மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 4

மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 4

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்லாஹ்வின் பேரன்பைப் பெறும் நோக்கத்துடன் யாருடன் நேசம் கொள்ள வேண்டும்? நேசம் கொள்ளத் தகுதியுடையோர் யார்?

வெளியீடு எண் = 4

1. இணையும், துணையும் உருவமும் அற்ற ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு, கால்கள் உண்டு, அமர்ந்திருக்க இடம் உண்டு எனக் கூறி அல்லாஹ்வுக்கு உருவம் இடமும் கற்பித்து வழிகேட்டிற்கு பாதை அமைப்பவர்களுடனா?

2. பேரிறையோன் அல்லாஹ்வின் பேரன்பிற்குப் பாத்திரமான நபி (ஸல்) அவர்களை 'நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான்' என்று தரக் குறைவாக மதிப்பிடுவர்களுடனா?

3. நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் பாவம் செய்வர் என்று சொல்லி நடப்பவர்களுடனா?

4. சுவனத்திற்குரிய பெருமக்கள்' என்றும் என்னுடையை தோழர்களை பின்பற்றினால் வழிதவற மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்களின் அமுத வாயால் அடையாளப்படுத்தப் பெற்ற கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களின் வழிகாட்டுதல்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று திமிராக கூறுபவர்களுடனா?

5. நபி (ஸல்) அவர்களால் சிறப்பான நூற்றாண்டுகளை சார்ந்தவர்கள் என வாழ்த்தப் பெற்ற இமாம்களை கொச்சைப்படுத்துபவர்களுடனா?

6. அல்லாஹ்வின் நேசர்கள் மீது புழுதி வாரி தூற்றுபவர்களுடனா?

7. நல்லவர்களின் வாழ்வில் குறைகள் தென்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வதில் தமது நேரத்தையும், உழைப்பையும், ஆற்றலையும் செலவிடுபவர்களுடனா?

8. நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள பேரன்பை நேசத்தை, பெருமதிப்பை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் பிறந்த தினத்தில் அன்னாரது புகழ் பாடுவோரை, திருக்குர்ஆன் ஓதுவோரை, அன்னதானம் வழங்குவோரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்பவர்களுடனா?

9. முத்ரிக்குகள், கப்ர் வணங்கிகள் என முஸ்லிம்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துபவர்களுடனா?

10. தம்முடைய கொள்கைகளை ஏற்காதவர்களை காபீர்கள், முஷ்ரிக்குகள் என வசை பாடுபவர்களுடனா?

இல்லை, இல்லை, ஒருபோதும் இல்லை

சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம்.

7598769505, 7200977182, 9894710696