மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 10
வெளியீடு எண் = 10
மவ்லிதும், மீலாது விழாக்களும் ஸஹாபாக்கள் செய்யாத செயல் என்ற வாதம் முன்வைக்கப்படுமானால் .....
1. ஸஹாபாக்கள் கொள்கைப் பிரச்சாரத்திற்காக பிரமாண்டமான அலங்கார பந்தல்கள் போட்டு பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்தினார்களா?
2. ஆண்களையும், பெண்களையும் ஒன்றாக மேடைகளில் அருகருகே அமர வைத்து ஏகத்துவப் பிரச்சாரம் (?) மேற்கொண்டார்களா?
3. மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் வெளிநாடு களிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் பண வசூல் செய்தார்களா?
4. வசூல் செய்த பணத்தை பங்கு வைப்பதில் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் சேறு வாரி இறைத்து முட்டி மோதிக்கொண்டு. தனித்தனி அமைப்புகள் தொடங்கினார்களா?
5. தமக்கு பிடிக்காதவர்களை வாய்க்கு வந்தபடி திட்டினார்களா? தூற்றினார்களா?
6. பள்ளி வாசல்கள் என்ற பெயரில் தனித்தனி கட்டிடங்கள் கட்டி சமுதாயத்தில் பிளவையும், ஒற்றுமையின்மையும் விதைத்தார்களா?
7. செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக அடிக்கடி போராட்டங்கள் என்ற பெயரில் ஆண்களுடன் பெண்களையும் தெருவுக்குக் கொண்டு வந்து கோஷம் போட வைத்தார்களா?
8. முக்கியம் வாய்ந்த மருத்துவர்களை அழைத்து வந்து இலவச மருத்துவ முகாம்களை சஹாபாக்கள் நடத்தினார்களா ? இரத்த தானம் வழங்கினார்களா? ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கினார்களா ?
9. நபி வழி ஜும்ஆ என்று பெயர் வைத்து வீட்டின் மொட்டைமாடிகளில் ஜூம்ஆ தொழுகை நடத்தினார்களா ?
10. முகநூல், வாட்சப், டிவிட்டர், வலைபூக்கள் போன்ற சமூக ஊடகங்களை தாவா பணிக்கு சஹாபாக்கள் பயன்படுத்தினார்களா ?
11. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற பெயரில் மாற்று மத நண்பர்களை அழைத்து வந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகளை சஹாபாக்கள் நடத்தினார்களா ?
12. கள்ள ஐடிகளை களத்தில் இறக்கி பிற குடும்ப பெண்களின் மானத்தில் விளையாடினார்களா ?
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம். 7598769505, 7200977182, 9894710696