பயான் குறிப்புகளை உலமாக்களுக்கு அள்ளி வழங்கும் உஸ்மானி
பயான் குறிப்புகளை உலமாக்களுக்கு
அள்ளித்தரும் உஸ்மானி....
இது எமது அன்பு நண்பர்
பஷீர் அஹ்மத் உஸ்மானி
ஹழ்ரத் அவர்கள்..
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்.
எங்களது மாவட்டத்தின்
(குமரி மாவட்டம்) ஆளூர்,
வடசேரி, பெருவிளை போன்ற ஊர்களில் பல வருடங்கள் மார்க்க பணியாற்றியவர்கள்..
சிறந்த சிந்தனையாளர், அற்புதமான எழுத்தாளர், அரபி மொழியில் மிகுந்த புலமைப் பெற்றவர்..
https://vellimedaiplus.blogspot.com/?m=1
எனும் வலைப்பூவில் ஜும்ஆ பயான் குறிப்புகளை வாராவாரம் கட்டுரையாக உலமா சமூகத்திற்கு தந்து கொண்டு இருப்பவர்...
மாஷா அல்லாஹ்..
அவர்கள் வாரந்தோறும் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு கட்டுரையிலும்
எத்தனை தகவல்கள்
எத்தனை செய்திகள்
எத்தனை வரலாறுகள்..
எவ்வளவு குர்ஆன் வசனங்கள்
எவ்வளவு ஹதீஸ்கள்
எவ்வளவு சரித்திரங்கள் புதைந்து இருக்கிறது...
ஒரு பெரும் ஞானப் புதையல்களை பெரும் ரிஸ்க் எடுத்துக் கொண்டு வாரந்தோறும் உலமாக்களுக்கு
அள்ளித் தருகிறார்..
இவர்களது பயான் குறிப்பை வாசித்து குறிப்பெடுத்து நாம் சென்று பயான் செய்தால் மக்கள் ஒருபோதும் குறை சொல்ல மாட்டார்கள்...
காரணம் அந்த அளவுக்கு விஷயங்கள்
அந்த பயானில் அடங்கியிருக்கும்..
எல்லா நபர்களும்
(ஆலிம்களும், பொதுமக்களும்) வாசிக்கும் படியாக அவர் தனது கட்டுரையை வடிவமைப்பு செய்திருப்பார்..
குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாறுகள் போன்றவையை
அரபியில் கொண்டு வந்தாலும் அதற்கான தமிழாக்கத்தை கீழே தந்திருப்பார்.
அவர்களது Vellmedai plus
தளத்தை இது வரை பார்வையிட்டவர்கள் எண்ணிக்கை முப்பத்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்து எழுநூற்றி ஐம்பது பேர்கள்.
2013 ல் துவங்கி இது வரை 436 தலைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்காலத்தில் நடந்துக் கொண்டு இருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அவரது பயான் குறிப்பில் அதிகமாக பார்க்க முடியும்...
சமீபத்திய ஃபர்ஹானா புர்கா தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து
இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார்..
https://vellimedaiplus.blogspot.com/2023/05/blog-post.html?m=1
முஸ்லிம் விரோதப் போக்கை கடைபிடிக்கும் சினிமா ஊடகம்.
https://vellimedaiplus.blogspot.com/2023/05/blog-post_4.html?m=1
சினிமா ஊடகம் கால் பதிக்குமா இஸ்லாமிய சமூகம்?
உலமாக்கள் இதுபோன்றவர்களின் ஜும்ஆ பயான் குறிப்பை படித்து, குறிப்புகள் எடுத்துச் சென்று பயான் செய்தால்
எவரும் நம் பயானை உப்பு சப்பு இல்லாமல் இருக்கிறது என்று குறைச்சொல்லி நடக்க மாட்டார்கள்...
எனக்கு தெரிந்து பத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் வாரந்தோறும் நல்ல அற்புதமான பயான் குறிப்புகளை வெளியிடுகிறார்கள்..
ஏராளமான உலமாக்கள் அதை வாசிக்கிறார்கள், அதிலிருந்து குறிப்பெடுத்து பயானும் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை..
ஆனால் சிலரது பயானை வைத்து மொத்த உலமாக்களையும் எடை போடுவது நல்லதல்ல..
பஷீர் உஸ்மானி ஹஸ்ரத் அவர்களது
சில பயான் குறிப்புகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவிலும் வந்துள்ளது..
சில நேரங்களில் இந்த தகவல்கள் அனைத்தும் எங்கிருந்து தான் எடுக்கிறாரோ என்று நினைத்து
நமக்கே ஆச்சரியமாக இருக்கும்..
ரமளான் மாதத்தில் பல இடங்களிலும் தினமும் தராவீஹ் தொழுகைக்கு பின்னர் பயான் நடைபெறுவது வழக்கம்...
அப்படி பயான் செய்வோருக்கும் தேவையான பயான் குறிப்பை ரமளான் மாதத்தில் தினமும் வழங்குகிறார்..
தனது பயான் நன்றாக இருக்க வேண்டும்..
வாரத்தில் ஒரு முறை எனது முன் தோன்றும் திரளான மக்கள் சமூகத்திற்கு நல்ல மெசேஜ்களை எத்தி வைக்க வேண்டும் என்று நாடுபவர்கள் ஹஸ்ரத் அவர்களின் பயான் குறிப்புகளை வாசித்து பார்ப்பது நல்லது..
வல்லோன் அல்லாஹ் ஹஸ்ரத் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நிறைவான ஆரோக்கியத்தையும், மேன்மேலும் கல்வி ஞானத்தில் அபிவிருத்தி யும் வழங்கியருள் புரிவானாக ஆமீன் யா றப்பல் ஆலமீன். .
என்றும் அன்புடன்
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி