விமான விபத்து நமக்கு தரும் படிப்பினை
திடீர் விபத்துக்களில்
கிடைக்கிற பாடம்
அல்லாஹ்வுடைய தீர்மாணம் மனிதர்களின் எல்லாவகையான கற்பனைகளையும் தாண்டி செயல்படக்கூடியது என்பதை
உறுதியாக இது புரிய வைக்கிறது.
மரணம் தீர்மாணிக்கப்பட்டவருக்கு அது
வந்து சேரும்.
தற்காலத்தில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல இலட்சம் பேர் வானில் பறந்து கொண்டிருக்கின்றனர்.
சிலர் மிக மோசமான பருவ சூழ்நிலைகளையும் மீறி பறந்து கொண்டிருக்கின்றனர்.
வானில் பறக்கிற போது வாழ்க்கைக்கும் மரணதிற்குமுள்ள தூரம் ஒரு முடியளவு தான் என்பார்கள்.
திருக்குர் ஆன் இந்த உண்மையை
புரிய வைக்கிறது .
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ]
(الملك: 19)
“உங்களது தலைகளுக்கு மேல் சிறகை விரித்த படியும் சுருக்கியும் பறக்கிற பறவைகளை கவனியுங்கள்.
அவற்றை அல்லாஹ்வே அந்தரத்தில் தடுத்து நிறுத்துகிறான்.”
காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க பறவைகள் சிறகை விரித்து வைக்கின்றன.
தேவைப்படும் போது சிறகை
சுருக்கிக் கொள்கின்றன.
ஆனால் இதனால் மட்டும் அவை அந்தரத்தில் மிதப்பதில்ல்ல.
அல்லாஹ் அவற்றை தடுத்து வைத்திருக்கிறான் என்கிறது
இந்த வசனம்.
பறவை பறப்பதற்கு ஒரு விஞ்ஞான காரணம் இருந்தாலும் அதை கடந்த அல்லாஹ்வின் தீர்மாணமே அதை வானில் நிலை பெறச் செய்கிறது என்கிறான் அல்லாஹ்.
விமானத்தில் கூட விமானம் எழும் போதும் இறங்கும் போது அதன் இறகுகளில் சில பகுதிகள் (பிளாப்ஸ) திறந்தும் மூடியும் கொள்ளும்.
அதை விமானம் கிளம்புவதற்கு முன் சரிபார்ப்பார்கள்.
இப்போது விபத்திற்குள்ளான விமானத்தில் விமானம் மேலே எழும்போது அது சரியாக இயங்கவில்லை என்கிறார்கள்.
மிக நீண்ட தூரம் பயணிக்க இருந்த ஒரு விமானத்தில் அது சரியாக இயங்கவில்லை எனில் இது அல்லாஹ்வின் தீர்மாணம் என்றே நாம் சமாதனப்பட்டுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த விபத்தில் பல நாட்டவரகள் பல மாநிலத்தவர்கள் ஒரே நேரத்தில் ஒரு நிமிடத்தில் பலியாகி இருக்கிறார்கள். எல்லோருட்டய மரணத்தையும் அல்லாஹ் நிச்சயித்து அவர்களை இங்கு கொண்டு வந்திருக்கிறான் என்பதை தவிர வேறென்ன சொல்ல?
கேரளாவிலிருந்து சென்னை வழியாக அஹம்தாபாத் சென்ற ஒரு இளம் நர்சு இதில் பலியாகியிருக்கிறார்.
அல்லாஹ் ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க நினைப்பவர்களை பாதுகாக்கிறான்.
இந்த விபத்தில் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் ஹாஸ்டல் மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்த
10 மருத்துவ மாணவர்கள் சற்றும் எதிர்பாராத மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.
50 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்,
அதே நேரத்தில் இதே விமானத்தின் அவசரத்திற்கு பயன்படுத்தும் வழியில்
11 ஏ என்ற இருக்கையில் பயணம் செய்த 38 வயது விசுவாஷ் குமார் என்ற பயணி தெய்வாதீனமாக தப்பி இருக்கிறார். உடன் இருந்த அவருடைய அண்ணன் உயிரிழந்து விட்டார்.
நான் எப்படி தப்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
உண்மையில் இது பேராச்சரியமாகும். அல்லாஹ்வின் தீர்மாணத்தின் துல்லியமும் ஆகும்
உலகின் மிக அதிஷ்டக்காரம் மனிதராக பார்க்கப்படுகிற அவர் சுகம் பெற்று எழுந்து வந்து சொல்லும் தகவல்களுக்காக உலகம் காத்திருக்கிறது.
நமது பயணங்கள அனைத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானதாக ஆக்கியருள்வானாக...
Source... வெள்ளிமேடை