மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 3

மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 3

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அகிலத்தின் அருட்கொடையை கொண்டாடுவோம்

வெளியீடு எண் = 3

1. அல்லாஹ்வின் திருமறை குர்ஆனில் ஒரு வசனத்தில் கூட மீலாது விழா கூடாது எனச் சொல்லப்பட வில்லை.

2. லட்சக்கணக்கான ஹதீஸ்களில் ஒன்றில் கூட மீலாது விழா தவறென சொல்வதை நாம் பார்க்க இயலாது.

3. உத்தம சஹாபாக்களோ அல்லது மேன்மை பொருந்திய நான்கு கலீஃபாக்களோ, அல்லது கண்ணியம் வாய்ந்த தாபி உகளோ எவரும் மீலாது விழாவை எதிர்க்கவில்லை, விமர்சிக்க வில்லை. தவசிறன சொல்லவில்லை.

4. பத்து லட்சம் ஹதீஸ்கள் மனப்பாடம் செய்த நான்கு மத்ஹபின் இமாம்களோ, அல்லது பிறகு வந்த ஏதாவது ஒரு அறிஞரோ, மீலாது விழா கூடாது என சொல்லவில்லை.

5. மீலாது விழா முஸ்லீம் உலகில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நல்ல காரியமென்று இமாம் அப்துல் ஹமீத் ஷர்வானி (ரலி) தன்னுடைய ஹாஷியத்து ஷர்வானி என்ற நூலில் 4/423 -ல் கூறியுள்ளார்கள்.

6. முஸ்லீம் சமூகத்தில் பாரம்பரியமாக செய்து வரக்கூடிய புண்ணிய செயல்தான் மீலாது விழாவென்றும் அதன் குணம் அவர்களில் (அதை செயல்படுத்துபவர்களில்) வெளிப்படு மென்றும் ஷஹிஹ் புகாரியின் விரிவுரையாளர் இமாம் கஸ்தல்லானி (ரலி) அவர்கள் தன்னுடைய அல் மவாஹிதுல்லதுன்னியா என்ற நூலில் சொல்லியுள்ளார்கள்.

7. யாராவது திருநபி (ஸல்) அவர்களுடைய மவ்லித் ஓதக் கூடிய மவ்லித் மஜ்லிஸில் அமர்ந்து அதன் மகத்துவத்தை உட்கொள்ளவும் செய்தால் அவன் ஈமானோடு அல்லாமல் மரணிக்க மாட்டான் என்று ஜுனைதுல் பக்தாதி (ரலி) சொல்லியுள்ளார்கள். (இஆனத் 3/365 அந்நிஃமத்துல் குப்றா பக்கம் -6)

8. பழைய வஹாபிகளின் முன்கால வெளியீடுகளான அல்இர்ஷாத், அல்முர்ஷித், அல்மனார் போன்ற நூல்களிலும் மீலாது விழா கொண்டாடலாமென சொல்லியுள்ளார்கள்.

9. மீலாது விழா, மவ்லித் மஜ்லிலிஸ் போன்றவை நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இல்லையென்றும் இது தவறெனென்றும் சொல்லுகின்ற வஹாபிகளின் அறிவுக் கூட மீலாது விழா கொண்டாடலாமென சொன்ன இமாம்களுக்கு இல்லையா?

10. பூர்வ காலம் முதல் மிக விமரிசையாக நடந்து வரும் மீலாது விழாக்கள் பித்அத்தாக இருந்தால் லட்சக்கணக்கான மார்க்க அறிஞர்கள் இந்த பித்அத்துக்கெதிராக ஒன்றும் பேசவில்லையென்று சொல்கிறீர்களா?

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம். 7598769505, 7200977182, 9894710696