின் மலையாள மொழிபெயர்ப்பு,
மௌலித் கொண்டாடுதல் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கட்டிடக்கலை மற்றும் ஹோமியோபதியில்
நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.

எர்ணாகுளம், ஆலுவாவில் உள்ள "மர்கஸுல் புஷ்ரா" வில் பணியாற்றிய போது அப்துல்லா ஃபைசியின் பார்வையின்மை மற்றும் அசௌகரியம் காரணம் அவரை தர்ஸ் கற்பித்தலிலிருந்து ஓய்வு பெற்று
வீட்டில் ஓய்வெடுக்க வழிவகுத்தது.

கோழிக்கோட்டிலுள்ள மருத்துவ கல்லூரியிலும், மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அப்துல்லா ஃபைசி கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

அப்துல்லாஹ் ஃபைஸியின் மனைவி மர்யம் ஹஜ்ஜும்மா அவர்கள் பிரபல அறிஞரும் வலியுல்லாஹுவுமான கூரியாட் தேனு முஸ்லியாரின் பேத்தி ஆவார்.

அப்துல் ஹமீது முஸ்லியார், அப்துல் ரஸாக் முஸ்லியார், இஸ்மாயில் முஸ்லியார், அப்துல் அஸீஸ் முஸ்லியார், அப்துல் மஜீத் சகாபி ஆகியோர் இவரது சகோதரர்களாவர்.

பிள்ளைகள்: ஜைனுதீன் அஹ்ஸனி, முகம்மது யூசுப் அஹ்சனி ஹாஃபிழ் உஸ்மான், முகம்மது ஷாபி, அஹ்மத் ஸயீத், மைமூனா, ரம்லா, ருகியா, ஆஸியா ஆகியோர் ஆவர்..

மருமக்கள்:
முஹ்யத்தீன் குட்டி சகாபி, சயீத் நயீமி, உக்காஷா அஹ்ஸனி ஷரீஃபா, ஜுமானா...

*அன்னாரின் மஃபிறத்திற்க்காக அனைவரும் துஆ செய்யும்படி
அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்...*

*வல்லோன் அல்லாஹ் ‌அவர்களின் பாவங்களை மன்னித்து கப்ர் வாழ்க்கையை லேசாக்கி, சுவனத்தின் உயர் பதவிகளை வழங்கி அருள்புரிவானாக..
ஆமீன்..*

اللهم املأ قبره بالرضا، والنور، والفسحة، والسرور. اللهم إنّه في ذمتك وحبل جوارك، فقه فتنة القبر، وعذاب النار، وأنت أهل الوفاء والحق، فاغفر له وارحمه، إنك أنت الغفور الرحيم. اللهم إنه عبدك وابن عبدك، خرج من الدنيا، وسعتها، ومحبوبها، وأحبائه فيها، إلى ظلمة القبر، وما هو لاقيه، اللهم إنه كان يشهد أنك لا إله إلا أنت، وأن محمدا عبدك ورسولك، وأنت أعلم به. اللهم إنا نتوسل بك إليك، ونقسم بك عليك أن ترحمه ولا تعذبه، وأن تثبته عند السؤال.*

................................................
தகவல்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
‌ 7598769505