சமாதானம் தேடுபவர்கள் நபியை அனுகட்டும்

சமாதானம் தேடுபவர்கள் நபியை அனுகட்டும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

சமாதானம் தேடுபவர்கள்
நபியை அனுகட்டும்.

தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்ற ஒரு மனிதனைப் போல உலகம் இன்று சமாதானம் என்ற தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றது.
தினம் தோறும் கையில் ஏந்துகின்ற பத்திரிக்கையின் முதல் செய்தியே,
குண்டு வெடிப்பு,
தாக்குதல், கொலை,
கொள்ளை கற்பழிப்பு சமாதானம் பறிபோகின்ற அவல நிலை,நம் முன்னோர்கள் அறிந்திராத பல செய்திகள் பல சுகங்களை நாம் இன்று அறிகிறோம். அனுபவிக்கிறோம் என்றாலும் எனக்கு என்னுடைய காரியம்; மற்றவர்களுக்கு அவர்களுடைய காரியம்
என ஒரு முழு சுயநலவாதிகளாக மாறியிருக்கிறோம்.

சமூகத்தின் மத்தியில் இறங்கி செல்வதில்லை,
அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்வதில்லை; அவர்களுடைய கண்ணீருக்கு விலை கொடுப்பதில்லை; இறைவன் மனிதனை மற்ற படைப்புகளைவிட
கண்ணியப்படுத்தினான்
ஆனால், ஆனால் மனிதனோ மனிதனை இழிவுபடுத்தி அவனுடைய சொத்துக்களை சூறையாடி,
அவனுடைய உயிரை பறித்து செல்கிறான் என்றால் நாம் எங்கு போய் கொண்டிருக்கிறோம்
என்று சிந்தியுங்கள்.

மனித உரிமைகள் காக்கப்பட்டு, நீதி நிலை நாட்டப்பட்டு சமாதானம் உயிரோட்டப்படுமேயானால் மட்டுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக அமையும்.
மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக உலகில் வாழ்ந்த பல அறிவுஜீவிகள் பலவிதமான சட்டங்களை இயற்றி அதன்படி நடந்து கொள்ளுங்கள் என்றபோது காலங்கள் பல கடந்து சென்றான் மக்களின் வாழ்வு மட்டும் முன்னேற்றம் அடைந்ததா? அல்ல.
அந்த சட்டங்கள் தான்
இன்று நிலவில் உள்ளதா?

ஒன்று புரிந்து கொள்ளுங்கள்
மனிதன் என்பவன் பலவீனமானவன் மாமறையில் இறைவன் குறிப்பிடுகிறான்.

خلق الانسان ضعيفا

மனிதன் பலகீனமானவனாக படைக்கப்பட்டிருக்கிறான்".

வேறு ஒரு இடத்தில்
وما اوتيم من العلم الا قليلا

கல்வியிருந்து கொஞ்சத்தையே நாம் அவனுக்கு கொடுத்திருக்கிறோம் என்கிறான் இறைவன்.
மனிதன் உண்டாக்குகின்ற
சட்டங்கள் நாளுக்கு நாள், இடத்துக்கு இடம்,
நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருக்கும் ஆனால் அல்லாஹ்வின் சட்டம் அது எப்போதும் எங்கும் நிலையானதாக உறுதி வாய்ந்ததாக இருந்து கொண்டிருக்கும்.
நம்வாழ்வில் இன்று காணப்படுகின்ற எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தலையாயக் காரணம் இறைவனின் பாதையை
விட்டு அகன்றது...

ரசூலின் சொல்லைவிட்டு தடம்புரண்டு மாற்றார்களின் கருத்துகளுக்கு முக்கியம் கொடுத்தது ரசூலை முறையாக புரியாமல் விட்டுவிட்டது என்று உறுதியாக கூறலாம்.

நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு இறைவனின் பக்கமும் அவனின் தூதரின் பக்கமும்தான் இருக்கிறது.
அருள் மறையாம் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

وان تنازعتم في الشيء فردوه إلى الله ورسوله

நீங்கள் ஏதாவது விஷயத்தில் தர்க்கித்து கொண்டால் நீங்கள் இறைவனின் பக்கமும் அவனின் தூதரின் பக்கமும் திரும்புங்கள்."

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமென்றால் நாம் பின் தொடர வேண்டியது மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரயோ அல்லது நடிகையையோ அல்லது இன்று நீதியிழந்து வாழ்கின்ற அரசியல் வாதிகளையோ
அல்லது பண வசதியுடையவர்களையோ அல்லது நவீனவாதிகளையோ அல்ல.
நாம் பின் தொடர வேண்டியது
அருங் குணச் செம்மல், அனைத்துலகத்தின் அருட்கொடை,
இறைவனின் புதுமை நூலினால் மனித மணிகளை மாண்புற கோத்த முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைமறையாம் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்.

هو الذي بعث في الاميين رسولا منهم يتلوا عليهم آيته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وان كانوا من قبل لفي ضلال مبين

எழுத்தறிவில்லாத (அரபி)
ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை (தேர்ந்தெடுத்து) அவன் அனுப்பி வைத்தான் அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும் அவர் வசனங்களை ஓதி காண்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்று
கொடுக்கின்றார். (62-2)

நமக்கு நம்முடைய ரசூலின் சொல்களும் செயல்களும் தான் அழகு, அதைவிட ஒரு ஒழுக்கமுள்ள, மாண்புள்ள மனிதனை வேறு எங்கு பார்க்கவும். கேட்கவும் முடியாது நம் முன்னோர்கள் அல்லாஹ்வை பயந்தார்கள் ரசூலுல்லாஹ்வை புரிந்து கொண்டார்கள் எனவே அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனையில்லாமல்
கழிந்து போயின.

இன்று வந்த சில நவீனவாதிகள் சொல்வது என்ன? குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப்பற்றியும், ஆய்வு செய்வதில் தவறில்லை. இஜ்திஹாதின் வாசல் மூடப்படவில்லை.
யாருக்கும் குர்ஆனிலும் ஹதீஸிலும் மஸ்அலாகள் தேடிப்பிடிக்கலாம்.
அது தவறில்லை!
இதுமட்டுமா முன்னோர்களை பின்தொடருவது நமக்கு தேவையில்லை..
மத்ஹபுகளின் பெயரால் அவர்கள் எழுதி வைத்தது அனைத்துமே பொய்கள்,
அவர்களின் சொந்தக் கருத்துகள். என்று கூறுகின்றனர்.
ஆதலால் இதுபோன்ற நவீனவாதிகளை பின்தொடரக்கூடாது ஏனென்றால் இவர்கள் நபியை சாதாரண மனிதனாகவும் தினமும் 100 தடவை பாவம் செய்பவர்களாகவும் கருதுகிறார்கள்.
எனவே இவர்களின் பக்கம் தலை வைத்தும் படுக்கக்கூடாது.

அருமை மழலைகளுக்கு கண்மணி நாயகத்தின் வாழ்க்கைப்பற்றியும் பண்பை பற்றியும் சொல்லிக் கொடுத்து. அவர்களை சுன்னத்துகளை பேணி நடப்பவர்களாக
நாம் ஆக்க வேண்டும் வருங்காலத்தில் ஒற்றுமையுள்ள பண்பாடுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால்
இது கட்டாயக்கடமை என்பதை விஷயமறிந்தவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பலவிதமான பாட்டுக்களையும், கதைகளையும் அறிகின்ற குழந்தைகளுக்கு மௌலிது வரிகள் நுழைவதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.
மௌலீது ஷிர்க்காக வஹாபிகள் சித்தரித்தது மூலம் இப்படி ஆனதோ? என்று தெரியவில்லை..
நாம் மௌலிது ஓதும்போது
நம் குழந்தைகளையும் நம் பக்கத்தில் இருக்க செய்ய வேண்டும் அப்போது மௌலீதின் வரிகள் அவர்களுடைய இதயத்தில் தட்டி அழுத்தமாக அங்கு பதிந்து கொள்கின்றன.

அன்புச் செய்கின்ற மனிதனும் அன்பு செய்யப்படுகின்ற மனிதனுக்கும் மத்தியில் ஏற்படுகின்ற உறவு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆகலாம்.
உடல் ரீதியாக ஏற்படுகின்ற உறவு உலக வாழ்க்கையோடு அது முடிந்துவிடுகிறது ஆன்மீகமாக ஏற்படுகின்ற உறவு அதற்கு ஒரு வரம்பு சொல்வது கடினம்
அன்பு என்ற சொல் விதவித அர்த்தங்களில் உபயோகிக்கப்படுகிறது பல மனிதர்களையும் நாம் அன்பு செய்கிறோம் என்றாலும் நபியை அன்பு செய்வது என்பது அவர்களை புரிந்து அவர்களைப் பற்றி பிடித்து அது ஒரு இயற்கையான முறையில் ஏற்படுகிறது.

நண்பர்கள் உறவினர்கள் தாய்தந்தையர்கள் மனைவிமக்கள் போன்றவர்களோடு ஏற்படுகின்ற அன்பு உடல்ரீதியான அடிப்படையில் ஏற்படுகின்ற அன்பு மட்டுமாகும்.
நபிமீதும் நபியின் தோழர்கள் மீதும் ஏற்படுகின்ற அன்பு விசுவாசத்தால் உண்டாகுவதாகும் அதற்கு கூடுதல் சக்தி உண்டு என்பது உண்மையாகும்.
பிற மனிதர்களைவிட நபியை அன்பு செலுத்துவதின் நோக்கம் என்ன? அதனுடைய காரணம் என்ன? அதைப்பற்றி சற்று ஆராய்வோம்.

M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
குமரி மாவட்டம்...