மீலாத் மல்லித் குறிப்பேடுகள் பாகம் 9
வெளியீடு எண் = 8
நபி (ஸல்) அவர்கள் சன்னிதானத்தில் மவ்லிதை ஓதி சமர்ப்பித்த ஸஹாபாக்களில் மிக பிரபலமான பத்து நபர்கள்
1. ஹஜ்ரத் அம்ரு இப்னு மஃதிகர்ப் (ரலி)
(ஹிஜ்ரி 6. கி.பி. 627)
2. ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
(ஹிஜ்ரி 8. கி.பி. 629)
3.ஹஜ்ரத் அர்வா பின்து அப்துல் முத்தலிப் (ரலி)
(ஹிஜ்ரி 15. கி.பி. 636)
4. ஹஜ்ரத் அப்பாஸ் இப்னு மிர்தாஸ் (ரலி)
(ஹிஜ்ரி 18. கி.பி. 639)
5. ஹஜ்ரத் கஅப் இப்னு ஸுஹைர் (ரலி)
(ஹிஜ்ரி 24. கி.பி. 644)
6.ஹஜ்ரத் அபூ தர்தா அல் அன்ஸாரி (ரலி)
(ஹிஜ்ரி 32. கி.பி. 652)
7. ஹஜ்ரத் லபித் இப்னு ராபிஆ (ரலி) (ஹிஜ்ரி 41. கி.பி. 661)
8. ஹஜ்ரத் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) (ஹிஜ்ரி 55. கி.பி. 674)
9. ஹஜ்ரத் நாபிஃகா அல்ஜூஃதி (ரலி) (ஹிஜ்ரி 65. கி.பி. 684)
10. ஹஜ்ரத் அதிய்யி இப்னு ஹாதிம்தாய் (ரலி) (ஹிஜ்ரி 68. கி.பி. 687)
மீலாது விழாக்கள் கூடாது. நாயகம் (ஸல்) மீது புகழ் மாலை பாடக்கூடாது என்று கூச்சலிடும் வஹாபிகளே ! நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே 56-க்கும் மேற்பட்ட புலவர்கள் மவ்லித்களை கோர்வை செய்து திரு நபி (ஸல்) அவர்கள் சன்னிதானத்தில் ஓதி காண்பித்து அவர்களின் ஒப்புதலை பெற்றது பற்றி இப்னு ஹிஷாம் தனது சீரத்துன் நபியிலும், இப்னு இஸ்ஹாக் தனது ஸீரத்து ரஸுலுல்லாஹ் என்ற நூலிலும் அபுல்ஃபரஜுல் இஸ்பஹானி கிதாபுல் அகானி என்ற நூலிலும் எழுதியுள்ளார்கள். இவர்கள் மூவரும் தாபியீன்கள் ஆவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா (யஸ்ரிப்) நகருக்குள் நுழைந்தபோது ஊர்மக்கள் "தல அல் பத்ரு அலைனா" என்ற புகழ் பாக்களை பாடி நபி (ஸல்) அவர்களை வரவேற்றதை நபி(ஸல்) அவர்களும் ஸெய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்களும் ஸெய்யிதினா அலி (ரலி) அவர்களும் மகிழ்ச்சியுடன் ஆமோதித்தும் சாதாரணமுஸ்லிமுக்கு தெரிந்த ஒன்று. அப்போது ஹலாலாக இருந்த மவ்லித் பாடல் இப்போது ஹராமாகி விட்டதா?
மவ்லிதுகளுக்கெல்லாம் தலை சிறந்ததும் பெருமானார் சன்னிதானத்தில் பாடப்பட்டு அவர்களின் பொன்னாடையை பரிசாக பெற்றுக்கொள்வதற்கு தகுதியானதுமான 'பானத் ஸுஆது" என்ற மவ்லித் காப்பியம் இந்த குருட்டு வஹாபிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
இதுபோலவே ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலி) மதீனா நகர பள்ளிவாசலுக்குள்ளேயே மேடை அமைத்து மவ்லித் (புகழ்மாலை) ஓத செய்ததும் "யா அல்லாஹ் ஹஸ்ஸானுக்கு எல்லாவிதமான வலிமையையும் கொடு" என்ற கருத்தில் துஆ செய்ததும் எல்லா ஹதீது கிதாபுகளிலும் வருகிறதே இதை ஏன் வஹாபிகள் பொதுமக்களிடத்தில் சொல்லாமல் மறைக்கிறார்கள் !
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு (SSF) குமரிமாவட்டம். 7598769505, 7200977182, 9894710696