இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி
இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி..
வெறுப்பையும்_வெறியையும் போதிக்கும்_யுகத்தில்
நல்லிணக்கத்தின்_ஊற்று......
மனம்_குளிர்ந்த_அரிய_தருணம்.
✍️ விவேக்.
திருக்காகரை.
கேரளா......
தமிழில்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி
நான் விவேக்_பேசுகிறேன்
சில நாட்களுக்கு முன்பு நானும் எனது மூன்று நண்பர்களும் எங்களது நண்பர் #ராஜீவின் திருமணத்தில் கலந்து கொள்ள பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் #நெல்லியாம்பதிக்கு சென்றோம்..
திருமணம் அங்கே இருக்கும் எஸ்டேட்டில் உள்ள பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.
நாங்கள் அங்கு சென்றடைந்த போது சுமார் ஒரு10 மணி இருக்கும்.
அந்நேரம் மக்கள் வந்துகொண்டிருந்தனர்.
மனதைக் கவரும் அழகிய காட்சிகளைத் தான் அங்கு நாங்கள் முடிந்தது...
மணமகனும், மணமகளும் சிலருடன் சேர்ந்து அருகில் உள்ள கோயிலுக்கு தாலி கட்ட சென்றனர்.
இவ்வேளையில் திருமண வைபவத்திற்கு பள்ளிவாசலுக்கு வருபவர்களை வரவேற்கும் பணியில் குடும்பத்தினருடன் உஸ்தாத் மற்றும் பள்ளி வாசல் கமிட்டியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இதற்கிடையே மாப்பிள்ளையின் தந்தை #சந்திரசேகரன் சேட்டன் யாரையோ எதிர்பார்த்து காத்து அங்கும் இங்குமாக நடக்கிறார். அவ்வப்போது உஸ்தாத் மற்றும் கமிட்டி உறுப்பினர்களிடம் ஏதோ பேசுகின்றார்..
சுமார் 11 மணி அளவில் இன்னோவா காரை தூரத்தில் பார்த்த சந்திரசேகரன் சேட்டனின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.. கார் எங்கள் முன் நின்றதும் பளபளப்பான வெள்ளை நிற உடை அணிந்த ஒரு இஸ்லாமிய அறிஞர் சிரித்துக்கொண்டே வாகனத்தை விட்டு இறங்கி வந்து சந்திரசேகரன் சேட்டனை கட்டி அணைத்துக் கொண்டார்.
எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.அதை விட இந்த நபர் யார் என்று அறிய நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம்.
சந்திரசேகரன் சேட்டனின் அருகில் நின்றிருந்த எங்களை கைகுலுக்கிவிட்டு சந்திர சேகரன் சேட்டனின் கையைப் பிடித்துக்கொண்டு அங்குள்ள பள்ளிவாசல் உஸ்தாதுடைய அறைக்குச் சென்றார்.
வந்த நபரை குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டோம்
அவர்களின் பதிலைக் கேட்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம்..
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பள்ளிவாசலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிற கூட்டு பிரார்த்தனையை தலைமையேற்று நடத்த வருகிற
அறிஞர் தான் இவர்.
மேலும் அவரது நிகழ்வுகளில் ஜாதி,
மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்பார்கள்.
அவரது பிரார்த்தனையை எதிர்பார்த்து வெகு தொலைவில் இருந்தும் கூட மக்கள் வருகிறார்கள்.
இங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் அவரை மிகவும் மதிக்கிறார்கள் என்றும் கூறினர்..
மேலும் அவர் குறித்த தகவல்களை கேட்ட நேரத்தில் அந்த அறிஞர் லட்சத்தீவைச் சேர்ந்தவர் எனவும், அவர் திருச்சூர் மாவட்டத்தில் பெரிய இஸ்லாமிய ஸ்தாபனம் நடத்தி வருகிறார் என்பதும், தான் படுபிஸியாக இருந்தபோதும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மட்டுமே இங்கு வந்திருப்பது தெரிந்ததும்
சிறு குழந்தைகளின் மனங்களில் வெறுப்பின், மத வெறியின் விஷத்தை விதைக்கும் இந்தக் காலத்தில் இந்த அபூர்வ காட்சி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
சிறிது நேரம் கழித்து, மணமகன், மணமகள் மற்றும் பலர் கோவிலில் திரும்பி இருந்து வந்தனர்.
உடனே அந்த இஸ்லாமிய அறிஞர் இறங்கி வந்து மணமகன் ராஜீவை வரவேற்று, அவரது தலையில் கைகளை வைத்து பிரார்த்தனை செய்து அவரை ஆசீர்வதித்தார்.
அதற்குள் கோவிலில் இருந்து பூசாரியும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிவாசலை அடைந்தார்.
பூசாரியும், உஸ்தாதும் கைகுலுக்கிக்கொண்டதை பார்த்ததும் நான் கேரளாவில் பிறந்ததை நினைத்து பெருமை பட்டேன்...
இது போல் நம் மண்ணில் ஒற்றுமையும் அமைதியும் என்றென்றும் நிலவட்டும் என்று #ஜெகதீஸ்வரரை மனதார வேண்டிக்கொண்டு நெல்லியம்பதி எனும் இயற்கை எழில் நிறைந்த மண்ணில் வாழும் அனைத்து சாதி, மதத்தினருக்கும் அனைத்து விதமான நலவுகளும் என்றும் நிலவட்டும் என வேண்டுகிறேன்..
அந்த அழகான தருணத்தில் நாங்கள் பிடித்த படங்களையும் நீங்கள் பார்க்கலாம்.