காந்தபுரம் இது ஒரு வெறும் பெயரல்ல
காந்தப்புரம்_இது_ஒரு_வெறும் பெயரல்ல.
காந்தபுரம் என்பது ஒரு ஊரின் பெயராக இருந்தது.
பின்னர் அது ஒரு நபராக மாறியது.
பின்னாளில் அது ஒரு இயக்கமாக மாறியது..
இன்று அதொரு யுகமாக மாறி இருக்கிறது.
கேரள முஸ்லிம் மறுமலர்ச்சி இனி காந்தபுரத்திற்கு முன்,பின் என அறியப்படும்.
ஒன்று மட்டும் நிச்சயம்
இது தனி ஒருவரின் வாழ்க்கை மட்டுமல்ல.
இது ஒரு காலகட்டத்தின் வரலாறு
60 வருட அறவழிப் போரின் மாபெரும் அடையாளம்...
சஹாபாக்களின் வருகையால் கேரளாவில் இஸ்லாமிய கலாச்சாரம் வளர்ந்தது போல, பின்னர் இன்றும் கேரளா முழுவதும் நிறைந்து காணப்படும்
மக்தூம்களின் இஸ்லாமிய அறிவுப் புரட்சி போல,
சுதந்திரப் போராட்ட சமயத்தில் பெளதீக
அறிவுத் துறையில்
பின் தங்கியிருந்த உம்மத்திற்கு தண்ணீரும், உரமும் அளித்து உயரத்திற்கு உயர்த்திய, இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அறிவு நகரத்தை உருவாக்கிய சீர்திருத்தவாதி.
காந்தப்புரம் ஏ.பி
அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்...
உலமாக்களுக்கு உலமா ஆக்டிவிட்டி என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்கள்,
பள்ளிவாசலின் மிஹ்ராபில் மட்டுமே பேசிக் கொண்டு இருந்த உலமாக்களை வழக்கறிஞர்களாக உருவாக்கி அவர்களைக் கொண்டு நீதிமன்றத்தில் பேச வைத்தவர்கள்,
கையில் தஸ்பீஹ் மாலைகளை வைத்திருப்பவர்களுக்கு கணிப்பொறியின் மவ்ஸும் வளைந்து கொடுக்கும் என்று காட்டியவர்கள், மந்திரித்து ஓதி ஊத மட்டும் அல்லாமல் பண்டிதர்கள் ஸ்டெதாஸ்கோப் மூலம் மருத்துவராகப் பரிசோதிக்கவும் முடியும் என்று சமூகத்திற்கு உணர்த்தியவர்கள்,
ஆலிம்கள் காஜியாக மட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரியாகவும் நாட்டை ஆள முடியும் என்று சமுதாயத்திற்கு நிரூபித்தவர்கள்....
பளபளப்பான வெள்ளை உடையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த
வர்களையும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் மட்டுமே நின்றவர்களையும் முன்னால் அழைத்து வந்து, இந்த அறிஞர்கள் அரசியல்
கட்சிக்காரர்களின் பின்னால் நிற்காமல், முன்னால் இருந்து வழிநடத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டியவர்கள்...
அவர்கள் சம்பந்தப்படாத எந்தத் துறையும் இல்லை
மதம், சமூகம், கலாசாரம், அரசியல், அறிவுலகம் குடும்பம்....எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்று உலகம் போற்றும் தலைவரை கேரளா இதுவரை பார்த்ததில்லை.
இப்படி சொன்னால் முடிவடையாத எத்தனை, எத்தனை மகிமைகள் அவர்களுக்கு இருக்கிறது.
இன்று உலகமே போற்றும் சுல்தான்.
இன்று ஒரு தனி மனிதன் வளர்ச்சி பாதையில் எவ்வளவு தூரம் ஏறிச்சென்று விட முடியுமோ அந்த அளவுக்கு உயரத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
அல்ஹம்துலில்லாஹ்....
ஒன்று நிச்சயம்..
இன்று, இமாம் கஸாலி (ரலி) மற்றும் இமாம் புகாரி (ரஹ்) அவர்களைப் போன்ற ஏராளமான அறிஞர் பெருமக்களை குறித்து நாம் பேசிக் கொண்டு இருப்பது போல்
ஏ.பி .அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்களைக் குறித்தும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு உலகம் விவாதிக்கும். நவீன இந்தியாவின் தலைசிறந்த மறுமலர்ச்சித் தலைவராக...
அல்ஹம்துலில்லாஹ் ..
இந்தக் காலகட்டத்தில் அந்தத் தலைவரின் ஒரு எளிய தொண்டராகி பின்பற்றி அவரைக் காண முடிந்தது என்பதை நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.
அந்த தலைவரை வாசிக்க வேண்டும். படிக்க வேண்டும்.
அறிந்து இருக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு அவரைக் குறித்து சொல்லி கொடுக்க வேண்டும்.
அந்த தலைவரின் சுயசரிதை புத்தகத்தின் பிரதியை நம் வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
தமிழில்:
S.#ஸஜீர்_அன்வரி_சென்னை.