ஆசிரியம் எனும் ஆச்சரியம்
யார் இந்த இந்தியன் கிராண்ட் முஃப்தி
AP. அபுபக்கர் பாகவி ஹஸ்ரத் அவர்கள்...?
செப்டம்பர் _5
ஆசிரியர்_தினம்
அரை நூற்றாண்டுக்கும் மேலாக,பல்லாயிரக்கணக்கானோருக்கு #கல்வி வழங்கியவர்...
இந்திய முழுவதும் எண்ணிலடங்கா #கல்வி ஸ்தாபனங்களை உருவாக்கியவர்.
ஆதரவற்ற, ஏழை எளிய மக்களின் கல்விப் பசியை போக்கியவர்..
அனாதை மக்களை தன் சொந்த பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு எல்லா விதமான #வசதிகளையும் வழங்கியவர்.
குமரி_முதல்_காஷ்மீர் வரை பல்லாயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை இந்திய நாட்டிற்கு அர்ப்பணித்தவர்கள்.
MARKAZ KNOWLEDGE CITY எனும் மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்.
இஸ்லாமிய நெறிமுறையில் பெண்களுக்கான #கல்விப் பாதையை உருவாக்கியவர்.
நிர்கதியாக தவித்து கொண்டிருந்த காஷ்மீர் குழந்தைகளை கேரளாவுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கல்வி ஞானம் புகட்டி சிறந்த அறிஞர்களாக மாற்றியவர்.
பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப், அஸ்ஸாம், குஜராத், போன்ற பல மாநிலங்களில் ஸ்தாபனங்களை
உருவாக்கி, கல்வி வழங்கி நாளைய நல்ல தலைமுறையை உருவாக்கிக் கொண்டிப்பவர்.
கேரள வரலாற்றில் இவரைப் போன்ற கல்வி புரட்சி ஏற்படுத்திய இஸ்லாமிய அறிஞரை பார்ப்பது கடினம்..
அஹ்லுஸ்ஸுன்னாவின் ஆன்மீகப் பாதையில் இலட்சோப இலட்ச
மக்களை வழிநடத்தும்
சுல்தானுல் உலமா A.P.அபூபக்கர்
பாகவி ஹஸ்ரத் அவர்களுக்கு
அல்லாஹ் நீண்ட ஆயுளை
வழங்கி நல்லருள் புரிவானாக!!!..