இப்படியொரு பாக்கியம் யாருக்கு கிடைக்கும்
இப்படியொரு பாக்கியம் யாருக்கு கிடைக்கும்.
தாஷ்கண்ட் |
இன்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் சொந்த ஊரில் இந்தியன் கிராண்ட் முஃப்தி
ஷேக் அபுபக்கர் அஹ்மத் பாகவி ஹஸ்ரத் அவர்கள் பல்வேறு முஸ்லிம் அறிஞர்கள் சங்கம் சார்பில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
குர்ஆனுக்குப் பிறகு சிறந்ததாக, உயர்வானதாக முஸ்லிம்கள் கருதும் புகழ்பெற்ற ஹதீஸ் நூலான ஸஹீஹுல் புகாரியின் ஆசிரியர் இமாம் புகாரி பிறந்த இடமான புகாராவில் இந்த கெளரவிப்பு விழா நடைபெறுகிறது.
இது தொடர்ந்து மிகப் பெரிய அளவிலான சர்வதேச ஹதீஸ் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமகால உலகில் சர்வதேச அளவில் விரிவான
தஃவா பணிகள் செயலாற்றும் நபருக்கு வழங்கப்படும் விருதுக்கு
பிரபல யமன் நாட்டு அறிஞரும்,
தாருல் முஸ்தஃபா ஸ்தாபனங்களின் நிறுவனருமான
உமர் ஹஃபீழ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் அவரும் கெளரவிக்கப்பட உள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஹதீஸ் புத்தகமான ஸஹீஹ் அல்-புகாரியின் ஆய்வு மற்றும் பிரச்சாரம் மேலும் இந்தியாவில் உஸ்தாத் அவர்கள் மேற்கொண்ட கல்வி நடவடிக்கைகளுக்காக கிராண்ட் முஃப்தி இந்த கௌரவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியன் கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபூபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் தலைமையில் மர்கஸில் நடைபெற்ற புகாரி வகுப்புகள் அரபு உலகிற்கு வெளியே ஒரு முஸ்லீம் அறிஞரால் நடத்தப்படும் மிகப் பெரிய மற்றும் பழமையான புகாரி ஆய்வு மஜ்லிஸ் ஆகும்.
20 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்கும் இந்த பாராட்டு விழாவின் போது கிராண்ட் முஃப்தி ஏ.பி.அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் பல்வேறு இஜாசாத்களையும் வழங்குவார்கள்.
அரபு பிராந்தியத்தில் மிகப்பெரிய புகாரி வகுப்பு நடத்துபவர் தான் ஷேக் உமர் பின் ஹஃபீழ் அவர்கள்.
செச்சினியா நாட்டு பிரதமர் ரமலான் கெதிரோவின் மத விவகார ஆலோசகர் ஷேக் ஆதம் ஷாஹிதோவ் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
இவ்விழாவில் எகிப்து அதிபரின் மத விவகாரங்களுக்கான ஆலோசகர் ஷேக் உஸாமா அல் அஸ்ஹரி பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். மேற்கத்திய உலகின் முன்னணி முஸ்லிம் அறிஞரான ஷேக் யஹ்யா ரோடஸ், தாஷ்கண்ட் சுப்ரீம் இமாம் ஷேக் ரஹ்மதுல்லாஹி திர்மிதி, புகாரா முஃப்தி ஷேக் ஜாபிர் எலோவ், சுர்கந்தரியா காஜி ஷேக் அலி அக்பர் ஸைபுல்லா திர்மிதி ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
சமர்கண்டில் உள்ள இமாம் புகாரி ரஹ் அவர்கள் இளைப்பாறும் இடத்தில் இந்தியன் கிராண்ட் முப்தி தலைமையில் கிராண்ட் ஸஹிஹுல் புகாரி தர்ஸ் நாளை நடைபெறுகிறது.
உஸ்பெகிஸ்தானின் சமீபத்திய வரலாற்றில் இது மிகப்பெரிய புகாரி மஜ்லிஸ் ஆகும்.
உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கிராண்ட் முஃப்தி பங்கேற்பார்கள்.
தமிழில்:*M.சிராஜுத்தீன் அஹ்ஸனி*